ஒரு சோறு பதம்

அரசாங்க வேலைன்னா சும்மாவா !!
கீழைத் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் வகையறா ஊர்களுள் , அதிகம் பசுமை பழகாத , வெயிலும் புழுதியும் புழுக்கமும் பரந்த ஒரு ஊரில் அதிகம் சுவாரசியம் இல்லாத ஓர் அரசாங்க அலுவலகத்தில் சுத்தமாகச் சந்தை மதிப்பே இல்லாத ஒரு வயசானவர் எப்போதும் போல ஒரு நாளைக் கழித்ததில் பெரிய விசேஷம் இல்லை. என்றாவது ஒரு நாள் என்ற ரீதியில் என் போன்றோர் அங்கே இருக்கையில் அவரும் அங்கே இருந்தது தான் இந்தக் கதை உருவாவதற்குப் பெரும் பங்காற்றியிருக்க வேண்டும்.

கொஞ்சம் பழக்கமான ஓர் ஆசிரிய நண்பருடன் - புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பவர் - ஒரு வேலையாக அந்த ஊரின் உதவித்தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒரு முழு நாளைக் கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனக்கும் பெரிதாக வேறு வேலை ஏதும் அன்று இல்லை என்பது வேறு விஷயம்.

தாருக்கும் தரைக்கும் வேற்றுமை தெரியாத ஒரு குறுகிய தெருவில், ஒரு பழைய பெரிய திரையரங்கத்தினை ஒட்டிய ஒரு மிகக் குறுகிய சந்துக்குள்ளே அமைந்திருந்தது அலுவலகம். காலை ஒன்பதரை மணிக்கே வந்து விட்டிருந்தோம். எங்களுக்குப் பிறகு சீரான இடைவெளியில் பதவி அடிப்படையில் அலுவலக ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். ஒரு பத்தரை வாக்கில் கொஞ்சம் தடபுடலோடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அம்மா கடைசியாக வந்து சேர்ந்தார். கொஞ்சம் அதிகமான முகப் பூச்சுகளும் கட்டையான அதிகாரக் குரலுமாக உஷா உதூப்புக்கும் 'தூள்' சொர்ணாக்காவுக்கும் சொந்தம் போல இருந்தார் அலுவலரம்மா. அதே 'ஒரு ரூபாய்' பொட்டும் கூட.

அலுவலகக் கட்டடம் ஒரு காலத்தில் அந்தத் திரையரங்கத்தின் அலுவலகமாக இருந்திருக்க வேண்டும். கட்டடத்தின் மேலே ஓரிரு எழுத்துகளை இழந்து 'அன்னை மேரி' என்ற திரையரங்கின் பெயர் இருந்தது. அன்னை மேரி திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த படம் அந்த அரங்கத்தின் நொடித்துப் போன நிலையைக் காட்டியது. அரசாங்கத்தின் தொடக்கக் கல்வி நொடித்துப் போனதா இல்லையா என்பது அரசியல் விஷயம். பேச வேண்டாம்.

அங்கே காத்திருக்கும் போது தான் அந்தப் பெரியவர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததுமே எழுத்தர் ஒருவர் "ஐயா உங்க விஷயத்தைத்தான் தேடிக்கிருக்கோம். ஆயிரும். கொஞ்ச வெளியே காத்திருங்க" என்றார். பழக்கமான ஆள் தான் போல. கொஞ்சம் ஒடிசலாகவும் குள்ளமாகவும் இருந்தார். மழுங்கச் சிரைத்த முகம். கையில் ஒரு மஞ்சப்பை. அவரும் எங்களோடு காத்திருக்கத் தொடங்கினார். வெளியில் இருந்த வேறு சிலருக்கும் அவர் பழக்கமாகத் தெரிந்தார். அவர்களிடம் அவர்களுடைய வேலை விஷயங்களையும் முன்னேற்ற நிலைகளையும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

.....................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...




- மதி

கருத்துகள்

  1. Sema na :)
    poster dialogue wait,
    kadaisi twist unexpected

    பதிலளிநீக்கு
  2. நன்றி சிவா... இந்தக் கதையில் முக்கால்வாசிக்கு மேல் உண்மைச் சம்பவங்களே .. அந்தச் சுவரொட்டி என் கற்பனையல்ல... நான் கண்டதை அப்படியே குறிப்பெடுத்து கதையில் எழுதியிருக்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  3. ஒரு சம்பவமாக இந்த கதை அழகாக சொல்லப்பட்டுருகிறது... (கடைசி திருப்பம் சுவாரசியம்...)

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சம் அதிகமான முகப் பூச்சுகளும் கட்டையான அதிகாரக் குரலுமாக உஷா உதூப்புக்கும் 'தூள்' சொர்ணாக்காவுக்கும் சொந்தம் போல இருந்தார் அலுவலரம்மா. ...> He.. He... :)

    பதிலளிநீக்கு
  5. Nice story, but takku nu mudinjuta mathiri irunthuchu.. Characterization + Description ellam asathal..

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஆனந்த் .. நன்றி பிரேம் .. இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் இன்றும் அந்த அலுவலகத்தில் உலாவிக் கொண்டிருக்கலாம் .. எப்போதாவது இராமநாதபுரம் பக்கம் போனால் சொல்லி விடுங்கள் .. விலாசம் தந்து விடுகிறேன்... அல்லது அருகில் இருக்கும் எந்த அரசு அலுவலகத்திலும் முயன்று பார்க்கலாம் ...

    பதிலளிநீக்கு
  7. கதை நன்றாக இருந்தது. முடிவு எதிர்பாராததாக இருந்தது. நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ரமேஷ் .. உங்களிடம் இருந்து மறுமொழி வந்தது மிக சந்தோஷம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..