முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

மனித அலட்சியம் அல்ல. இது விபத்து.

மிகுந்த வருத்தத்துடனும் அதற்குச் சமமான கோபத்துடனும் இதை எழுதுகிறேன். தேனியில் மலையேறப் போய் காட்டுத்தீயில் பலியான உயிர்கள் சகோதர சகோதரிகளின் இழப்பாகவே வலிக்கிறது. அந்த வலியின் மேல் நெருப்பை அள்ளி ஊற்றுவது போல ஊடகங்களும் பொதுஜனமும் CTCஐப் பலிகடாவாக்குவது அருவருப்பூட்டுகிறது.
ஒரு மலையேற்றம் எப்படிப்பட்ட சவால் என்பதைப் பல முறை உணர்ந்து தெளிந்தவன் நான். Chennai Trekking Club (CTC) எப்படிப்பட்ட அமைப்பு என்பதை நேரில் உணர்ந்தவன் நான். என்னைப் போலவே இவற்றை உணர்ந்தறிந்த சகோதர சகோதரிகளின் சார்பாக இதை எழுதுகிறேன். 
மலை ஏறுபவர்களில் இரண்டு வகையினரைப் பார்த்திருக்கிறேன். ஒரு மலை உச்சியைத் தொட்டதும் இந்த மலையே என் காலுக்குக் கீழே என்று இயற்கையை வென்றதாக உணர்பவர்கள் ஒரு வகை. அதே மலை உச்சியைத் தொட்டதும் அதன் மடியில் விழுந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி சொல்லி மண்டியிடுபவர்கள் மற்றொரு வகை. முதல் வகையினர் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். இரண்டு மூன்று அனுபவங்களில் இயற்கை அவர்களுக்குப் பாடம் புகட்டி இரண்டாம் வகைக்கு மாற்றிவிடும் அல்லது தன்னோடே எடுத்துக்கொள்ளும்…

சமீபத்திய இடுகைகள்

பைத்தியக்காரர்களை வாழவிடுங்கள்

மனைவியைக் காதலிக்காதவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்

எழுத்தறிவிப்பவன் அல்ல இறைவன்

5 - மனைவி அமைவதெல்லாம்... - #முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல்

நீரின்றி அமையாது உலகு

4 - யார் அவள்? - #முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல்

3 - இலக்கியம் - #முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல்

2 - பயணம் - #முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல்

முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல் - 1 - பணம்

கவிதை மட்டும்

வட்டம்