அண்டரண்டப் பட்சி
விக்கிரமாதித்தன் கதைகளில் வரும்
அண்டரண்டப் பட்சி ஒன்று
உலக எதிர்காலம் பற்றிய
குறி ஒன்றைச் சுமந்தவாறே
ஓயாமல்
சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கிறது.
பாவம்
அதற்கு
உட்காரத்தான்
மரமே இல்லை.
- மதி
படம் அளித்து உதவிய ப்ரவைன் செஸ்டருக்கு நன்றி . Pravine Chester's photo stream
அண்டரண்டப் பட்சியைக் கதைகளில் வாசிக்காதோருக்காக ஒரு சின்ன விளக்கம். விக்கிரமாதித்த மகாராஜாவுக்கு பட்டி என்றொரு மதியூக மந்திரி இருந்தார். பட்டி பறவைகளின் மொழி அறிந்தவர். அண்டரண்டப் பட்சிகள் பொதுவாக மர உச்சிகளில் அமர்ந்து கொண்டு மர நிழலில் இளைப்பாற வருவோரின் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைத் தமக்குள் பேசிக் கொள்ளும். "அதோ கீழே அமைதியாத் தூங்கறான் பாத்தியா .... அவனுக்கு அடுத்த மாசம் வடக்குத் திசையில் இருந்து ஒரு பெரும் செல்வமும் கிழக்குத் திசையிலிருந்து ஒரு சின்ன ஆபத்தும் வரப் போகுது" என்பது போல் . மகாராஜாவும் பட்டியும் இப்படி மரத்தடிகளில் ஒதுங்கின பல தடவைகளில் இப்பறவைகள் பேசிக் கொண்டிருப்பதை மந்திரி பட்டி கேட்டு உணர்ந்து பல சாகசங்கள் புரிவார்.
முதல் முறை வாசித்தபோது விளங்கவில்லை அர்த்தம் . ஆனால் அர்த்தம் புரிந்தபோது அதில் பொதிந்திருந்த உண்மை சுருக்கென்று உறைத்தது. அருமை அருமை.
பதிலளிநீக்குநன்றி அனாமிகா .. 2012 டிசம்பர் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது .. கிடைக்கும் நிழலைப் பத்திரமாகப் பிடித்துக் கொள்வோம் :-)
பதிலளிநீக்கு