படத்துக்கு இன்னும் பேர் வெக்கலே - 1


சில மாதங்களுக்கு முன் நண்பர் லக்ஷ்மணன் என்னிடம் 'ஒரு short film எடுக்கலாம்னு இருக்கேன் பாஸ்.. கதை ஒண்ணு இருக்கு.. உங்க blog வாசிச்சேன்.. நீங்க திரைக்கதை வசனம் எழுதித் தந்தா நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன்.. என்ன பண்ணலாமா' என்று என்னிடம் கேட்டார். இன்று வெளி வந்து நல்ல பேர் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சூது கவ்வும் படத்துக்கும் நாங்கள் பண்ணிய கதைக்கும் கொஞ்சம்  சின்னச் சின்ன ஒற்றுமைகள் இருக்கும். எங்கள் கதை இந்தப் படம் வருவதற்கு முன்பே முடித்து வைத்தது. லக்ஷ்மணனின் கம்பெனி அமெரிக்காவே உங்களை நம்பித்தான் இருக்கு என்று சொல்லி இந்த இடைக்காலத்தில் அவரை onsite அனுப்பிவிட எங்கள் script காகிதத்திலேயே தூங்கி விட்டது. நண்பரின் அனுமதியுடனும் ஆசியுடனும் அந்த முழு script-ஐயும் உங்களுக்காக என் வலைப்பதிவில் இதோ பதிகிறேன்.. திரைக்கதை வசனம் - அடியேன். கதை - லக்ஷ்மணன். இந்த credits கொடுத்துவிட்டு இந்தத் திரைக்கதையைப் படமாக்க யாரும் விரும்பினாலும் நாங்கள் தயார்.

-------------------------------------------
characters - Kaarthi sir - Don; Ragu - Caller ; Satheesh - Driver of don; Saanaa (short form of saravanan); Jimmy - nick name for gym body guy; Seetha - wife of don

Credits opening..
Scene 1 - black screen - Just voice

டேய் ரகு .. செமையா இருக்குடா இந்த book
இப்போதான் முடிச்சியா? செம கதைடா அது.. 
Credits..
அதுக்கு?.. அவரைப் போட்டுத் தள்ளிரலாம்னு சொல்றியா.. மூஞ்சிகளப் பாரு!
Credits..
சதீஷு.. அதெல்லாம் நெனைச்சா பண்ணலாம்யா
Credits ending…

Scene 2 – In long shot..
Kaarthi sir getting into his car and starts the engine..
He gets the car out of parking and ready to go.. but the car doesn’t move..
(music plays)a gym body guy comes there and pull him out of the car..

Scene 3 - near a temple
Seethamma gets a call from a stranger..

ஹலோ சீதாங்களா?.. உங்க husband கார்த்திக் பரமசிவம் கொஞ்ச நேரத்துக்கு முன்னே கார் ஆக்சிடெண்ட் ஒண்ணுல மாட்டி இங்க வந்து அட்மிட் பண்ணிருக்காங்க. நீங்க உடனே வர முடியுமா..

Conversations muted.. (music plays)
She calls for her driver..  he comes and they both started in the car..

Scene 4 – Inside a room

Camera shows a stack of books - The white tiger, Sigmund Freud books, some self-development books on developing sales call efficiency, Mills& Boons novel, vikatan, kumudham etc. .
near to them.. on the table, a guy is sitting and watching a movie in his laptop..
he sees the time in his watch and he picks up a phone which is next to his laptop and dials a number..


Scene 5 – a dark room with the light of mobile phone alone
Call - 1

ரகு: வணக்கம் சார்.. மிஸ்டர் கார்த்திகேயன் பரமசிவம்ங்களா?
கார்த்தி சார்: நீங்க யாரு?
: வணக்கம் சார்.. நாங்க Indian Institute of Kidnap and Blackmail-லேருந்து பேசுறோம். நீங்க இப்போ கடத்தப்பட்டிருக்கீங்க.. உங்க கடத்தல் அனுபவத்தைச் சுலபமாக்க எங்கள் சேவை உங்களுக்கு உதவி செய்யும்..
கா: என்ன? யோவ்.. யாருய்யா நீ? என்ன விளையாடுறீங்களா? சின்னப் பயலே கைல கெடைச்சே பிதுக்கிருவேன் பாத்துக்கோ
: கார்த்தி சார்.. உங்க பிரச்சனை எனக்குப் புரியுது. கொஞ்சம் பொறுமையா எனக்கு ஒரு வாய்ப்பு குடுத்தீங்கன்னா நிலைமை என்னன்னு உங்களுக்குப் புரிய வச்சுருவேன்.
கா: டேய்.. யார்டா நீ? என்னை...
: (இடைமறித்து) கார்த்தி சார்.. நீங்க இருக்கும் அறை இருட்டா இருக்கு இல்லையா?
கா: ஆமா
: உங்கள் கை கால்கள் எல்லாம் கட்டிப் போடப்பட்டிருக்கு இல்லையா?
கா: ...ஆமா
: நீங்க இப்போ பேசிக்கிட்டிருக்கிற செல்ஃபோன் உங்களுடையது இல்லை இல்லையா?
கா: ஆமா..
: நீங்க எங்கே இருக்கீங்கன்னு உங்களுக்கு இப்போ தெரியலை இல்லையா?
கா: அதைத்தான் யோசிச்சிட்டிருக்கேன்.. ஒரு சின்ன க்ளூ கெடச்சா போதும்.. தம்பி.. உன்னை ரொம்ப வருத்தப்பட வைச்சுருவேன்
: தகவல் அளித்தமைக்கு நன்றி சார்.. உங்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்னன்னு இன்னும் ரெண்டு நிமிஷத்துல நான் திருப்பி கூப்பிடுறேன்.. நன்றி.. வேறு ஏதும் தகவல் தெரிஞ்சுக்கணுமா சார்?
கா: வேற தகவலா? அடிங்கோத்.. #$@^%!%^%&.. என்னடா என்ன எங்கே வச்சுருக்கீங்க..கண்டுபிடிச்சேன்?...^$#^@%$&# மகனே ^^*$@%#%&&
: பொறுமையா ஒத்துழைத்தமைக்கு நன்றி.. விரைவில் நான் உங்களுக்குத் திரும்பவும் கூப்பிடுறேன் சார்.. (abruptly cuts the call)
(ticks a checklist he has in hand which contains details on number of calls to make and what to say in each of the calls to the kidnapped)

call - 2 (2 நிமிடங்கள் பிறகு)

: வணக்கம் மிஸ்டர் கார்த்திகேயன் பரமசிவம்
கா: டேய் #$@% யார்டா நீ?? என்ன விளையாடுறியா? நான் யாருன்னு தெரியுமாடா?
: (இடைமறித்து) நிறுத்துடா பா@#... #$@$!&^%* #@&&! $&#&%* #%$&%@#^! $#*&%*$@ $&%*# பெரிய மனுசன்னு மரியாதையாப் பேசிட்டிருந்தா கெட்ட வார்த்தைலாம் பேசுறே... போட்டிக்கு வர்றியா? ஒரு நிமிஷம் டைம்.. நீ நெறிய வார்த்தை பேசுறியா நான் நெறிய வார்த்தை பேசுறேனான்னு பாப்போம்.. மிஞ்சிப்போனா உனக்கு எத்தனை வார்த்தை தெரியும் ? (insert a really creative not-often-used ketta vaarththai here) 
கா: (அமைதி)
: என்ன அமைதியாயிட்டே... ? பயந்துட்டியா? என்ன 'நீ யாருன்னு தெரியுமாடா'? கடத்தல் பண்றவந்தானே நீ? கை மாத்தி விட்டுக் காசு பாக்குறவந்தானே நீ? நகை, drugs, வைரம், வயாக்ரா மேட்டர்.... எல்லாம் எனக்குத் தெரியும்.. weapons மட்டும் நீ deal பண்றதில்லியாமே.. உடம்புக்கு ஒத்துக்காதா என்ன ?
கா: யாருட்.. யாரு நீ...ங்க?
: டா போட வந்து யோசிச்சு நிறுத்தியிருக்கே.. நீ..க்கு அப்புறம் gap விட்டு ங்க போட்டுருக்கே.. பரவாயில்லே..you learn fast.. சீதா தானே உன் பொண்டாட்டி பேர்.. ? 987675**** - கரெக்டா? இப்போ எங்கட்ட தான் இருக்காங்க.. உன் ஃபோனும் எங்ககிட்ட தான் இருக்கு..உங்கிட்ட இருக்குறது எங்க ஃபோன்.. outgoing போகாது..
கா: ஹலோ.. நீங்க யாரு? என்ன வேணும் உனக்கு.. உங்களுக்கு?
: good..  கொஞ்சம் நம்புறே.. indian institute எல்லாம் புருடாதான்.. சும்மா கலாய்க்கலாம்னுதான் அப்பிடி ஆரம்பிச்சேன்.. ஒரு ரெண்டு நிமிஷம் டைம் தரேன்..பொறுமையா உன் situation என்னன்னு யோசி.. உனக்கு முழுசா பயம் வந்தப்புறம் நான் யாருன்னு சொல்றேன்..
cuts the call ; checklist tick


Image: Wikipedia


(the script continues in this post)




கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..