களவாணிப்பய மவன்
அமாவாசை இரவு நிலவைத் தொலைத்துவிட்டு இருட்டில் தேடிக்கொண்டிருந்தது. ஊர் தூங்கிக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டிருந்தது. கதவோரம் நின்று விடை கொடுக்கும் வீட்டுக்காரியைப் பார்த்து ஒரு பரவசத்தோடு தெருவிறங்கினான் அவன்.
"இந்த மனுசனுக்கு இன்னைக்கு என்ன வந்துச்சு? இப்ப இது தேவையா... நல்ல புள்ளையப் பெத்து வச்சிருக்காரு போ. எப்படியோ... போறவரு காலையில பத்திரமா வீடு வந்து சேரணும் சாமி" அவள் தனக்குத்தானே அங்கலாய்த்துக்கொண்டு திருநீறு பூசிக்கொண்டு படுத்துக்கொண்டாள். பத்திரமாக வந்துவிடுவான். போகிற காரியம் லேசுதான்!
களவைக் குலத்தொழிலாகக் கற்று, பின் சமீபத்தில் அதை மறந்திருப்பவன் அவன். அந்தக் காலத்தில் ஊர்க் களவாணியான அவன் அப்பாவின் கை பிடித்துக்கொண்டு முதல் நாள் தொழிலுக்குப் போன ஞாபகங்களெல்லாம் அவன் கண்முன்னே வந்துபோயின. நிஜமாகவே ரொம்ப நாளாகிவிட்டிருந்தது. கடைசியாக வீட்டுக்காரி பிரசவத்துக்காக மேலத்தெருவுக்குப் போய் தொழில் காட்டியது. புள்ளை பொறந்தபிறகு முதல் முறையாக இன்றுதான்! அதுவும் அவனுக்காகவே! இரவில் பயல் ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் கலந்து பேசின வார்த்தைகள் எல்லாம் அவன் கூடவே வந்து கொண்டிருந்தன.
"ஏந்தம்பி ! இன்னைக்குப் பள்ளூடத்துல டீச்சரம்மா உன்னை ஏசுனாவளாம்? அம்மே சொல்லுதா...."
"ஆமாப்பா.. எல்லாம் அந்த குண்டுப்பய சதீஷாலதான்"
"ஏன் தம்பி.. அவன் உன்னையென்ன செஞ்சான்.. என்ன ஆச்சுன்னு அப்பாட்ட சொல்லு"
"அந்த சதீஷ் இருக்காம்லப்பா.... அவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு ஒரு பேனா எடுத்துட்டு வந்தான். புதுசு. அவங்க அப்பா அவனுக்கு சிங்கப்பூர்லருந்து வாங்கிட்டு வந்தாராம். அதை வச்சு எங்கள்ட்ட எல்லாம் பெருமை பீத்திட்டே இருந்தான்.."
.......................................................
"மித்த பயலுவளெல்லாம் அதை வச்சு எழுதிப் பாத்துட்டுத் தாரோம்னு கேட்டோம். அதுக்கு அவன் வந்து..... எங்களுக்கெல்லாம் பென்சில்லதான் எழுதத் தெரியுமாம். பேனா வச்சு எழுதத் தெரியாதுன்னு கிண்டலடிச்சான். அவன் பேனா இருக்குல்லப்பா...... அது வந்து ஃபாரின் பேனால்லா... அதுனால இங்கிலீஷுல மட்டுந்தான் எழுதுமாம். எங்களுக்கெல்லா ஒழுங்கா இங்கிலீஷ் தெரியாது. தப்பா எழுதுனா பேனா வம்பாயிடுமாம். தரவே மாட்டேன்னு சொல்லிட்டான்....."
அவன் நினைத்துக்கொண்டான். 'அவனுக்கென்ன .. முதலாளி மகன். சிங்கப்பூர் பேனா கிடைக்கும். தங்கத்துலயே கூட பேனா செஞ்சு தருவான் அவங்கப்பன். ஊரான் காசெல்லாம் அவன் வீட்டுலதான குமிஞ்சு கெடக்கு.'
மகன் தொடர்ந்தான், "எங்கள்ட்ட ஷோ காட்டுதேன்னு சொல்லிச் சொல்லி அவன் அந்தப் பேனாவை வச்சு இங்கிலீஷுல எழுதுனாம்ப்பா... அப்பம் அவன் எழுதுனதுல நான் ஒரு ஃபெல்லிங்க் மிஸ்ட்டேக் பாத்துச் சொல்லிட்டேன். அவனுக்கு இங்கிலீஷ் தெரியலைன்னு எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவன் ஒடனே பேனாவை எடுத்து மூடி வச்சுட்டு எங்கள்ட்ட சண்டை போட்டுட்டுப் போயிட்டான். "
........................................................
இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு
உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...
- மதி
//யப்பா ! உன்னைக் கடைக்காரன் ஏமாத்திட்டான். இது சிங்கப்பூர் பேனா இல்ல. இது அந்தப் பேனா கெடையாது. இது தமிழ்ல எழுதுனாலும் எழுதுது!"//
பதிலளிநீக்குnice! :-)
thanks a lot jee
பதிலளிநீக்குelay makka
பதிலளிநீக்குnamma oor vada veesuthu kathai la,
nalla iruku le,
continue annachi!!!!!!!!!!
சீனாப் பேனாவில் மை சொட்ட சொட்ட எத்த்னை தடவை தலையில் தடவி தமிழில் எழுதி இருக்கோம். சிங்கப்பூர் பேனாவால எழுத முடியாதா என்ன?
பதிலளிநீக்கு@ சிவா, தேங்க்ஸு மக்கா !
பதிலளிநீக்கு@ அங்கிதா , அந்தச் சீனாப் பேனாவைத் தலையில் தடவி எழுதின நாட்களின் அப்பாவித்தனத்துடைய சுகமே தனி தான். வகுப்பில கூடப் படிக்கிறவன் அளந்து விட்ட கதையெல்லாம் நிஜமென்னு நினைச்சு , போட்டிக்கு அளந்து விட்டுட்டு அதையும் கூட நிஜமென்னு நம்பின அனுபவங்கள் எல்லாருக்குமே உண்டு தானே :-)