வெண்ணிலவின் வடிவில் ஒரு வடு
சைக்கிள் பழகப் போய்
சில்லறை வாரிச் சேர்த்த
சிறு வயதின் தழும்புகள்
என் முழங்கால்களில் இன்னும்
அலங்காரமாய் இருக்கின்றன.
இன்று அவற்றை
வருடிப்பார்க்கையில்
வலிப்பதில்லை.
காயத்தின் நினைவோடு
பிராயத்தின் மற்ற பரவசங்களும்
சேர்ந்து கொள்கின்றன.
அது போலொரு தழும்பாய்த்தான்
அவளையும்
மாற்றிவிட்டிருக்கிறேன்.
சுலபமாய் ஒன்றும் இருக்கவில்லை.
சைக்கிள் பழகின இரண்டாவது ஆண்டில்
கைககளை எல்லாம் விட்டு விட்டு
ஓட்டியிருக்கிறேன்.
காதல் பழகிப்
பட்டுக் கொண்ட காயத்தை
ஆற்றும் முயற்சியிலேயே
அறுநூறு நாட்களை ஓட்டியிருக்கிறேன்.
அவள் மேலும் காதல் மேலும்
கோபமோ வெறுப்போ இல்லாமல்
என் மேலும் இனிமேலும்
சந்தேகங்கள் வாராமல்
பக்குவமாய்ப் பயணம் தொடர்கிறேன்.
இந்தத் தழும்பின் தொடுகை
ஒரு அழகான நினைவுக்கூட்டைத்
திறந்துவிடுகிறது.
வலி ஏக்கம் ஏமாற்றம்
இவற்றோடு சேர்த்து
சந்தோஷங்களும் சிரிப்புகளும்
கனவுகளும் கவிதைகளும்
சுகமான பகிர்வுகளும்
சமமான தயக்கங்களும்
சேர்த்தே இந்தக் கூட்டைக் கட்டியிருக்கிறேன்.
நிலவும் இரவும்
இசையும் தனிமையும்
மௌனமும்
ஏக்கச் சுவை ஏற்காமல்
இன்று
இயல்பாய் ருசிக்கின்றன.
நான்
காதலைக் காதலிக்கிறேன்.
என் காதல்
அவளாக இருந்தபோது
அவளைக் காதலித்தேன்.
- மதி
இந்த கவிதை என் நெஞ்சை தொடும் போது மெல்ல என் வலது கை என் இடது கை புஜத்தின் மீது உள்ள தழும்பை தொட்டு பார்க்கிறது... அது சைக்கிள் காயம் அல்ல... கத்தியால் அவள் பெயர் எழுதின தழும்பு... உன் பெரும்பாலான கவிதைகள் என் சொந்தக்கதையோடு தொடர்புடையதாகவே உள்ளன....
பதிலளிநீக்குநன்றி SVK.. கத்தியின் காயத்தை விட கண்களின் காயம்தான் அதிகம் வலித்திருக்கும்.. நம் பயணங்கள் மிக நெருக்கமான ஒற்றுமைகளோடே வந்து கொண்டிருக்கிறது.. அடுத்த திருப்பத்தில் என்ன காத்திருக்கிறதோ ? வரட்டும் பார்ப்போம் :-)
பதிலளிநீக்குEnna daa ellaarum Tamil la eludhuraangale, naama eppadi eludhardhu nu oru guilty peeling unga blog la comment pannum podhu thaan na yerpadudhu.
பதிலளிநீக்கு@anand.. language mukkiyam ille.. comment dan mukkiyam :-)
பதிலளிநீக்குஇந்தக்கவிதையின் வரிகள் தங்களது ஆழமான காதலை பிரசுரிக்கின்றது...
பதிலளிநீக்குநன்றி anonymous ..
பதிலளிநீக்குமெல்லிய உணர்வை அழகாய் வெளிபடுத்திய விதம் சிறப்பு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி அரசன்
பதிலளிநீக்குசைக்கிள் , காதல் என்ன ஒரு உவமை ... கடைசி பத்தி மிகவும் ரசித்தேன் ..
பதிலளிநீக்குநன்றி பிரேம்நாத் அண்ணா ..
பதிலளிநீக்குநான்
பதிலளிநீக்குகாதலைக் காதலிக்கிறேன்.
என் காதல்
அவளாக இருந்தபோது
அவளைக் காதலித்தேன்.
..
Enjoyed it..
hey.. good poem!
பதிலளிநீக்கு@vijay and vaibhavi .. thanks a lot
பதிலளிநீக்குஎண்ணத்தின் வெளிப்பாட்டை எளிமையாகச் சொன்ன அழகிய காதல்க் கவிதை வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
பதிலளிநீக்குபகிர்வுக்கு ..............
@அம்பாளடியாள் .. முதல் முறை என் பதிவிற்கு வருகிறீர்கள் . நன்றி
பதிலளிநீக்கு