மங்குல் வெள்ளம் கடலினும் பெரிதேநெல் அறியும்.
மேகம் ஒளித்து வைத்திருக்கும்
துளி மழை
கடலினும் பெரிதென.
அவள் உள்ளம்
ஒளித்து வைத்திருக்கும்
ஒரு சொல் விடை
அது போலவே!

- மதி
(கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே என்ற ஒரு வரி குறுந்தொகைப் பாடல் 387- இல் வரும். எனக்குப் பிடித்த ஒரு குறுந்தொகைப் பாடல் அது. கங்குல் என்றால் இரவு என்று பொருள். காதலனின் நினைவால் தலைவி இரவெல்லாம் தூக்கம் தொலைத்துத் தவிக்கையில் இந்தப் பாழாய் போன இரவு கடலை விடவும் பெரிதாய் இருந்து இப்படி இம்சிக்கிறதே என்று நினைக்கிறாள். சங்க காலம் தொட்டே பல கவிஞர்களின் கற்பனையிலும் இரவு ஒரு திரவமாக ஒழுகி ஓடிக் கொண்டே இருந்திருக்கிறது. மனுஷப் பயல் கற்பனையும் நடத்தையும் காதல் விஷயத்தில் ஆதி காலம் தொட்டு அடிப்படையில் ஒரே மாதிரியாகவே இருக்கிறது பாருங்களேன் !

இந்தப் பாடலை வாசிக்கும் போதுதான் மங்குல் என்ற வார்த்தையும் ஞாபகம் வந்தது. மங்குல் என்றால் மேகம் என்று பொருள். அந்த நினைப்பின் தொடர் விளைவுதான் மேலே நீங்கள் குறுங்கவிதையாய்க் காண்பது)

( படம் கொடுத்த புண்ணியவானுக்கு நன்றி - Bud_um_tiss)

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..