#2 - தரிகிணதோம்



(நான்காண்டுகள் கோவையில் கல்லூரியில் கழித்த பொன்னான நாட்களில் சந்தித்த சுவாரசியங்களைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பை உருவாக்கலாம் என்று ஒரு சின்ன எண்ணம். இதே போல கல்லூரிச் சாலை # என்று குறியிட்டு இன்னும் பல கதைகள் ஒவ்வொன்றாய் வரும். இந்தப் பதிவு இத்தொடரின் இரண்டாவது கதை ஆகும். இந்தத் தொடரின் மற்ற கல்லூரிக் கதைகளை வாசிக்க கல்லூரிச் சாலை என்ற சுட்டியைத் தட்டிப் பாருங்கள். 

என் கதைகளுக்கு வித்திட்ட தோழர்கள் தோழிமார் அனைவர்க்கும் நன்றிகள். இதன் மூலம் யாரையும் காயப்படுத்தவோ கலாய்க்கவோ எனக்குத் துளியும் எண்ணமில்லை. அத்தனை கதைகளிலும் அத்தனை பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. உண்மைகள் கொஞ்சம் என் கற்பனைகள் அதிகம் சேர்த்த கதைகள். நிஜப்பெயர்களை அடையாளம் கண்டுகொண்டால் வாசகர்கள் உங்களுக்குள் புன்னகைத்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்ளவும், யாரும் தயவு செய்து public forum comment இல் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அரவணைப்புகள் அத்தனை நண்பர்களையும் சாரும். அழுகின முட்டைகளை நான் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்.

சந்தோஷமாய் என் கல்லூரிக்குள் வாருங்கள்.....)

......................................................................................................





அதிகாலைக் குளிரோடு ரயில் வடகோவையைத் தொட்டபோது கண் விழித்தது .... இப்போது வரை சூடாக சுழன்று கொண்டிருக்கிறேன். குளித்து, நல்ல பிள்ளை உடை உடுத்தி, கொஞ்சம் விபூதிக் கீற்றிட்டு அபிஷேக் அறைக்கு விரைகிறேன். அபிஷேக்- எங்கள் placement representative (PR)- எங்கள் அனைவர்க்கும் வேலை வாங்கித் தந்து விட்டுதான் அடுத்த வேளை சாப்பிடுவேன் என்று உறுதியோடு இருப்பது போன்ற உடலமைந்தவன். இன்னும் ஒரு மணி நேரத்தில் என் நேர்முகத் தேர்வு !




"வா மச்சி........ உன்னால கண்டிப்பா முடியும். டென்ஷன் ஆகாம நெர்வஸ் ஆகாம இருந்தாலே தூக்கிரலாம். ஒரு தடவை இதெல்லாம் ரிவைஸ் பண்ணிக்கோடா.." , மேசை மேல் மூன்று புத்தகங்கள் சீராக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. எங்கள் துறைப் பாடத்திட்டப் புத்தகம், யஷ்வந்த் கனித்கரின் 'Let Us C' மற்றும் ஒரு நோட்டில் தினகரின் குண்டுகுண்டு கையெழுத்தில் பல குறிப்புகள். தினா எழுதி வைத்திருந்ததை மட்டும் படித்து அபிஷேக்கிடம் ஒரு தடவை ஒப்பித்துவிட்டுக் கடவுளை வேண்டிக் கொண்டு கிளம்பினேன். கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. கிளம்பும் நேரத்தில் வேறு அபிஷேக் டையைச் சரி செய்கிறேன் என்று கழுத்தை நெறித்து வாழ்த்தி அனுப்பினான். 




ஒரு முப்பது வயதிருக்கலாம் இவருக்கு. ஒரே ஒருவர். என் கோப்புகளை வாங்கி வைத்துவிட்டு மேசையில் முன்னால் சாய்ந்து, "ப்ளீஸ் டெல் அபவுட் யுவர்செல்ஃப் தினகர்...." என்கிறார். 




----------------------------------------------------------------------


அப்பா பெயர் துரைராஜ். அம்மா பெயர் காமாட்சி. பத்தில் 1006 பன்னிரெண்டில் 1106. விருப்பங்கள் ஓவியம், இசை ........


"டேய், சொன்னாக் கேளுடா ! நீ ஏன் கஷ்டப்படுறே. நீ சொல்லு நான் எழுதறேன்", தினகரிடம் அபிஷேக் கெஞ்சுகிறான். தப்பான நேரத்தில் சிறுநீரகத்தில் கட்டி கரைக்கிறேன் என்று இங்கு வந்து படுத்துக் கிடக்கிறான் தினா. ஒரு வாரத்தில் அந்த Aventus நேர்முகத்தேர்வு. ஏற்கெனவே வந்த பெரிய கம்பெனிகள் கழிந்து போய்விட்டன. இதுவும் போனால் மன்னார் அண்டு கம்பெனி தான் !


"இல்லடா பரவால்லே, எனக்காக நீங்க இவ்ளோ பண்றீங்க. நான் இதையாவது பண்றேண்டா. சிவா இண்டர்வியூ போறதுக்கு முன்னே நல்லா படிச்சுக்கச் சொல்லுடா. மாட்டினா பெரிய பிரச்சினையாயிடும்", வலியோடு தினா அவன் ஜாதகத்தை எழுதிக் கொடுக்கிறான். 


"பயப்படாதேடா, சிவாட்ட பேசிட்டேன். அவன் சமாளிச்சிருவான். உனக்கு எப்படியும் கெடைச்சிரும். அப்படியே நீ 'Tell about yourself'கு ரெடி பண்ணி வெச்சிருந்ததும் எழுதிக் கொடுத்திரு. நீ நல்லா ரெஸ்ட் எடு. நாங்க பாத்துக்கறோம்."


------------------------------------------------------------------------


TELL ME ABOUT YOURSELF.....


இருபத்தி இரண்டு வருஷ சாதனைகளை இரண்டு மூன்று நிமிஷங்களில் நல்ல ஆங்கிலத்தில் தங்குதடையில்லாமல் சொல்ல வேண்டும். பல தேர்வுகள் இந்த இரண்டு நிமிஷத்திலேயே முடிவாகி விடும். 


பலருக்கு ஏறத்தாழ மூன்றரையிலும் சிலருக்கு எக்குத்தப்பாக ஏழரையிலும் முடியும் விஷயம்- வேலை ! இதற்காகத்தான் அத்தனை தரிகிணதோம்களும் தலைகீழ் நின்று பழகுகிறோம். ஆங்கிலம் படிப்பதும், ஆர் எஸ் அகர்வால் படிப்பதும், அட வெறுமனே படிப்பதும் கூட இந்த வேலைக்காலத்தில் தான் கல்லூரியில் அசுரகதியில் நடக்கும். முதல் அசுரன்- ஆங்கிலம் !

........................................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...

- மதி







கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Chance a illa na.. Far gripping than ur previous narration... GS torch anga anga palich palich nu yeriyudhu...

    Anda objective la இது பேசித்தீர்க்கப்பட வேண்டிய விஷயம் அல்ல, பூசித்தான் தீர்க்க முடியும் ;

    call ku wait pannum pothu இப்போ வெறும் 75 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் நீ உன் மலேஷியா மாமாகிட்டே மணிக்கணக்கா பேசிட்டே இருக்கலாம்................. வழங்குகிறோம் புதிய 75 ரூபாய் ISD Pack..."

    Typical GS ...

    Oru 'siru'kathaiyai 'siri'kathaiyaai maatruvathu unnai pol silar mattume.. GCT#3 ku waiting ...

    பதிலளிநீக்கு
  3. //Induction motor-உம் Inoculation loop-உம் விடுதியறையில் மட்டும்தான் அருகருகே இருக்க முடியும்.

    Creative thinking & nice narration ..Sathiyama unga writing parthu poramaiya irukku..

    பதிலளிநீக்கு
  4. thanx both .. @Premnath ... vaasikaradhukum rasikkaradhukum nanbargal irukkira varai eludaravangaloda thinking nalla irundutu dan irukum. rasanai dan boost .. thanx

    பதிலளிநீக்கு
  5. kannil thaen paindhadhu pola...wow. chance eh illa. and the way u had depicted the pre placement preps and process were too good. but GS, unga college la u guys were so sincere eh? nangalam avlo srama pattukala.

    ur humour is too good..wanted to laugh out aloud at many places. especially for the 'mind voice' places, were siva cribs about his position. the sequencing of the scenes were brilliant. they way you had interlaced the present with the past. the usage of characters like varun, sriram has added a lot of insight into the actual feel of the story scenario. loved it. already waiting for the 3rd story.

    rock on :)

    பதிலளிநீக்கு
  6. @ a
    thanx .. the characters like varun, babu, saravanan are all snapshots of the descriptions. avangala basea vechu dan kadaiye thonichu. idu madiri a lot of characters u ll see in GCT. a brilliant medley. first time in a story i felt i could not accommodate every character i wanted to .. and that too in the longest story I ve written so far...

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. @ Wolverine ... Ennayae vekkapada vekireengale da. Thanks a lot. Keep reading . the next one in this series comes shortly.

    பதிலளிநீக்கு
  9. Goms....
    Ennoda placement life poyittu vandha madhiri oru feel...
    The best accomplishment for a writer is -if the reader could visualize the scenes while reading..I was in GCT for a while...Great work..

    பதிலளிநீக்கு
  10. Nice.. As always..

    'Madhi'.. eppo irunthu da.. 'ko' mela kovama!

    -Pk.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..