கழுதைக்குக் கலியாணம் குட்டிச்சுவரிலே


திரிஷா என்றது மனம்.
கண்ணாடியில் முகம் பார்த்தது.
சரி திவ்வியா என்றது.
சட்டென்று சங்கீதா என்றது.
லேசாய்ச் சில நேரம்
லாவண்யா பெயரையும் சொன்னது.
பிறகொரு பின்னிரவில்
கவிதா என்று கத்தியது.


அப்புறம் சில காலம்
கவிதா கவிதா என்றே இருந்தது.
என்னமோ ஏதோ
திடீரென்று ஒரு நாள்
இனி மௌன விரதம்
என்று முடிவெடுத்துவிட்டது.
குரங்கு மனம்
கொஞ்ச காலம் சும்மா இருந்துவிட்டு
ஒருவேளை அகிலாவோ
என்று ஆரம்பித்தது.
இன்றைய நிலவரப்படி
அபிநயாதான் என்று சாதிக்கிறது.
இப்படியே நாளையும்
கீதா மேரி ஆயிஷா என்று
இது மட்டும் கிடந்து
சொல்லிக் கொண்டே இருக்கும்.
ஊமைக் கோட்டாச்சிகள் !
ஒவ்வொருத்தியும்.
கடேசியாய் அம்மையிடம் சொல்லி
புளிக்குழம்பு பக்குவம் தெரிந்த
நல்ல திருநெல்வேலிப் பிள்ளைமார்ப் பெண்ணாய்
ஒரு சுபயோக சுபதினத்தில்
கட்டிக்கிட வேண்டியதுதான் !

- மதி

(படம் அளித்து உதவிய பிரையன் ரிச்சர்ட்சனுக்கு நன்றி ... Brian Richardson's photostream)

கருத்துகள்

  1. தல, அதுக்குள்ள மனசு தள‌ர்ந்துட்டா எப்படி...... இன்னும் வாய்ப்புகள் இருக்கு நமக்கு. வாங்க தொடர்ந்து தேடுவோம் ;)

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜூலை 14, 2012

    Ha ha ha... Superb na

    பதிலளிநீக்கு
  3. @சிவா (கருணாஸ் வாய்ஸ்) நமக்கு ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி ! இப்போ சமீபத்தில கல்யாணம் பண்ணுற என் நண்பர்கள் சிலரை வெச்சுப் பண்ணின கவிதை இது .. நம்ம தொடர்ந்து தேடுவோம் :-)

    @அனானிமஸ் : நன்றி தம்பி/தங்கச்சி :-)

    பதிலளிநீக்கு
  4. ஆஹா என்ன ஒரு தேடல்,என்ன ஒரு முயற்சி!!நீங்க நல்லா வருவீங்க பாஸ்....!அருமையான வரிகள்இத தா எல்லாரும் பண்றாங்க...ணாரும் வெளிப்படயா சொல்றதில்ல...வாழ்த்துக்கள் சொந்தமே!
    ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

    பதிலளிநீக்கு
  5. நன்றி அதிசயா ..... இது எல்லாரும் பண்ணுற விஷயம்தான் :-) சரியாச் சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாசெப்டம்பர் 15, 2012

    Thalaippu thernthedupathil vallavaraai ulleergaL.Miga poruthamaana thaliappu.Nija ulagin ethaarthathin velipaadu...

    பதிலளிநீக்கு
  7. நன்றி அனானிமஸ் ... என் எழுத்தில் பலரும் கவனிக்காத ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கிறீர்கள் .. மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..