நகர்கையில் ...


உன்னை என்னுள் வைத்திருந்தேன் .

உன்னிடம் ஒரு குழந்தையின் சிரிப்பிருந்தது
ஒரு பிரகாசத் துடிப்பிருந்தது
ஒரு நூலளவு ஞானமும்
அதைச் சுற்றி இருளும் இருந்தன
அந்த நூலின் முனைகளை
நிர்ணயிக்கவும் நீட்டிக்கவும்
உன் தேடலில் ஆர்வமிருந்தது
உன் வாழ்க்கையில் எளிமையும்
எளிமையில் நளினமும் ....

...............................................

உன்னை இங்கே அழைத்து வந்தேன் .

இங்குள்ள மனிதரெல்லாம்
ஒரு பெரிய தொட்டியில் நீர் நிரப்பி
தலையை மட்டும் முக்கி வைத்தே
முழுவாழ்வும் கழிக்கின்றார்.
சிலர் தலைகள் அமுக்கப்படுகின்றன
சிலர் தலைகள் இழுக்கப்படுகின்றன
சுவாசப்பைகளை
விலைகொடுத்து வாங்கிக்கொள்கிறார்
திமிறிக்கொண்டு சில நொடிகள்
நிஜக்காற்றை சுவாசிக்கிறார்.

இங்கே
நீ முதுகில் அடி வாங்கலாம்
முன்னடி ஒன்று வைத்தால்
கண்ணடி மூன்று படலாம்
காலின் கீழ் தரை சட்டெனக்
காணாமல் போகலாம்
காத்திருந்து ஏமாறலாம்

.......................

உன்னோடு நானும் கற்றுக்கொள்கிறேன் .

தேடலும் துடிப்பும்
தொலைத்து விடாதே
சிரிக்க மறவாதே
உன் தலை வெளிவரும் நேரம்
உடன் வரும் தலைகளை
கவனித்துப் பழகு
உன் சுவாசப்பைகள் அவர்வசம் இருக்கின்றன
உன்னிடம் அவர் சுவாசம் இருக்கிறது

இங்கே
நீ சோர்ந்து போகலாம்
தீர்ந்து போக மாட்டாய்
கற்றுக்கொள் .

கருத்துகள்

  1. wow!! reading this poem at the time of internship is very apt and encouraging. i can relate with so many things that you have said in the poem...and i guess that is the specialty of the written words :)
    btw, have i read this one before?

    பதிலளிநீக்கு
  2. nope , this s new. but u read once the day i posted it and now commenting. that s the gap:-)

    பதிலளிநீக்கு
  3. Dei ithana visayam nadandhuruku aana yenaku ipa dhaan yelam theriyudha....very nice da ...

    பதிலளிநீக்கு
  4. Hey I dint 've the habit of reading tamil poems .Bt on reading dis now , such an idea smz to be rite!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  5. nice Anu.. start reading good poems. U ll explore a new side of yourself too

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..