போதி நாற்காலி



போதி நாற்காலி

நாவிதன் கடை நாற்காலியில்
நேற்று எனக்கு ஞானம் கிடைத்தது. 
சதா காலமும் தலைக்கு மேல்
கத்தி விளையாடுவது போல்
இந்த வாழ்க்கை. 
கத்தி ஒரு போதும் நம் கையில் இருப்பதில்லை. 
நம்பித் தலையைக் கொடுத்துவிட்டால்
ஐம்புலன்களையும் அடக்கி
நடப்பதை அனுபவிக்கப் பழகிக் கொள்ள வேணும். 
என்ன ஆனாலும்
மயிரே போச்சு என்று இருத்தல் உசிதம்.
கழுத்தில் கத்தி படரும் நொடியிலும்
விழிப்போடு இருந்தால்
கருத்தில் கவிதை வரலாம்.
காரியம் முடிந்து கண்ணாடியில் பார்த்தால் 
எது நடந்ததோ
அது 
எப்போதும் நன்றாகவே நடந்திருக்கும். 

- மதி

படம் : நன்றி : Kenneth Tan

கருத்துகள்

  1. பெயரில்லாஜூன் 17, 2014

    வணக்கம்

    இரசித்தேன் நன்றாக உள்ளது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. யதார்தமான வரிகள் நன்று

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..