எல்லாமும் காதல் ! இல்லாதது இலக்கியம்
குதிங்காலில் கூச்சம் காட்டலாம்
கரும்பாலே பாணம் பூட்டலாம்
கரைந்து மனம் மருளச் செய்யலாம்
கணம் யுகம் பிறழச் செய்யலாம்
குளிர் நீரை முகத்தில் அறையலாம்
கொன்று குருதி குடித்துச் செல்லலாம்
குறைந்தபட்சம் இவற்றில்
ஏதாவது ஒன்றாகவும்
எல்லாமாய் இல்லாமலும்
இருக்கிறது
நல்ல இலக்கியம்
கண்டிப்பாய் இவற்றுள்
அத்தனையுமாய் அமைகிறது
காதல்
- மதி
இறுதி வரிகள்
பதிலளிநீக்குகாதலை மட்டும் அல்ல
கவிதையையும்
உச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது
தொடர வாழ்த்துக்கள்...
மிக ரசித்தேன் ....
பதிலளிநீக்குஆஹா... அருமை...
பதிலளிநீக்குNalla Sinthanai!
பதிலளிநீக்குthanks all :-)
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
vaalthukkal.
பதிலளிநீக்கு