கால்களே ! உமக்கு நன்றி


இருவேறு பாதைகள்
இதோ என் கண் முன்னால்.
எந்தப் பாதையில் பயணம்?
என் மனதில் சலனம்.
இரண்டையும் கண்களால் அலசினேன்
முதல் பாதையில் வளர்ந்துள்ள புற்கள்
பாதங்களில் மிதிபட்டு
பாவமாய் இருந்தன.
இரண்டாவது பாதை
பசுமையாய் இருந்தது.
சுவடுகள் எதுவும்
சுலபமாய்த் தென்படவில்லை.
இளமை
என்னை இரண்டாவது பாதையில்
பயணிக்கத் தூண்டியது.
கால்கள் நடக்கத் துவங்கின....

யாருமற்ற பாதையில்
தனிமையில் நான்
தனிமை வினவியது,
"பாதை மாறி விட்டதோ?"

எண்ணம் ஏங்கினது
அந்த முதல் பாதைக்கு.
கால்கள் சொல்லின,
"வேறொரு நாள்
அதையும் பார்ப்போம்"
திருவிழாவில்
பொம்மை கேட்ட குழந்தையிடம்
கூறப்படுவது போல.

எண்ணம் எதுவும் பேசாமல்
பின்தொடர்ந்தது
குழந்தை போல.
இன்று ....
உலகம்
என்னைக் கொஞ்சம் தனித்தன்மையோடு காண்கிறது.

கால்களே !
உமக்கு என் உளமார்ந்த நன்றி ....

- மதி

சரியாக 31.12.2002 அன்று பத்தாம் வகுப்பில் THE ROAD NOT TAKEN (Robert Frost ) ஆங்கிலக் கவிதையால் கவரப்பட்டு முயற்சித்த முதல் மொழிபெயர்ப்பு. இன்று லேசாகத் திருத்திப் பதிகிறேன். இந்தக் கவிதை என்னை அன்று காரணமில்லாமல் ஈர்க்கவில்லை என்று தோன்றுகிறது. என் கால்களை இப்போது நன்றியோடு பார்க்கிறேன். 


The Road Not Taken



Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim
Because it was grassy and wanted wear,
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I marked the first for another day!
Yet knowing how way leads on to way
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I,
I took the one less traveled by,
And that has made all the difference.

Robert Frost

கருத்துகள்

  1. Awesome translation of excellent poetic verses!! Every line in your translation was equally good to the original one..

    பதிலளிநீக்கு
  2. thanks @vasu ... Frost enga? Namma enga? lets just say this is a sincere attempt at translation

    பதிலளிநீக்கு
  3. and once again made a different attempt.nys translation!!.."yen kallgalai nandriyodu parkiren"..u made

    பதிலளிநீக்கு
  4. நல்லாருக்குங்க.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்!
    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  6. நன்றி ரமேஷ் ... நன்றி ராமசாமி அண்ணே !!!

    பதிலளிநீக்கு
  7. beautiful! you have not spoiled the essence of the original, but have made the translation all the more enjoyable!

    kudos :)
    for both the poem and for taking the road less traveled :)

    பதிலளிநீக்கு
  8. it struck at the first instance itself we have read this some where guess wat?

    it made me remember navitha maam.

    nalla attempt goms!!!

    பதிலளிநீக்கு
  9. Nalla kavithai... Unara mudikirathu, 10th la irukka vendiya purithalai vida aazham athigam... Aanalum konjam porul maari iruppathu pol unarvu...

    I am providing a literal translation for reference (understanding the meaning)


    பயணிக்காத பாதை

    அடர்ந்த காடொன்றில் பாதை இரண்டு
    தனியனாய் ஒரு சேர பயணிக்க ஆகாது
    ஆழமாய்ச் சிந்தனை சில சமயம் நிந்தனை
    வழி ஒன்றில் கண் பதித்தேன் உளம் புகுத்தி
    தொடு வானத்தின் முடிவிளியில் சங்கமம்

    மனித மனம் குரங்கு தானே, தாவியது
    இரண்டாம் வழியில் ஏகம் சென்றது
    பச்சை புல்லோடு,
    பழகிய பாதையின் சாயலில் என்றபோதும்
    ஒன்றும் இரண்டும் ஒருவகையில் ஒன்றே!
    காலத்தின் கட்டாயம், ஓயாத பயணத்தில்
    கடந்தவர் கால்களின் தேய்மானம் நன்றே!

    காலை கதிரொளியில் கண்படும் பாதைகளில்
    சலனமில்லா சருகுகளில் கால்தடங்கள் ஏதுமில்லை
    முதல் வழியை பின்னொரு நாளுக்கு தள்ளி விட்டேன்
    பயணங்கள் தொடரும் பாதைகள் பிறக்கும்
    பயணித்த வழிகள் ஞாபகம் அற்று இறக்கும்
    மீண்டும் வருவேனோ? மாண்டும் பிரிவேனோ ?

    நிம்மதிப் பெருமூச்சில் நிதர்சனம் உரைக்கிறேன்
    கொஞ்ச காலாமாய் நெஞ்சை வருடும் ஞாபகம்
    அடர்ந்த காடொன்றில் பாதை இரண்டு
    அடியேனின் பாதையில் அநேகம் பேர் பயணித்ததில்லை தான் !
    அப்புறம் நடந்த அனைத்தும் அத்தேர்வின் விளைவு தான் !

    பதிலளிநீக்கு
  10. மிக நன்றி உதயா .. இந்தக் கவிதை கொஞ்சம் என் நடையின் சாயலோடு மருவி உருவானதுதான் .. நீங்கள் தந்துள்ள நேரடி மொழிபெயர்ப்பினை மிகவும் ரசித்து வாசித்தேன் .. அருமை :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..