காதல்
என்னைப் பல உயரங்களுக்கு
இட்டுச் செல்கிறது
அண்ணாந்து பார்த்தால்
வானம் தலையில் தட்டுகிறது
குனிந்து பார்த்தால்
பூமி உள்ளங்காலில் உருள்கிறது
என்னை அங்கே ஏற்றிவிட்டு
அடிவாரத்தில் நின்று
ஓரக்கண்ணில் சிரிப்பவளே
சிங்காரி !
எப்போதடி
ஏறி வரப் போகிறாய் ?
- மதி
(கவிதாட்சரம் 4 நாட்களில் முற்றும்)
காதலால் கிடைத்த விஸ்வரூபம்
பதிலளிநீக்குரசிக்கும்படியாக உள்ளது
வாழ்த்துக்கள்
விரைவிலே வருவாங்க ...
பதிலளிநீக்குசிந்தனை அருமை
Rasanai ullathuku nalla seithi viraivil vara yaam vendikolkirom!!
பதிலளிநீக்கு