கவிதை மட்டும்
எல்லோரும்
காதலிக்கத் துவங்கியதும்
கவிதை துவங்குவர்.
நான்
கலியாணம் கட்டியபின்
கவிஞனாக முடிவெடுத்திருக்கிறேன்.
பி.கு
முன்பு சிறுகதை எழுதிக் கொண்டிருந்தேன்.
தினமும்
முட்டை பரோட்டாவிலே வாழும்
மொட்டைப் பயலாய்த் திரிந்த காலம்
கதை எழுதத் தோதாய் இருந்தது.
புதினம் எழுதக் கூட
ஆசை இருந்தது.
கலியாணம் ஆனதும்
நேரத்தை
நூறு ரூபாய்த் தாள் போலப்
பார்த்துப் பார்த்துச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
இல்லறத்தில்
காதல்
வேண்டியதாய் இருக்கிறது.
தினசரி பாத்திரம் கழுவவும்
வேண்டியதாய் இருக்கிறது.
சொல்லி விடும் வார்த்தைகளை விடவும்
சொல்லாமல் விடும் வார்த்தைகளில் தான்
அர்த்தம் கனத்திருக்கிறது.
கவிதை போலவே!
ஆதலால்...
-மதி
அனுபம் பேசும் கவிதை.
பதிலளிநீக்கு