நான் ஒரு வயலின் வாசிக்கும் குருடன்


ஆகப் பெரிய சந்தை இது.
வலை
பின்னும் சந்தை.
வலை
என்றே பெயர்.

இங்கே
சித்தம் மூலம்
நேரம் பணம்
கற்பனை அநேகம்
விற்பனை அமோகம்.

கடலை மாவு முதல் கன்னித்தன்மை வரை
காண்பதெலாம் விற்பனைக்கு.
நானும் ஒரு கடை விரித்தேன்
கவிதைகள் விற்பதற்கு.

உற்றவர்க்கெல்லாம் உரக்கச் சொல்லிவிட்டு
ஓரமாய் உட்கார்ந்திருந்தேன்.
ஒன்றுமே விற்கவில்லை.

என் கடை
சந்தையில் தெரியவில்லையா ?
இல்லை
சரக்கில் சரக்கில்லையா ?

சுற்றிப்பார்த்தேன்.

அத்தனை ஊர்க்காரனும்
மாய்ந்து மாய்ந்து
மணிக்கணக்கில் மேய்கிறான்.
அத்தனை கடைக்காரனும்
தன் கணக்கில் வரவு வைக்கத்
தட்டழிந்து தேய்கிறான்.

இங்கே இலக்கணங்கள் ஏதுமில்லை
வியாபாரத்தில் தளை தட்டாது
கூவக் கூச்சப்பட்டால்
கல்லா களை கட்டாது.

என் தப்பு புரிந்தது.

"எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை"
என்று இருந்ததே வினை.

கூகுளென டுவிட்டரென
ஃபேஸ்புக்கென
கிளைகிளையாய்த் திறந்து வைத்தேன்.

விட்ஜெட்டென லே-அவுட்டென
'ஷேர் திஸ்' என
என் கடையை அலங்கரித்தேன்.

மற்றவர் கடைகளில்
பதிவாய்ப் போணி பண்ணி
"மறக்காமல் என் கடைக்கும் வாங்க" என
பண்டமாற்றுக்கும் பதியம் போட்டேன்.

ஒவ்வொரு முறையும்
புதுசாய்ப் பொருள் இறக்குகையில்
அடிவயிற்றிலிருந்து
கூவிக் கூவிக் கூவினேன்.

இத்தனையும் செய்துவைத்துவிட்டு
வயலின் வாசிக்கும் ஒரு குருடன் போல
வழக்கத்தைத் தொடர்கிறேன்.

தனிமையில் பிரம்மம் தீண்டும்போழ்து
சிந்தித்துச் சிலிர்த்துச் சிலாகித்து,
பரவசத்தில் ஒரு புதுராகம் படைத்துப்
பார்வைக்கு வைக்கிறேன்.

வந்து போகிறவர்கள்
நின்று ரசிக்கின்ற
நிமிடத்துளிகளில்
என் கல்லா நிறைகிறது.

அப்படியே அவர்கள்
கீழுள்ள நாலைந்து
சுட்டிகளையும் கிளிக்கிச்சென்றால்
நாணயங்களின் இசை
கேட்கிறது.

வயலின் வாசிக்கும் ஒரு குருடன் போல
வழக்கத்தைத் தொடர்கிறேன்
.............

-மதி

(அத்தனை இணைய எழுத்தாளர்களுக்கும் சமர்ப்பணம்)

கருத்துகள்

  1. ஒரு ஒரு Blogger ரின் ஒட்டுமொத்த காண்டு ..!!

    உற்றவர்க்கெல்லாம் உரக்கச் சொல்லிவிட்டு
    ஓரமாய் உட்கார்ந்திருந்தேன்.
    ஒன்றுமே விற்கவில்லை ------>

    நான் room போட்டு லாம் அழுதிருக்கிறேன் அதுக்கு ..!!

    பதிலளிநீக்கு
  2. true anand .. eludi paakiravangaluku dan adu puriyum... and on the corollary , that one person saying something (good/bad) means a lot to the writer ...

    பதிலளிநீக்கு
  3. GS! first, good to read your kavidai after a very long time

    second -how perfectly you have captured the social network marketing that we all do! great theme. kudos!

    third -thanks for dedicating this one to all the bloggers :)

    பதிலளிநீக்கு
  4. Hi machan... college la kooda unna ethukkum parattina mathiri enakku nyabagam illa. [as a matter of fact you had a whole lot of other people who were backking u up]. but intha page la ennathan eluthirukkannu paklamnu open pannineyn ... unmaya solreyn negila cheythuvittai nanba... ]... good luck my prayers for u. good luck.

    பதிலளிநீக்கு
  5. good one.. apdinu naanga eluthara oru line ku pinaadi ipdi oru kadaya??? But seruously good one na..

    பதிலளிநீக்கு
  6. @ vasu thanks da... google telepathy widget eduvum kandupidikara varaikumaavadhu vaasikaravanga anda "good one" nra mattera type panna dane engaluku theriyudu :-)

    பதிலளிநீக்கு
  7. anna ur writings are excellent !! unga blog padikum pothu tamil kavithaigal la enakum aarvam varuthu :) such an inspiring writer !! kudos :)

    பதிலளிநீக்கு
  8. @ aishu , thanx a lot.. tamil is an excellent language. if i can play a role in opening your doors for the language, i d be really glad !

    பதிலளிநீக்கு
  9. //உற்றவர்க்கெல்லாம் உரக்கச் சொல்லிவிட்டு
    ஓரமாய் உட்கார்ந்திருந்தேன்.
    ஒன்றுமே விற்கவில்லை

    மிகவும் ரசித்த வரிகள்..படைப்புகள் அங்கீகரிக்கப்படும் பொழுது கிடைக்கும் சுகமே தனி... I love the way you narrate in tamil.

    P.S: பண்டமாற்றுக்கு பதியம் போட்டுவிட்டேன் என்று எண்ணுகிறேன் :-)!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..