சூட்சுமம்
என் பெயர் விஜயராகவன். நான் இறந்து பதினேழு நாட்கள் ஆகின்றன. செத்துப்போனோம் என்ற வருத்தமெல்லாம் மூன்றாம் நாள் பாலோடு போய்விட்டது. அதைவிட முக்கியமான குழப்பங்களில் இருக்கிறேன். "நான் யார்?" உயிரோடு இருந்தபோது இது வேறு விஷயம். இப்போது இது முற்றிலும் வேறான ஒரு கேள்வி. பேய் கதைகளுக்கெல்லாம் அழகு சேர்க்கக்கூடிய சூட்சுமமே ஒரு கட்டத்துக்கு மேல் யோசிக்காமல் இருப்பதுதான். ஆனால் அத்தனை கட்டங்களையும் தாண்டி இந்தப் புது இடத்தில் என்னால் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை. புது இடம் - ரொம்பப் பெரிய வெளியாகப் பரந்து இருக்கிறது. உயிரோடு இருப்பவர்களுக்கே ஒரு பூமி போதாத போது இத்தனை தலைமுறையாய் இறந்தவர்கள் இருக்கும் இடம் - பெரியதாய்த்தான் இருக்கும்! இங்கே எவரையும் தெரியவில்லை. வழி காட்டவும் நாதியில்லை. இறப்பிற்குத் தாய் தந்தை வேறு தேவை இல்லையே.
நான் பார்த்திபன். மூன்றாமாண்டு கல்லூரி மாணவன். அப்பா அம்மா இல்லை. செத்துப்போய் விட்டார்கள். உறவுகளும் உதவித்தொகைகளும் என்னைப் படிக்க வைக்கின்றன. எந்த ஒரு மனிதனும் நாயைக் கண்டோ பேயைக் கண்டோ பயப்படுவான். நான் முதல் வகை. சிறு வயது முதலே அப்பாவும் அம்மாவும் அடிக்கடி கனவில் வருவதால் ஆவி பயமெல்லாம் பிடிக்கவில்லை. விடுதிகளின் தனிமையும் அப்பா அம்மாவின் கனவுகளும் இளமையிலேயே என்னிடம் மரணம் குறித்தும் கடவுள் குறித்துமான இன்ன பிற ஈர்ப்புகளைக் கொடுத்து விட்டன. நிஜத்தில் இன்று பேயென்று ஒன்று இருந்தால் அதனோடு என் அறையைப் பகிர்ந்து கொள்ள நான் தயார்.
உண்மைதான். நான் இப்போது பார்த்தியின் அறையில்தான் இருக்கிறேன். நல்ல அறிவாளிப் பையன்! இந்த சில நாட்களில் நான் இங்கே சந்தித்த ஒரு சிலரிடம் என் குழப்பங்களைப் பற்றிக் கேட்டபோது 'பேய் பூதமெல்லாம் வெறும் புரளி. பித்தலாட்டம். நம்பாதே' என்று சொல்லிப் போய்விட்டார்கள். பேயும் இல்லை என்றால் நான் யார்தான் என்று கொள்ள? ஒரு வேளை நான் பார்த்தது பகுத்தறிவுப் பேய்களோ என்னமோ? இரண்டு மூன்று மனிதர்கள் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் காரணமா அவர்கள் காரணமா தெரியவில்லை. பாவம் பயந்து போனார்கள். நிஜத்தில் பேய்களுக்கு விஷேஷ சக்திகள் உண்டா என்று தெரியவில்லை. அப்படி என்னிடம் ஏதும் இருந்தால் இனிதான் கண்டுபிடித்துப் பழக வேண்டும்.
சரி பேயாக இருக்கிறோமே, யாரையாவது பயமுறுத்திப் பார்க்கலாம்.... கொஞ்சம் வித்தை பழகலாம் என்று ஒரு நாள் முயற்சித்த போதுதான் பார்த்திபனைக் கண்டேன். விடுதியில் நண்பர்களோடு ஒரு ஆங்கிலப் பேய் படம் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் ஏனடா அங்கு போனோம் என்று நான்தான் வெறுத்துப் போனேன் கடைசியில்.
அன்று பார்த்த பேய் படம் நிஜமாகவே கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. சாதாரணமாக எனக்குப் பேய் படங்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். அன்று, கூட இருந்தவர்களும் படம் பிடித்துப் போகக் காரணமானார்கள். நீங்களும் பேய்க்குப் பயப்படும் ஆசாமிகளோடு இரவில் பேய்ப் படம் பார்த்தால் - பயப்படாமலிருந்தால் - இந்த மகிழ்ச்சியை அறிந்திருப்பீர்கள்.
....................................................................
இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு
உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...
- மதி
Wow.. Romba naal ku aprom tamizh la parallel screenplay padikaren..!!
பதிலளிநீக்குMudivu munadiye therinthirunthalum, athu dana nu therinjuka padika vachuthu..!! (Keeping ppl always excited is difficult)
Good work again.. Keep going..
thanks @arun .... comments and support from readers like you are only keeping me going !!!
பதிலளிநீக்குa different attempt...but this post is beyond my scope to read..read each paragraph lest twice to understand it..
பதிலளிநீக்கு@ sangeetha , thanks .. you had to keep track of the italicized and normal fonts while reading. hope it helped..
பதிலளிநீக்கு////பேயென்று ஒன்று இருந்தால் அதனோடு என் அறையைப் பகிர்ந்து கொள்ள நான் தயார்.
பதிலளிநீக்கு//அப்படி என்னிடம் ஏதும் இருந்தால் இனிதான் கண்டுபிடித்துப் பழக வேண்டும்.
//இதில் நம் நிலையும் கடவுளின் நிலையும் இப்படி எதிரெதிரே இருக்க, நாம் இரண்டு வழிகளில் ஒரே புள்ளியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். நாளையே இன்னொரு சிந்தனை,
இப்படி ஏதாவது ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடிக்கவும் முடியுமே...............
செமையான ரைட்டிங் ஸ்டைல்.. நல்லா எழுதியிருக்கீங்க.. ஆனா குளுக்கோஸ் கம்மியா இருக்கே ஏன்.. வேர்ட் வெரிஃபிகேசன் எடுங்க..
இந்த கதை கொஞ்சம் பயமா இருக்கும் போல .,
பதிலளிநீக்குநான் அப்புறமா வந்து படிக்கிறேங்க ..! முதல்ல செத்து பதினேழு நாள் ஆச்சு அப்படின்னு ஆரம்பிக்கிறீங்க ..!! :-)
கலக்கல் சார் ஒரு கலக்குகலக்கிட்டீங்க
பதிலளிநீக்கு@தினேஷ்குமார் .. நன்றி சார் !!
பதிலளிநீக்கு@ ரமேஷ் ... ரொம்ப நன்றி சார்... Word verification தொல்லை இனிமேல் இங்கே இல்லை :-)
why did u kill that paarthiban :(
பதிலளிநீக்குbut awesome script man! the story is just too good. very different story line. if you get a chance, try reading the book, "many masters many lives". it talks about death, rebirth etc etc.
enjoyed the story :D
@ A... thanks a lot. I would love to read that book . It s always a fascinating subject for me.
பதிலளிநீக்குDo u know there once was a time when many of my lead characters either die or chase death? Kinda became a trend in my stories. Then I consciously avoided killing any characters for a long time .... :-) Will unveil some of those stories too soon
கலக்கல் பாஸ்! சூப்பரா எழுதி இருக்கீங்க! :-))
பதிலளிநீக்கு@ jee... thanks a lot
பதிலளிநீக்குGood Thinking sir...
பதிலளிநீக்குAs a human being we used to search for the life after death.
But its totally different thinking. superb...
உயிரோடு இருப்பவர்களுக்கே ஒரு பூமி போதாத போது இத்தனை தலைமுறையாய் இறந்தவர்கள் இருக்கும் இடம் - பெரியதாய்த்தான் இருக்கும்! இங்கே எவரையும் தெரியவில்லை. வழி காட்டவும் நாதியில்லை. இறப்பிற்குத் தாய் தந்தை வேறு தேவை இல்லையே.
பதிலளிநீக்குNalla Karpanai ...