வகைப்பாடு
மூன்று வகையினர் தான் மக்கள்.
ரயிலில்
படிக்கட்டில் தொற்றிக் கொள்வோர்
வாசலருகே நெரிசலில் பிதுங்குவோர்
கொஞ்சம் உள்ளே
மூச்சு விடும் இடைவெளி உடையோர்.
வாழ்வில்
நுழையவும் இல்லாத விடலையர்
வீட்டுக் கடனுக்குத் தவணை கட்டுவோர்
கொஞ்சம் விலகி
பொன் செய்யும் மருந்துண்டோர்.
-மதி
(புகைப்படம் தந்து உதவியவர் : Simply CVR)
வாவ்
பதிலளிநீக்கு