காதலின் வட்ட தெய்வம்
பசிக்கிறது.
பேய்த்தீனி தின்கிறேன்.
கண்தூங்கும் பொழுதெலாம்
மரணமே தொட்டு விழிக்கிறேன்.
இருந்தும்
உள்மனம் ஒயாது குடைகிறது.
"உன்னைக் காதலிக்கிறேனோ?"
இஷ்ட தெய்வத்தைத் துதித்து
வட்ட தெய்வத்தை எடுத்து
பூவா தலையா
போட்டுப் பார்த்தேன்.
பூவின் பக்கம்
கட்டை விரலில் ஜெயம் காட்டியது .
பூவில் காதல் வைத்துப்
புன்னகைத்துச் சுண்டிவிட்டேன் .
கைக்குள் தலை விழுந்தது .
தலைக்குள்
ஏதோ ஓங்கி விழுந்தது .
"மூன்று முறை போட்டுப்பார்
அதிகம் விழுவது எதுவோ
அஃதே விதி எனக் கொள்" .
அப்படியே ஆகட்டுமே !
தலை
தலை
தலை .
"உன் தலை......
சரியாப் போச்சு போ"
"பொறுமை பொறுமை ...
சட்டப்படி ஐந்து முறை வேண்டும்.
மூன்றெல்லாம் செல்லாது.
கடைசியாக நியாயமாக
ஐந்து முறை சுண்டு"
சட்டமாமே !
சுண்டினேன் .
தலை தலை தலை தலை தலை
புது நாணயம் .
தனியே எடுத்து வைத்தேன்
அப்புறம் கவனித்துக் கொள்ளலாம்.
இரண்டு பக்கமும் எடை சமமில்லை .
நாளை அளந்து பார்த்துவிட்டு
அரசுக்கு எழுதிப் போட வேண்டும் .
சொல்ல மறந்து விட்டேனே !
இந்தச் சம்பவத்தில்
ஏதோ ஒரு சுகநொடியில்
கேள்விக்கும்
விடை கண்டுகொண்டேன் .
- மதி
அருமை...
பதிலளிநீக்குகாதலின் போது அனைவரும் செய்வதை மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்
இந்தச் சம்பவத்தில்
பதிலளிநீக்குஏதோ ஒரு சுகநொடியில்
கேள்விக்கும்
விடை கண்டுகொண்டேன்
Appattamaana unmai!!!!
நன்றி .. @anonymous, கூடிய சீக்கிரம் anonymousஆக வலைப்பூ படிப்பவர்களைப் பற்றி ஒரு கவிதை எழுதலாம் என்று கூட தோன்றுகிறது
பதிலளிநீக்குFb la irkra maathiri like option irunthiruntha padaipaalarin comment i like seithiruppen!!!!
பதிலளிநீக்குAnyways varaverkathakka mudivu!!!
அருமை அருமை
பதிலளிநீக்குதான் எதிர்பார்ப்பது கிடைக்கும்வரை முயல்வது
இல்லையெனில் அதற்கொரு
புதுவிளக்கம் கொடுத்துக்கொள்வது
கதலர்களின் ம்ன நிலையை
மிகத் தெளிவாகச் சொல்லிப்போகும் தங்கள் திறன்
பாராட்டுக்குரியது நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்