அழகில் மயங்கி அதனூடே வாழ்ந்தும்....
வயது வந்த
அத்தனை ஆணும் பெண்ணும்
வாழ்வில் கட்டாயம்
ஒரு சின்னஞ்சிறு காலம்
நார்சிஸஸ்ஸாய் மாறுகிறோம்.
கரை கண்டு விட்டோரையும்
காணச் சகியாதோரையும்
தவிர்த்து
பிறர்
அவ்வாறே தொடர்கிறோம்.
-மதி
(படம் அளித்து உதவிய Cea.க்கு நன்றி .. Cea.'s photostream)
(இவர்தான் நார்சிஸஸ்)
உண்மை. நாம் ஏன் நம்மை பற்றி அதிகபடியான ஒரு பிம்பத்தை நமக்குள் ஏற்றி கொள்கிறோம் என்பது ஓர் ஆச்சரியமான கேள்வி தான்.
பதிலளிநீக்குநன்றி சாய்ராம்.. இந்தக் கேள்விக்கு விடை கண்டுகொள்வதும் கொஞ்சம் கடினம்தான்.... அதிலும் குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் இந்த நிலைக் கண்ணாடியைக் கண்களோடு கட்டிக் கொண்டு புற உலகைப் பார்க்காமலேயே வாழ்வதாய்க் கூடச் சில நேரம் தோன்றுகிறது
பதிலளிநீக்கு!!!!!!!!11கவிதையில் ஒருஅடம் புரியவல்லைநண்பா..அறிவு எனக்கு போதவில்லை.கருத்துரையை பார்த்து புரிந்து கொணடேன்.வாழ்த்துக்கள்.!
பதிலளிநீக்குஇன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!
நன்றி அதிசயா ... புரிந்தபின் கவிதை இன்னும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்
பதிலளிநீக்குஉண்மைதான்.:)
பதிலளிநீக்கு