செவ்வாய்க் கிழமை கவிதை எழுத முடியாது
யோசனைகள்
எக்குத்தப்பாய்ப் பெருகி விடும்
மனம்
அதை வாய் பார்த்தே
தூக்கத்தைத் தொலைத்து விடும்
நாளை வேலைக்கு
அரை நாள் விடுப்பாகி விடும்.
முழு நேர இலக்கியம்
மாணவர்களுக்கும்
மாவீரர்களுக்கும்
மடையர்களுக்கும் மட்டுமே
சாத்தியமாகிறது.
என்னால்
செவ்வாய்க்கிழமை
கவிதை எழுத முடியாது!
-மதி
(படம் அளித்து உதவிய மனு மனோகருக்கு நன்றி. Manu Manohar's photostream)
Good one. Whom do you point as madayargal??
பதிலளிநீக்குThanks Ramanan.. not pointing to anybody in person .. Just a figurative usage.. The same person may be so brave at times and so foolish at times to pursue literature full time in the current world
பதிலளிநீக்குதூக்கத்தைத் தொலைத்து விடும் .. Exactly ..
பதிலளிநீக்குவணக்கம் நண்பா..அவசரங்களில் இன'று சுயத்தையும் சுதந்திரத்தையுமல்லவா விற்று விட்டோம்.ஆதங்கமான வரிகள்.வாழ்த்துக்கள் நண்பா.!!!!!!
பதிலளிநீக்குநன்றி பிரேம்நாத் .. நன்றி அதிசயா.. சுயத்தைத் தொலைத்துவிட்டு வாழ்வதைவிட ஒரு சில இரவுகளில் தூக்கத்தைத் தொலைத்து விட்டு வாழலாம் :-) நிறைய தொலைப்போம்.. நிறைய கண்டுபிடிப்போம் !
பதிலளிநீக்குநான் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்றொரு வலைப்பதிவு வைத்து இருந்தேன். இப்போது அது சாய்ராம்ஸ் என்று பெயர் மாறி விட்டது. நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு முறையும் (கவிதை கிறுக்கலைப் பதிக்க நினைக்கும்/முயற்சிக்கும் போது) பாதி நாள் விடுப்பாகி விடும் என்கிற கவலை தோன்ற தான் செய்கிறது.
பதிலளிநீக்குநிஜம்தான் சாய்ராம்.. நம் வாழ்க்கை செக்கிழுக்கும் மாட்டுக்கும் தேனுறிஞ்சும் வண்டுக்கும் இடைப்பட்ட நிலை. நேரம் விலை !
பதிலளிநீக்குMigavum Arumaiyaana kavithai...Aanaal thangalidam Sikkiyathu sevvaaikizhamaidaana?
பதிலளிநீக்குசெவ்வாய்க்கிழமை ஒரு குறிப்பு தானே...
பதிலளிநீக்கு