இலக்கிய வயிறுகள்
பெரும்பாலும்
மெலிந்தே இருக்கின்றன .
புது வரவுகளை
எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன .
அவை வரும் வரை
மாடுகளைப் போல
தின்று செரித்த சுவைகளை
அசை போட்டுக் கொண்டு இருக்கின்றன.
கழுதைகளைப் போல
காகிதச் சுவை கூட
அறிந்து வைத்திருக்கின்றன .
உலகின் கண்களுக்குத் தெரியாமல்
அங்கே
ஓர் அமில மழை
ஓயாது பெய்து கொண்டே இருக்கின்றது.
ஒரு நெருப்பு அதில்
அணையாது கனன்று கொண்டே இருக்கின்றது.
இருந்தும் அவை
ஒரு துளி அமுதம் கிடைத்தால்
பேய்ப் பசியும் கூட ஆற்றிக்கொண்டு
உண்ட மயக்கத்தில் திளைக்கவும்
பழகி வைத்திருக்கின்றன.
உலகின் மொத்தப் பசியையும்
உலகின் மொத்தத் திருப்தியையும்
அவற்றால்
ஒருசேர உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.
பல அம்சங்களிலும்
இலக்கிய வயிறுகள்
பெரும்பாலும்
இலக்கிய மனங்களைப் போலவே இருக்கின்றன.
- மதி
(எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'வாசக பர்வம்' என்ற புத்தகத்தின் பாதிப்பில் உருவான ஒரு கவிதை இது. பசி பழகினவாறே படைப்பும் பயின்று வரும்/வந்த படைப்பாளிகளுக்கு இந்தக் கவிதையை அர்ப்பணிக்கிறேன். படம் அளித்து உதவிய ஸ்மூரென்பர்குக்கு நன்றி)

கவிதை அருமை.ஆனாலும் உங்கள் முத்திரை இல்லாத மாதிரி தோன்றுகிறது.பரீட்சார்த்த முயற்சி, மென்மேலும் மெருகேற வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குஇயல்பான வரிகளில் இனிமையான கவிதை ... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி சிவா .. நன்றி அரசன் :-)
பதிலளிநீக்குஅருமை!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
Thanks Raja
பதிலளிநீக்கு