ஆயிரம் friend request கொடுத்த அபூர்வ அழகுராஜாகாதல் காதல் காதல்
அதற்கா இத்தனை
ஓடல் தேடல் மோதல் !

முடிவு செய்தேன்
முதலில் ஒரு நட்புக்கு
முயற்சி செய்வேன் !

தனியே தனியே
வாழ்ந்தது போதும்
இணையம் இனியே
வழி காட்ட வேண்டும் .

அத்தினி சித்தினி பேதமில்லை
அட்டோ அழகோ பரவாயில்லை
அவள் பெண்ணாயிருத்தல் ஒன்றே போதும்
அவளிடம் வேண்டுவேன்
அமர நட்பு !
முறைப்பெண் சூழ்ந்த மாமன் அல்ல ,
நான்
சீதை சேர்ந்த இராமன் அல்ல !
இராவணன் என் பாத்திரம்
கீழ்வரும் அதன் சூத்திரம் ...
நூற்றில் ஒரு பெண்
சரியென்றாலும்
ஆயிரம் ஆகையில் ?
பத்து தலை !
வாழ்க வலை !

இங்கே
களிம்பு ஜாலங்கள் தேவையில்லை
கணிணி வித்தை கொஞ்சம் போதும்
பதினான்கே நொடிகளில்
சிகப்பழகு பெறலாம் !
ஆதலின்
புகைப்படம் கண்டு
பெருங்கனா காணேன் .
மென்பொருள் போஷாக்கு
என் படத்துக்கும் தானே !

அவள் சுவற்றில் வலிந்து
குசலம் கேட்பேன் .
அவள் சிரித்தால் வழிந்து
கைக்குட்டை நனைப்பேன் !

அவள் பெருமைகள் பலவும்
நன்குரைப்பேன் .
அவள் நாய்க்குட்டி வளர்த்தால்
நான் குரைப்பேன் !

அவள் தும்மினாலும் அதை
விரும்பி வைப்பேன் .
அவள் பிறந்த நாள் அறிந்து
விருந்து வைப்பேன் !

அவள் பண்ணையில்
ஆடுகள் மேய்த்திருப்பேன் .
அவள் தென்னைக்கும்
நானே உரமாயிருப்பேன் !

அவள் புகைப்படப் புராணம்
பாராயணம் செய்வேன் .
அவள் போகும் தளமெலாம்
பிரயாணம் செய்வேன் !

தடம் தெரியாமல் கவிதைகள் திருடி
அவள் அழகினை வாழ்த்துவேன் .
கொஞ்சம் அசந்தாளாயின்
பிறவிக் கவிஞன் நான் என்றே
வியப்பில் ஆழ்த்துவேன் !

ஆயிரம் நட்புக்கு வேண்டுகோள் விடுத்த
அபூர்வ அழகுராஜா நான்.
அழகுராணியே தான் என்றில்லை
ஒரு அருக்காணி போதும்
அகமகிழ்வேன் !

- மதி

(என் நண்பன் மாப்பிள்ளைக்குச் சமர்ப்பணம்)

கருத்துகள்

 1. இராவணன் என் பாத்திரம்
  கீழ்வரும் அதன் சூத்திரம் ...
  நூற்றில் ஒரு பெண்
  சரியென்றாலும்
  ஆயிரம் ஆகையில் ?
  பத்து தலை !
  வாழ்க வலை !

  - Puriya konjam time eduthaalum.. Purinja appuram nachunu irukku..!!

  Andha annana naan kettadhaa sollunga..!! :)

  பதிலளிநீக்கு
 2. antha MAPPILAIKKU SEIKRAM ORU
  girl friend kidaikka vaalthukkal..

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாபிப்ரவரி 16, 2011

  அவள் சுவற்றில் வலிந்து
  குசலம் கேட்பேன் .
  அவள் சிரித்தால் வழிந்து
  கைக்குட்டை நனைப்பேன்!!

  Edhaartham!!Arumai!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..