வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் சார்
வார இறுதியின் விடுப்பில்
ஊர் வந்து திரும்புகையில்
உணவகத்தில் பேருந்து நிற்கிறது.
காதில் விழும் வசனம்
கருத்தில் இறங்குகையில்
எனது இருத்தலின் நிலையொடு
கரைந்து திரிந்தொலிக்கிறது.
"வாழ்க்கை ஒரு ரெண்டு நாள் நிக்கும் சார்
ஊர்க்காத்து
வீட்டுச் சாப்பாடு
சின்னக் குழந்தை
சொந்தம் பந்தம்
எல்லாம்
ரசிக்கிறவங்க
ரசிக்கலாம்
..........."
அசைபோட்டுப் பார்க்கையில்
விஷயம் முழுதாய் உறைக்கிறது.
புன்னகைக்கிறேன்.

கொஞ்சம் ஊர்ப்புகை சுவாசித்து
ஒரு தேனீர் பருகி
பத்து நிமிஷம் கழியவும்
பயணம் தொடர்கிறது.
நாளை
திங்கள் கிழமை.

வண்டிச்சக்கரங்களுக்கிடையில்
எங்கோ தொலைகிறது
ஒரு நப்பாசை.

- மதி

(படம் கொடுத்து உதவிய ஜூஸ்ட் பக்கர்க்கு நன்றி)

கருத்துகள்

 1. வாழ்க்கை ஒரு ரெண்டு நாள் நிக்கும் சார்
  ஊர்க்காத்து
  வீட்டுச் சாப்பாடு
  சின்னக் குழந்தை
  சொந்தம் பந்தம்
  எல்லாம்
  ரசிக்கிறவங்க
  ரசிக்கலாம்


  செம , மிகவும் ரசித்தேன். சின்ன கவிதை ஆனால் கவிதை வெளிப்படுத்தி இருக்கும் தாக்கம் அதிகம்.

  Short, sharp, sweet :)

  பதிலளிநீக்கு
 2. //வாழ்க்கை ஒரு ரெண்டு நாள் நிக்கும் சார்.
  பொருத்தமான வரிகள் ..

  பதிலளிநீக்கு
 3. நன்றி சிவா .. நன்றி பிரேம் :-)

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாமே 07, 2012

  வாழ்க்கை-பேருந்து!! என்ன ஒரு உவமைப்பொருத்தம்! அருமை!

  பதிலளிநீக்கு
 5. thanks anonymous .. good to see your comments after long on the blog (i hope you are the same anonymous reader:-) )

  பதிலளிநீக்கு
 6. "வாழ்க்கை ரெண்டு நாள் நிக்கும் சார்"
  நிற்காமல் ஓட செய்யும் வாழ்க்கை,
  நீண்ட பேருந்து பயணத்தின்
  இடையேயான BREAK, இதை
  அணுபவித்தர்கள் இந்த வரிகளின்
  உணர்வை ரசிப்ப்வர்கள்

  சரவணகுமார்

  பதிலளிநீக்கு
 7. நன்றி சரவணக்குமார் :-)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..