சந்தோஷம் அதிர்ச்சி


வெறும் மூன்று நொடிகள்
போலத்தான் தோன்றியது.
என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய்
உன் பார்வை
வேண்டும் என்றும் சொல்லாது
போதும் என்றும் சொல்லாது
ஆயுசுக்கும் தேடினாலும்
ஆழம் மட்டும் தெரியாது.

சடாரென்று ஒரு கணம்
முகமெல்லாம் ஒளிர்ந்து
சம்மதமாய் மலர்ந்தாய்.
பரவசமான அதிர்ச்சியில் நான்
புரைக்கேறி விழித்தேன்.

கனவு.

மீண்டும் கண்மூடிப் பார்த்தேன்
பழையபடி வெறித்தாய்
புரண்டு புரண்டு யோசித்தேன்
360 டிகிரியிலும் தனித்தனியாக
முயற்சித்துப் பார்த்துவிட்டேன்.
பயனில்லை.
அதே மௌனப் பார்வை !

பாவிப் பொண்ணே
எதுவாயிருந்தாலும்
சொல்லிட்டுச் செய்ய மாட்டியா ?
தூக்கத்தைத்தான் கெடுப்பே
இப்போ
கனவையுமா ?

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

  1. பெயரில்லாஜனவரி 14, 2011

    Ivai yekkangal thathumbum varigalo?

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமாக .. இது ஒரு உண்மைக்கனவும் கூட :-)ஏக்கத்தை விட ஒரு பரவசம் தான் நிஜத்தில் மேலோங்கி இருந்தது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..