அடி ஒரு யுகமாய் பத்தடியில் அவள்


நான்
ஒரு பெரிய பயணம் போனேன்
எனக்கெனப் பிறந்த
பெண்முகம் தேடி.

நிமிஷங்களாய்
மாசங்களாய்
வருஷங்களாய்
நீண்டது என் பயணம்.
வழியெங்கிலும் நினைவுகளைச்
சேமித்தபடியும்
சிதறவிட்டும்
சென்றுகொண்டிருந்தேன்.

ஆங்காங்கே
சில அழகிய பெண்களின்
புருவ நிழலில்
இளைப்பாறிக் கொண்டேன்.
பயணம் மட்டும்
முடியவே இல்லை.

அப்புறம்
ஒரு மாலைப் பொழுதில்
பத்தடி தூரத்தில்
உன்னைக் கண்டேன்.
சூரியன்
உன் கன்னத்தில் பிரதிபலிக்க
இரவு
உன் கூந்தலில் ஒளிந்துகொள்ள
வெறும் காற்று
நீ சுவாசித்துத் தென்றலாக
ஓசைகள்
உன் நாவசைவில் கவிதைகளாக
காதல்
உன் கண்களால் எனையழைக்க
ஆஹா
என் பயணம் முடிந்ததென்று
எகிறிக் குதித்தேன்
வானம்
என் தலையில் தட்டித்
தகவல் சொன்னது
நான் இதுவரை
கடந்தது காட்டிலும்
இந்தப் பத்தடி தான்
அதிக தூரமாம்.

தேடிப் பிடித்த
என் காதலியே !
ஒரு கண்ஜாடை காட்டடி
காற்றிலேறி வருகிறேன்.


- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

 1. பெயரில்லாஜனவரி 08, 2011

  Padipaaliyin padaipugalai rasipavar arimugam thevai illai endru karuthukiraar polum.

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாஜனவரி 08, 2011

  வானம்
  என் தலையில் தட்டித்
  தகவல் சொன்னது
  நான் இதுவரை
  கடந்தது காட்டிலும்
  இந்தப் பத்தடி தான்
  அதிக தூரமாம்.

  Miga Svaarasiyam.(Thalaippin Ragasiyam ithuvandro?)

  தேடிப் பிடித்த
  என் காதலியே !
  ஒரு கண்ஜாடை காட்டடி
  காற்றிலேறி வருகிறேன்.

  Yekkangalin velipaadu.

  பதிலளிநீக்கு
 3. அருமையான சிந்தனை ..

  ஆம் நண்பரே இந்த பத்தடி ரொம்ப தூரம் தான் ...

  விரைவில் நெருங்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. @Anonymous உங்களுக்கு என் எழுத்து பிடித்திருக்கிறது என்று சந்தோஷம். இது கருத்துச் சுதந்திரம் உள்ள உலகம்.. உங்கள் அடையாளம் உங்களோடேயே :-)

  பதிலளிநீக்கு
 5. @அரசன், அந்தப் பத்தடி தூரப் பயணம் வாழ்வில் பல விஷயங்களைக் கற்றுத்தரவல்லது, பல விஷயங்களை ரசிக்கவைக்கக்கூடியது... ஒரு வகையில் நாம் அனைவருமே ஏதோ ஒரு திசையில் அந்தப் பத்தடியைத் தேடுவோம். அடி வாங்கி அடி வாங்கிப் பத்துப்பத்தாய்ப் பல நூறு அடி தாண்டியபில் சிலருக்கு இலக்கு கை கூடும். இதெல்லாம் இல்லாமல் காதலா :-) போய்க்கொண்டே இருப்போம் !!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..