கவிஞனின் குழந்தைகள்




என்றோ ஒரு நாள்
ஒரு பொறியில் கருவாகி
உடனே ஆளாகி
அச்சில் ஏறிவிடும்
கவிதைகளைக் கண்டு
என்றாவது எழுதுவோம் என்று
கிடப்பிலேயே வைத்திருக்கும்
மூத்த கருக்கள் எல்லாம்
சண்டைக்கு வருகின்றன.
அட
சமாதானம் செய்யப் போனால்
ஆங்கொரு கரு சட்டென்று உருவாகி
ஆளாகி அச்சேறி நிற்கிறது.

-மதி

கருத்துகள்

  1. பெயரில்லாமே 07, 2012

    சிந்தனைக் கற்றைகளையும் கவிதையாக்கும் அன்பருக்கு என் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தணிக்கை செய்யாது மூத்தவர்களையும் அச்சேற்றுங்கள்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நன்றி .. அதிசயா .. என் வலைப்பக்கத்துக்கு முதன் முதலில் வருகிறீர்கள் .. வாழ்த்துக்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..