பெற்றவர்களின் கவனத்துக்கு
மழை கொட்டும்போது
மணியடித்துக் கொண்டொரு
ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வந்தால்
உங்கள் பிள்ளைகளை
நன்றாகக் கவனியுங்கள்
பெற்றவர்களே!
ஐஸ்கிரீம் ஆசையை
அவர்கள் அணுகும் விதம் கொண்டு
பின்னாளில் அவர்கள் காதலித்தால்
எப்படி நடந்து கொள்வர்
என மூன்று வகைப்படுத்தலாம்.
உடம்புக்கு ஆகாது என்று
உங்கள் பேச்சைக் கேட்பவர்கள்;
உங்களைச் சம்மதிக்கவைத்து
ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள்;
மற்றும்
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடியவர்கள்!
- மதி
அருமை
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி
பதிலளிநீக்குநுட்பமான அணுகுமுறை நன்று
பதிலளிநீக்கு