ரிஷிமூலம் நதிமூலம் விழிமூலம்


எதேச்சையாய்த்தான்
முதலில் பார்த்தேன்
பிறகு
எட்டிப் பார்த்தேன்
திரும்பிப் பார்த்தேன்
தேடிப் பார்த்தேன்
கவனித்தேன்
இரசித்தேன்
தூங்காமல் யோசித்தேன்
தெரியாமலேயே நேசித்தேன்
படிப்படியாய்ப் புதிரவிழ்த்தேன்
காதலென்று கண்டுகொண்டேன்!

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

  1. பெயரில்லாஜனவரி 09, 2011

    Sirukavithaiyaanalum muzhumai petririkirathu!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜனவரி 09, 2011

    Kaadhal,iyarkai ivatril ellam kaal pathitha padaipaaliku Natpu patri padhivatharku neram pothavillai polum!


    padhivai edhirpaathu!

    பதிலளிநீக்கு
  3. @ அதே anonymous... காதலையும் இயற்கையையும் விட நட்பு என் வாழ்க்கையில் பெரிய பங்கு ஏற்றிருக்கிறது. ஆனால் ஏனோ இது வரை அதைக் கவிதைப்படுத்திப் பார்க்கத் தோன்றவில்லை. அதுல பாருங்க, காதலை அடிக்கடி சத்தம் போட்டு அசிங்கமா சொல்லிகிட்டே இருப்போம். ஆனால் நல்ல நட்பு அதிகமா publicityய விரும்பிறதில்லே ... நீங்க சொன்னதும்தான் எனக்கே தோணுது !!! (எழுதலைங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு:-) )

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஜனவரி 10, 2011

    Adhilum Kaal vaithu paarkalaame!
    Ethirpaarkalaamaa?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..