படத்துக்கு இன்னும் பேர் வெக்கலே - 2



call 3 - 2 minutes later

ர: ஹலோ.. யோசிச்சியா?
கா: ம்
: என்ன யோசிச்சே?
கா: இங்க பார் தம்பி.. நான் இந்தத் தொழிலுக்கு வரும்போதே இந்த மாதிரில்லாம் வரலாம்னு தெரிஞ்சுதான் வந்தேன்.. எதுக்கு சினிமா மாதிரி என்னை மிரட்டி டைம் வேஸ்ட் பண்ணிட்டு? எனக்கு என் உயிரும் என் பொண்டாட்டியும் முக்கியம்.. நீ நிஜமா அவளைக் கடத்திட்டியான்னு கூட எனக்குத் தெரியாது.. ஆனா வாய்ப்பிருக்கு.. நான் risk எடுக்கமாட்டேன்.. என்னைப் பத்தி ஏதோ ஒரு reliable sourceகிட்டே இருந்து information collect பண்ணியிருக்கே. homework பண்ணியிருக்கே.. பொய் சொல்லமாட்டேன்னு நம்புறேன்.. என்ன வேணும் சொல்லு?

Raghu claps his hands..

: கார்த்தி சார்.. சும்மா சொல்லக்கூடாது.. நீங்க சூப்பர் சார்.... நானும் சும்மா உங்களை மிரட்டணும்னு நெறைய யோசிச்சேன்.. ரொம்ப practical இருக்கீங்க சார் நீங்க! உங்க கேரக்டர்க்கு ஒரு லைக் சார்...
கா: தம்பி.. விஷயத்துக்கு வா..
: பயமா இருக்கா சார்?
கா: (அமைதி)
: என்ன சார் யோசிக்கிறீங்க?
கா: அதான் சொன்னேனே.. நீ சொல்றது உண்மையா இருக்கலாம்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துருக்கு.. அவ்வளவுதான்...
: ப்ச் ப்ச் ப்ச்.. பத்தாது சார். எனக்கு நீங்க பயப்படணும்.. அப்போதான் அடுத்த கட்டம். மிரட்டினாலும் பிரயோஜனமில்லியேன்னு சொல்லிட்டீங்க... சரி.. இப்படி முயற்சி செய்வோம்.. இப்போ நீங்க என் situation இருக்கீங்கன்னு வச்சுக்குவோம்.. நீங்க ஒருத்தரைக் கடத்திக் கட்டிப் போட்டுட்டு ஃபோன் பண்ணி பேசுறீங்க.. அவரை நீங்க எங்கே வேணா வச்சிருக்கலாம்.. அவர் பொண்டாட்டியையும் நீங்க கடத்தி வச்சுருக்கீங்க.. அவங்களையும் நீங்க என்ன வேணா செய்யலாம்... வயசான ஆளுங்க.. so sex torture  எல்லாம் கெடையாது.. ஆனா  violence is not ruled out.  of course  நீங்க கடத்தி வெச்சுருக்கிறவரு உங்களுக்கு அதுக்கெல்லாம் chance குடுக்க மாட்டேன்.. practicalla முடிச்சுக்கலாம்.. டக்குன்னு மேட்டருக்கு வான்னு சொல்றார்.. ஆனா அவரை இன்னிக்கு freea விட்டுட்டாலும் உங்களை மோப்பம் பிடிச்சுப் பிடிச்சு வந்து பத்து வருஷம் ஆனாலும் revenge எடுக்கிற character  அவர்.. risk எடுக்க மாட்டாராம் !! இப்போ அவரைக் கடத்திட்டு நீங்க எவ்ளோ risk எடுக்கிறீங்கன்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க..
கா: (அமைதி)
: கார்த்தி சார்?
கா: கேட்டுட்டுதான் இருக்கேன்
: அதெப்படி சார்.. எனக்குத் தெரியும்? கதை கேக்கிற மாதிரி அப்பப்போ உம் கொட்டுங்க.. இல்லேன்னா நான் உங்க பொண்டாட்டி தலையில் கொட்டிடுவேன் .. பாத்து...



கா: தம்பி.. கேட்டுட்டுதான் இருக்கேன்.. சொல்லு
: ம் கொட்டுவீங்களா?
கா: ம்
: super.. இப்போ நீங்க இவ்ளோ riskஉம் எடுத்துட்டு ஃபோன் பண்ணி ஒரு steadyயாவே இல்லாம ஏதேதோ பேசுறீங்க.. நீங்க கடத்தினவருக்குப் பயம் வரவே இல்ல... அப்போ அவரு கண்டிப்பா நாளைக்கு உங்களைத் தேடுவாருல்ல? ம் கொட்டுங்க
கா: ம்
: பாத்தீங்களா? அப்படி அவரு உங்களைத் தேடி வராம இருக்க நீங்க என்ன பண்ணணும்?
கா: நான் அப்பிடில்லாம் உன்னைத் தேடி வர மாட்டேன் தம்பி.. நான்..
: (இடைமறித்து, குரலில் கடுமை கூடுகிறது) சார் என்னைப் பேச விடுங்க சார்.. நானும் கொஞ்ச கொஞ்சமா terror ஏத்தலாம்னு பாக்குறேன்.. திடீர்னு கோவப்பட்டுட்டேன்னா உங்க சீதாம்மாவை நெஞ்சுல மிதிச்சுருவேன்.. விருமாண்டி படம் பாத்தீங்களா?
கா: ஏய்.. சரி .. பேசு பேசு.. நான் எதுவும் கேக்கல..
: யோவ் கார்த்தி.. இப்போ என்ன சொன்னேன் உங்கிட்ட.. நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லு.. விருமாண்டி படம் பாத்தியா?
கா: ம்
: பசுபதி அபிராமிய எங்க மிதிப்பாரு?
கா: நெஞ்சுல...
: சீதாம்மா தாங்குவாங்களா?
கா: (குரலில் பயம் தெரிய) மாட்டா.. தம்பி.. நீ பேசு.. நான் உம் கொட்டிட்டுதானே இருக்கேன்..
: ம். எங்கே விட்டேன்?
கா: தேடி வராம இருக்க என்ன பண்ணணும்...
: ஆமாமா.. தேடி வராம இருக்கணும்னா பயம் வரணும்ல?
கா: ஆமா தம்பி..
: சும்மா எப்படி பயம் வரும்? யோசிக்கணும்.. psychology  தெரியுமா உங்களுக்கு? Sigmund Freud? உங்க மனசுக்குள்ள புதைஞ்சு கிடக்குற பயத்தை வெளியே எடுத்துட்டு வரணும்.. என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுகிட்ட மனசைவிட என்ன நடக்கப் போகுதோன்னு தெரியாம கற்பனை பண்ற மனசுதான் ரொம்பப் பயப்படும்.. நான் சொல்ற மாதிரி செய்வீங்களா?
கா: சொல்லு தம்பி..
: இப்போ நீங்க எங்க இருக்கலாம்னு நீங்களே guess பண்ணுங்க பாப்போம்.. நீங்க ஏற்கெனவே industry இருக்கிற ஆளு.. நீங்க guess பண்றதை வச்சுதான் நீங்க என்னை எந்த அளவுக்கு சீரியஸா எடுத்திட்டு இருக்கீங்கன்னு தெரியும்.. சொல்லுங்க..
கா: *யோசனை* ஏதாவது .. கொடவுன்...
: போங்க கார்த்தி சார்.. நான் என்ன சின்னப் பையனா? இன்னும் கொஞ்சம் நல்லா imagine பண்ணுங்க..
கா: *cursing himself* ஏதாவது.. container.. பழைய factory..
: சார்.. என்ன உங்களை டெம்போல கடத்திட்டு வந்தோம்னு நினைக்கிறீங்களா? இது high budget  படம்.. ஷங்கர் படம் லெவெலுக்கு யோசிங்க..
கா: நான்.. நான்.. தெரியல தம்பி.. என்னால் யோசிக்க முடியல.. ப்ளீஸ்.. நீ சொல்லவும் மாட்டே.. நான் பயப்படுறேன் தம்பி.. நிஜமா நான் உன்னைத் தேடிட்டுல்லாம் வரமாட்டேன்
: சரி. வுடுங்க.. Buriedனு ஒரு படம் பாத்திருக்கீங்களா? அதுல ஒருத்தனைக் கடத்தி உயிரோட மண்ணுக்குள்ள போட்டுப் புதைச்சு ஒரு செல் ஃபோனை மட்டும் பக்கத்துல போட்டு வெச்சுட்டு இப்பிடிதான் கூப்பிட்டு மிரட்டுவாங்களாம்.. சும்மா சொன்னேன்.. டைம் கெடைச்சா பாருங்க.. நான் உங்களை வேற கேள்வி கேக்குறேன்.. இதுக்காவது யோசிக்க முயற்சி செய்யுங்க
கா: தம்பி.. ப்ளீஸ்
: எனக்குத் திருப்தி வரலைன்னா உங்க சீதாம்மாவை நான் என்னென்னல்லாம் பண்ணலாம்? யோசிங்க.. சொல்லுங்க பாப்போம்
கா: தம்பி ப்ளீஸ்ப்பா.. இந்த வெளையாட்டு வேண்டாம்.. உனக்கு என்ன வேணும்னு சொல்லு..
: Clockwork Orangeனு ஒரு படம் பாத்திருக்கீங்களா சார்.. அதுல..
கா: (கெஞ்சலாக) தம்பி....
: .. ரைட்டு விடுங்க.. நீங்க ஆனா வெளில போனதும் நெறைய இங்கிலீஷ் படம் பாருங்க சார்.. சுத்தமா creativityயே இல்லாம இருக்க முடியாது பாருங்க..
கா: (அமைதி)
: ம் கொட்டச் சொன்னேனே கார்த்தி சார்.. (அழைப்பு) சீதாம்மா...
கா: தம்பி தம்பி.. ப்ளீஸ்.. ம் ம் ம் ம்.. சொல்லுங்க
: good.. உங்களுக்குத் தெரியாத இன்னொண்ணும் இருக்கு .. அதையும் சும்மா imagine பண்ணிப் பாருங்க.. தேவைப்படலாம்
கா: (பயம் கூடி) .. என்னது?
: உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு.. ஜெர்மனில MS பண்ணிட்டிருக்கு.. ஜெர்மனில நமக்கு ஆள் இல்லைன்னு கண்டிப்பா சொல்ல முடியாது இல்லையா?
கா: தம்பி.. என் பொண்ணை ஏன் இழுக்கிறீங்க.. நான் நீங்க சொல்றபடிதான் கேக்குறேனே.. ப்ளீஸ்..
: relax கார்த்தி சார்.. உங்க பொண்ணை நாங்க இன்னும் எதுவும் பண்ணலை.. it's just a possibility.. i want you to be aware of that.. அவ்வளவுதான்.. (அழுத்தமாக) இப்போ பயமா இருக்கா கார்த்தி சார்?
கா: ஆமா தம்பி..
: good.. i believe you.. பயப்படுறேன்னு ஒத்துக்கறவன் நேர்மையானவன்.. நீங்க நேர்மையானவரு சார்.. பயப்படாதீங்கன்னெல்லாம் சொல்ல மாட்டேன்.. நேர்மையாப் பயந்துட்டே இருங்க.. நான் 5 நிமிஷம் கழிச்சு கூப்பிடுறேன்..

call - 4 (5 minutes later)

: ஹலோ..
கா: தம்பி.. சொல்லுப்பா.. சொல்லு
: ஒண்ணுக்கு வருதா சார்?
கா: (தடுமாறி) .. என்ன.. தம்பி?
: யூரின் சார்.. வருதா?
கா: (கஷ்டப்பட்டுக் கோபத்தையும் இயலாமையையும் அடக்கி) இல்லை
: வரும். அதுவும் கொட்டாவி தும்மல் மாதிரி தான்.. நாம சும்மா இருந்தா அதுவும் சும்மா இருக்கும்.. வர்ற மாதிரி இருக்கோன்னு நெனைச்சோம்னா வந்துரும்..
கா: (கொஞ்சம் கடுப்பாக) இப்போ நான் ஒண்ணுக்குப் போறதுல உனக்கு என்னய்யா ஆக வேண்டியிருக்கு.. உனக்கு என்ன வேணும்?
: ஒரு நாவல்ல வாசிச்சேன் சார்.. இந்த மாதிரி blackmail scene- மிரட்டுற ஆளுக்கு ஒண்ணுக்கு வந்துச்சுன்னா அந்த அவசரமும் சேர்ந்து அவரை ரொம்ப weak ஆக்கிருமாம்.. அதான் test பண்ணிப் பாத்தேன்..
கா: தம்பி நான் ரொம்பப் பச்சையா சொல்லிடுறேன்.. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.. என்னதான் இந்தத் தொழில்ல இருந்தாலும் எல்லாருமே உள்ளுக்குள்ள பயந்துகிட்டுதான் இருக்கோம்.. இப்போ நீ தான்  advantage- இருக்கே.. தயவு செஞ்சு இதைச் சீக்கிரம் முடிச்சுக்கலாம்.. இவ்ளோ யோசிக்கிற நீ நான் உன்னைத் தேட ஆரம்பிச்சேன்னு தெரிஞ்சாலே ஏதாவது தப்பா நடக்கிற மாதிரியும் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கலாம்.. புரியுது !
: (ஆச்சரியம்) புரியுதா ?! ரைட்டு விடுங்க. இன்னும் ஒரே ஒரு step தான்.. இவ்ளோவும் சொல்லிட்டீங்க.. நீங்க என்னென்னலாம் நெனைச்சு பயப்படுறீங்கன்னும் சொல்லிடுங்க.. எனக்கு முழு நம்பிக்கை வந்துரும்
கா: (helpless and frustrated) கண்டிப்பா சொல்லணுமா?
: உங்க வாயால !
கா: சரி .. சுருக்கமாச் சொல்றேன். நான் ஏதாவது முரண்டு புடிச்சா என்னை நீங்க கொலை பண்ணலாம்.. வலிக்காமலோ.. வலிக்கிற மாதிரியோ ! எனக்கு ஷுகர் இருக்கு.. வயசாயிட்டிருக்கு. என் சீதா என்னைவிடப் பாவம்.. வலி தாங்க மாட்டா.. அவளையும் நீங்க.. (குரல் விம்முகிறது) நீங்க.. என்ன வேணும்னாலும் பண்ணலாம் (அழுகை தொடங்குகிறது).... போதுமேப்பா.. என் பொண்ணு சின்னப் பொண்ணு..(அழுகை)
: அழுவுறீங்களா கார்த்தி சார்?
கா: (விசும்பல்)
: இது சினிமா மாதிரி இருக்கா சார்? இல்ல அதவிட உண்மையா இருக்கா?
கா: (விசும்பல்)
: இப்போல்லாம் reality show-லயே அழுதாத் தான் episode முடிக்கிறாங்க.. இது நிஜமாவே reality தான்.. seriousness உறைக்கணும் இல்லையா.. Phone booth அப்படின்னு ஒரு படம் இருக்கு.. உங்களை நான் சீக்கிரம் விட்டுருவேன்.. அப்புறம் அதைப் பாருங்க.. வேணும்னா DVD அனுப்பி வைக்கிறேன்..
கா: (அழுகை + கெஞ்சல்) என்னய்யா வேணும் உனக்கு
: கண்ணைத் தொடச்சு வெச்சிக்கோங்க.. ரெண்டு நிமிஷத்துல கூப்பிடுறேன்..
cuts the call .. checklist.. fist pump !

(கார்த்தி சார். அழுகை.. கண்ணைத் துடைத்துக் கொண்டு சுற்றிமுற்றும் பார்த்து எங்கே இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தல்.. தன் தொழில் எதிரிகள் யார் யாரென்று ஒரு மனப்பட்டியல் தயாரித்து இது யாராயிருக்கும் என யூகிக்க முயற்சித்தல்)

call 5 - after 6 minutes

ஃபோனை எடுத்ததும் உடனே கார்த்தியே பேசுகிறார்

: ஹல்..
கா: (இடைமறித்து) என்ன வேணும்னு மட்டும் சொல்லு தம்பி.. I am ready
: (நக்கல்) அட.. பயப்படும்போது இங்கிலீஷ் பேசுற பழக்கம் இருக்கா உங்களுக்குசரி அதை விடுங்க.. நீங்க சொன்ன மாதிரி சீக்கிரமா முடிச்சுக்கலாம்.. உங்ககிட்ட இப்போ பல C value உள்ள ஒரு பார்சல் இருக்கு.. இன்னும் நீங்க கை மாத்தி விடலே.. எங்கே வெச்சிருக்கீங்கன்னு உங்களுக்கு மட்டும்தான் தெரியும்... அது எங்கே இருக்கு?
கா: (helpless and just going with the flow mechanically like a child answering a teacher) ஒரகடத்துல எனக்கு ஒரு flat இருக்கு.. பூட்டிதான் இருக்கு.. அந்த வீட்டு cupboard இருக்கு
: பார்றா.. அவனவன் வாழ்க்கை முழுக்க காசு சேர்த்து ஒரகடத்துலயும் மதுராந்தகத்துலயும் வீடு வாங்குறானுங்க.. ஒரு பீரோவா use பண்றதுக்கு ஒரு flat? அந்தச் சாவி எல்லாம் எங்கே இருக்கு?
கா: சாவி கிடையாது.. நம்பர் லாக் போட்டிருக்கேன்.. வெளிக்கதவைத் திறக்க 4568523746.. cup board combination 7946215836 ...
: ஹோல்டான் ஹோல்டான் .. ப்பா.. என்ன ஞாபகசக்தி சார் உங்களுக்கு.. திரும்ப சொல்லுங்க.. நோட் பண்ணிக்கிறேன்
telling again slowly and noting it down
கா: என்னை எப்போ விடப் போறீங்க
: இருங்க சார்.. ஒரகடம் போகணுமே.. சென்னைக்கு மிக அருகில்னு சும்மாதான் சொல்றாங்க.. infact நீங்களே இப்போ சென்னைக்கு மிக அருகில் இருக்கீங்களான்னு confirm கெடையாது.. சென்னையில் நம்ம பசங்க போய் வேலையை முடிச்சுட்டுச் சொல்லுவாங்க.. உங்களை விட்டுடுவோம்
கா: பரவாயில்லே.. நான் wait பண்றேன்.. உங்களோட fulla co-operate பண்றேன்.. சீதாவை எதுவும் பண்ணிராதீங்க.. அவளுக்குச் சாப்பிட ஏதாவது குடுங்க ப்ளீஸ்..
: sure சார்.. அம்மா இப்போதான் இட்லி சாப்பிடுறாங்க.. ரொம்ப அடம்பிடிச்சாங்க.. அவங்களைச் சாப்பிட வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு..
கா: தம்பி.. தப்பா நெனைக்காதே.. நான் உன் மேல சந்தேகப்பட்டெல்லாம் கேக்கலை.. சும்மாதான் கேக்குறேன்.. (தயங்கித் தயங்கி) சீதாவோட குரலை நான் கேக்கணும்..
: அட.. அவங்க உங்க பொண்டாட்டி சார்.. கேக்குறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு.. ஆனா இப்போ எங்ககிட்ட இருக்கிறதால் உரிமைல கொஞ்சம் compromise பண்ணிக்கலாம். நீங்க அவங்க குரலைக் கேக்கலாம்.. ஆனா அவங்க உங்க குரலைக் கேக்க மாட்டாங்க.. அவங்களுக்கே தெரியாம speaker போட்டுட்டு அவங்க கிட்ட ஃபோனை எடுத்துட்டுப் போறேன்.. ஆனா 10 நிமிஷம் கழிச்சுதான் அதுவும்..
கா: தம்பி.. ஆனா..
: (இடைமறித்து) கார்த்தி சார்... முழுசா நம்பிட்டீங்க.. இப்போ வேற வழி இல்ல.. ஓகேவா இல்லையா
கா: (தயங்கி) சரி...
: சரி 10 நிமிஷம் கழிச்சு நானே கூப்பிடுறேன்...


Image courtesy: YO$HIMI


call - 6 (after 10 min)

: கார்த்தி சார்.. ரெடியா?
கா: ப்ளீஸ்ப்பா.. அவ குரலைக் கேக்கணும் எனக்கு..
: பொறுங்க.. போறேன்.. போறேன்...
(சின்ன மௌனம் கழித்து - கொஞ்சம் தூரத்தில் குரல்கள்)
பெண் குரல்: எனக்கு ஒண்ணும் இல்லப்பா.. என்ன விடுங்க.. அவருக்கு ஒண்ணும் ஆயிடாதுல்லே?
ஆண் குரல்: நாங்க சொல்றபடிக் கேட்டா ஒண்ணும் ஆகாது.. எங்க வேலை முடிஞ்சதும் உங்க ரெண்டு பேரையுமே விட்டுருவோம் .. நீங்க சரியாச் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்காதீங்க
பெஎப்படிப்பா சாப்பிட முடியும்.. எனக்கு சீக்கிரம் அவர்கிட்ட போகணும்..
: நீங்களும் சொல்றபடி கேட்டாதான் அவருக்கு எதுவும் ஆகாது.. சாப்பிடுறீங்களா இல்லையா. அவரு வேற நீங்க சாப்பிடலைன்னு அங்க ஃபீல் பண்ணிட்டிருக்காரு
பெ: சரி.. சாப்பிடுறேன்.. சாப்பிடுறேன்.. அவருக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா...
(இடைமறித்து)
: என்ன ராமரே.. கேட்டீங்களா உங்க சீதாவோட குரலை?
கா: பாவம் அவ.. ரொம்ப நன்றிப்பா.. ப்ளீஸ்.. எங்களைச் சீக்கிரம் விட்டுரு
: நான் நியாயஸ்தன் சார்.. வேலை முடிஞ்சதுன்னு எனக்குத் தகவல் வந்ததும் நீங்க ரெண்டு பேரும் free birds.. சேர்ந்து இட்லி சாப்பிடலாம் அப்புறம்.. இப்போ கட் பண்றேன்.. வேலை ஆனதும் கூப்பிடுறேன்..
கா: (தயங்கி) தம்பி..
: என்ன சார்? அதான் சொல்றேன்ல
கா: (இடைமறித்து) ஒண்ணுக்கு வருதுப்பா .. இங்கே எங்கே போறது?
: (ஆச்சரியமாய்ச் சிரித்து) அட! நான் சொன்னேன்ல இதுவும் தும்மலையும் கொட்டாவி மாதிரியும் தான்னு.. but very sorry sir.. இப்போ உங்களுக்கு என்னால எந்த உதவியும் பண்ண முடியாது.. நீங்களாப் பாத்து ஏதாவது adjust பண்ணிக்குங்க.. சீக்கிரம் திரும்பக் கூப்பிடுறேன்.. 

call - 7 (after 1 hour)

: என்ன சார்.. எங்க ஒண்ணுக்குப் போனீங்க?
கா: பார்சலை எடுத்திட்டீங்களாப்பா?
: என்ன பார்சல்லயா போனீங்க.. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க சார்
கா: (வெட்கத்தை மறைத்து) என்னை ஏன்யா இப்படி சோதிக்கிறே.. என் பேண்ட்ல தான் போனேன்.. நாத்தத்துலதான் இருக்கேன். போதுமா? என்னை எப்போ விடப்போறீங்க?
: ஓவ்.. ஓவ்.. சார்.. கோவப்படாதீங்க.. good news சொல்லத்தான் கூப்பிட்டேன்.. எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சுது. சீதாம்மா already on the way.. நீங்க இன்னும் 15 நிமிஷத்தில ரிலீஸ்
கா:ரொம்ப thanks தம்பி . என்னை எப்படி வெளில கூட்டிட்டுப் போகப் போறீங்க? அப்புறம் சீதாவ..
: (Interrupts and speaking).. கவலப்படாதீங்க sir.. 15 நிமிஷத்துல அவங்களே உங்கள தேடி வருவாங்க.. by the way இதுதான் நான் உங்களோட பேசப் போற கடைசி தடவை.. it was nice working with you .. என் அனுபவத்துல நீங்க ரொம்ப practicalஆன ஆளு சார்..  எனக்கு உங்களை ரொம்ப நாள் ஞாபகம் இருக்கும்.. ஆனா நீங்க என்னை எவ்ளோ சீக்கிரம் மறக்க முடியுமோ மறந்துருங்க.. அதுதான் உங்களுக்கும் (அழுத்தமாக) உங்க பொண்ணுக்கும் நல்லது..
கா: என் பொண்ணா? .. தம்ப்..
: பயப்படாதீங்க.. நீங்களே சொன்னீங்களே.. நீங்க என்னைத் தேடுறீங்கன்னு தெரிஞ்சாதான் நான் உங்க பொண்ணைத் தொடுவேன்.. goodbye!
call ends....

Scene 6


Just black screen..
Showing “after 15 mins” in the screen…
Room door suddenly opens and Seethamma entering..
Seetha: என்னங்க.. உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?
Kaarthi sir: சீதா..

Scene 7 – at a bachelor’s room

சாணா: டேய் ரகு .. செமையா இருக்குடா இந்த book (White Tiger) இனிமே பணக்காரன் வீட்டுல driverஅப் பாத்துப் பயப்பட ஆரம்பிக்க வேண்டியதுதான்..
: இப்போதான் முடிச்சியா.. செம கதைடா அது
சதீஷ்: என்னடா பணக்கார வீட்டு டிரைவர் பத்தில்லாம் பேசிட்டிருக்கீங்க..
: யோவ் சதீஷு. நீயெல்லாம் என்ன டிரைவர்.. இந்த book- ஒரு driver தன் முதலாளியோட illegal dealings எல்லாம் எப்படி மோப்பம் பிடிச்சு அவனையே போட்டுத் தள்ளி அவன் பணத்தை வெச்சே வாழ்க்கைல எப்படி செட்டில் ஆகுறான் தெரியுமா?
: அது சரி.. எங்க முதலாளி கார்த்தி சார்க்கு என் மேல நூறு ரூபாயைத் திருடினதா ஒரு சின்ன சந்தேகம் வந்தாலே போதும்.. ஊர்ல எங்க குடும்பத்தேயே புதைச்சுருவாரு..
சாணா: அட இந்தப் புஸ்தகத்துலயும் அதெல்லாம் இருக்குய்யா.. ஆனா கொஞ்சம் யோசிச்சா எல்லாத்துக்கும் வழி இருக்கு.. தில்லுதான் வேணும்
: அதுக்கு கார்த்தி சாரைப் போட்டுத் தள்ளிறலாம்னு சொல்றியா? மூஞ்சிகளைப் பாரு.. நீ IT கம்பெனில வேலை பாக்குறே...அவன் செல்ஃபோன் கம்பெனில கஸ்டமர் கேர்ல தினம் தினம் எவன் எவங்கிட்டயோ திட்டு வாங்கிட்டு இருக்கான்.. நாமளாவது கொள்ளை அடிக்கிறதாவது..
: சதீஷு.. அதெல்லாம் நெனைச்சா பண்ணலாம்யா
: போயா யோவ்.. எப்பிடி டெம்போ வெச்சுக் கடத்தப் போறியா .. கவுண்டமணி காமெடி பண்ணிட்டு இருக்கே
ர: கொள்ளையடிக்கலாம்னுதான் சொன்னேன்.. கடத்தப்போறோம்னு சொன்னேனா?
Everyone looking at him seriously..

Cuts to kaarthi sir home… now lights on

Kaarthi sir: என்னது.. இவ்ளோ நேரமும் நம்ம வீட்லதான் இருந்தேனா.. (looking around) கடவுளே.. (தலையில் அடித்துக் கொள்கிறார்).. ஆனா நீ எப்படி அவங்ககிட்ட மாட்டினே..?
Seetha: நானா? யார் கிட்டே?

Cuts to bachelor’s room

: இங்க பார்.. நாம பெரிய கடத்தல்காரங்களா இருக்கணும்னு அவசியம் இல்லை.. நாம பெரிய கடத்தல்காரங்கன்னு நம்ப வைச்சுட்டாப் போதும்
(மூவரும் சீரியஸாக நிமிர்ந்து உட்கார)
சாணா: ரகு.. சீரியஸாத் தான் பேசுறியாடா
(showing some conversations muted - planning)
: அடுத்த நாள் எல்லாரும் வழக்கம் போல வேலைக்குப் போகப் போறோம்.. அவ்வளவுதானே.. அஸால்ட்டா செய்யலாம்டா

 scene 8 - at room

: டேய். கார்த்தி சார் புதுசா ஒரு பார்சல் இறக்கியிருக்காரு .. பெரிய தொகைதான் .. கார்ல வரும்போது ஃபோன்ல பார்ட்டிட்ட பேசிட்டுருந்தார்
: சூப்பர்.. அப்ப நம்ம ப்ளானுக்கு நேரம் வந்திருச்சு.. சதீஷு .. அந்த சீதாம்மா voice collect பண்ணச் சொன்னேனே .. எவ்வளவு பண்ணியிருக்கே..
: ரெண்டும் மாசமா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவங்க பேசுற சின்னச் சின்ன dialogue phone record பண்ணிட்டிருக்கேண்டா
சாணா: நல்ல  collection டா ரகு.. போன வாரம் கூட பாத்துட்டிருந்தேன்.. கிட்டத்தட்ட எல்லா situationகும் suitஆகுற அளவுக்கு விஷயம் சேர்ந்திருச்சு.. opensourceலயே ஒரு நல்ல sound morphing software இருக்கு .. download பண்ணி வெச்சிருக்கேன்.. நானும் ரெடி
: அப்ப அது?
சாணா: fentanyl தானே ? online order பண்ணி வாங்கி வெச்சிருக்கேண்டா.. powerful sedative.. கரெக்டாத் தெரிஞ்சு சேர்க்க வேண்டியதோட சேர்த்து spray பண்ணோம்னா மயக்க மருந்து..
சதீஷ்: ஏண்டா அப்போ மூக்கு மேல வெள்ளை கர்ச்சீப்பைப் போட்டுறலாமா?
சாணா: அது நீ எந்தக் கலர் கர்ச்சீப்பை வேணா போட்டுக்கோ.. ஆனா கடத்தப் போற அன்னிக்கு இதைக் கரெக்டா கார் perfume freshener bottle ஊத்தி வைச்சுரு.. கார்ல உக்காந்து ஆன் பண்ணதும் ஆள் மயக்கமாகிரணும்.. வாட்ச்மேனை spray அடிச்சு சமாளிச்சுக்கலாம்
: சரி.. ஆனா யாரு பண்றது.. இன்னொரு நம்பிக்கையான கை வேணுமே..
all thinking.

scene 9 - public place

: மச்சி ..இவந்தான் என் ஃப்ரெண்டு ஜிம்மி - ஜிம் பாடி பாத்தியா.. சினிமா ஸ்டண்ட் பார்ட்டி.. அடியாள் கேரக்டருக்குன்னே சோறு போட்டு உடம்பு வளத்துட்டிருக்கான்
மற்றவர்கள் : ஹலோ பாஸ்

scene 10 - கார்த்தி சார் வீடு

கார்த்தி சார் காருக்குள் மயக்கமாக இருக்கிறார்.. வெளியே வாட்ச்மேன் மயக்கமாக இருக்கிறான்.. கைரேகை பதியாதபடிக் கையுறைகளைப் போட்டுக்கொண்டு ஜிம்மி கார்த்தி சாரைக் காரிலிருந்து அலேக்காகத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நடக்கிறான்...

scene 11 - at some public place

Seetha gets a call on her phone
குரல்: ஹலோ சீதாங்களா.. உங்க husband கார்த்திக் பரமசிவம் கொஞ்ச நேரத்துக்கு முன்னே கார் accident ஒண்ணுல மாட்டி இங்கே வந்து admit பண்ணியிருக்காங்க.. நீங்க உடனே வர முடியுமா..
சீதா: அய்யய்யோ... அவர் எப்படி இருக்காரு.. எந்த hospital madam?
குரல் ஏதோ சொல்கிறது
சீதா: பாண்டிச்சேரி போறதா அவர் எங்கிட்ட சொல்லவே இல்லையே.. அங்க எப்படி?
குரல் ஏதோ சொல்கிறது..
சீதா: இல்லல்ல நான் உடனே வர்றேன்.. நீங்க நான் வர வரைக்கும் காத்திருக்க வேண்டாம்.. தயவு செஞ்சு அவரைக் காப்பாத்துங்க.. treatment பண்ணுங்க.. நான் உடனே கிளம்புறேன்..
Seetha calls driver Satheesh
சீதா: சதீஷ்.. எங்கே இருக்கே..
: இங்கேதாம்மா பார்க்கிங்க்ல இருக்கேன்.. போலாமா?
சீ: சீக்கிரம் வண்டியை எடுத்துட்டு வாப்பா.. அய்யாவுக்கு ஏதோ accidentஆம்
: அய்யய்யோ.. இதோ உடனே வரேம்மா...

scene 12 - in car

on the way to Pondicherry in car, Satheesh asks Seetha to eat something.. Seetha says dialogues which were earlier played to Kaarthi when he requested.. Satheesh records it all in his phone

scene 13 - at room

ரகு: 10 நிமிஷம் டைம் இருக்கு.. இப்போ உள்ள situationகு ஏத்த மாதிரி ஒரு நல்ல conversation ready பண்ணு பாக்கலாம்
சாணா: பாரேன்.. இப்போதான் சதீஷ் ஒரு dialogue clipping அனுப்பி வெச்சான்.. அதுவே perfecta set ஆகும் இந்த சீனுக்கு
சாணா mixes sounds of Seetha received via internet and mixes it with his own voice.. prepares a dialogue to show to Kaarthi

scene 14 - collection of parcel

Ragu and Saanaa collect parcel from Oragadam and give clean chit to Jimmy and Satheesh

scene 15 - car from pondicherry

சதீஷ் : அய்யாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காதும்மா.. தூங்கியிருப்பாரு.. அதான் ஃபோன் எடுக்கலயா இருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்குப் போயிரலாம்... யார் இப்படி accidentனு ஃபோன் பண்ணிக் குழப்பி விட்டாங்கன்னே தெரியலையே..

scene 16 - calendar date flipping .. showing next day

All 4 at their regular work.. At Kaarthi sir's home, a parcel comes by courier.. Satheesh collects courier and hands it over to Kaarthi sir.. On opening the parcel, it is the DVD of Phone booth movie.. !
Amazed and perplexed, Kaarthi sir looks up.. there stands Satheesh with an innocent look on his face..
கார்த்தி சார்: ஏன் சதீஷு, நீ இங்கிலீஷ் படமெல்லாம் பாப்பியாடா?
: அப்பப்போ டிவில டப்பிங்க்ல போடும்போது பாப்பேங்கய்யா.. என்ன விஷயம்ங்க?


Image courtesy: emmstitch


- முடிவு






கருத்துகள்

  1. super da....i haven`t seen the movie yet.... but loved this narration... especially the hero character, his love towards english films and of course his name :P

    பதிலளிநீக்கு
  2. thanks Ramanan & Raghu.. @Raghu.. u were one of the influences in shaping this character :-p maybe you should try your hand at kidnapping now..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..