Feb 5, 2012

சாமி வீடுஒரு ஊருல ஒரு தாத்தா இருந்தாராம். அவரு மூப்புன்னாலும் முறுக்கு கொலையாம தான் வேலையத் தானே பாத்துக்குவாராம். அத்தனை வயசாகியும் அவரு கல்யாணமே பண்ணிக்கல. பாவம் சின்னப் புள்ளையா இருந்தப்போ யாரோ ஒருத்தவுங்கள லவ்வடிச்சு ஏமாந்து போயிட்டாருன்னு பேசிக்கிறாங்க. ஆனா அவருக்கு சின்னப் புள்ளைங்கன்னா ரொம்ப உசுரு. கூட்டி வச்சுக் கதை கதையாச் சொல்லுவாரு. அவரு நெறைய கதையெல்லாம் எளுதி பெரிய பெரிய பரிசெல்லாம் வாங்கினவராம். அவரு எளுதின கதை பத்திரிகையிலெல்லாம் வரும்.

அந்தத் தாத்தாவுக்கு சாமின்னா ரொம்ப நம்பிக்கை. எப்பவும் சுத்தபத்தமா இருப்பாரு. பூஜை பண்ணுவாரு. கோவிலுக்குப் போவாரு. சாமி காரியம் எதுலயும் குறையே வக்கமாட்டாரு. அவருக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை ....... அவரு செத்துப்போன பொறவு எங்க போவாரு என்ன ஆகுமுன்னு தெரிஞ்சுக்கணுமுன்னு ரொம்ப ஆசைப்பட்டாரு. அதுக்காக ஏதேதோ படிப்பெல்லாம் படிச்சாரு. தெனமும் சாமி முன்னாடி நின்னு, "சாமி சாமி ! நான் செத்த பொறவு என்ன நடக்குதுன்னு சொல்லு சாமி. அத தெரிஞ்சுகிட்டு நான் அத கதையா எளுதணும் சாமி" அப்படின்னு வேண்டிப்பாராம்.

இதையெல்லாம் பாத்துகிட்டிருந்த சாமி ஒரு நாளு அவரு முன்னாடி வந்து , "இங்க பாரு சிதம்பரம் ! நீ கேட்ட மாரியே நான் ஒனக்கு ஒரு வரம் தாரேன். நீ செத்துப் போன பொறவு ஒரு மணி நேரம் ஒனக்கு நெனவிருக்கும். அதுக்குள்ள திரும்பி வந்து என்ன எளுதணுமோ எளுதிக்க. ஆனா ஒரு மண்ணேரம் முடிஞ்சவுடனே நீ மொத்தமா செத்துப் போயிருவ"னு சொன்னாராம்.

உடனே தாத்தாவுக்கு சந்தோசம் தாங்கல. சாமிகிட்ட, "அப்படின்னா நான் இப்பவே சாகுறேன். என் உசுர எடுத்துக்க"னு சொன்னாரு. அதுக்கு சாமி வந்து, "சரி உன் இஷ்டம். ஆனா சாகறது நீயாதான் சாகணும். உன் விருப்பம்போல செத்துக்கோ" அப்படின்ன்னு சொல்லிட்டாரு.

........................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...- மதி

(படம் அளித்து உதவிய மைக்குக்கு நன்றி)

7 comments:

SHIVA said...

நல்ல கதை. ஆனா முடிவு என்னனு யூகிக்க முடிஞ்சது.

Nandha said...

interesting.... unfortunately not conveyed to me...
.

Priya said...

romba nallaarukku naa.. Kadhai solra dhoni romba nallaarundhuchu :)

Joker said...

good la.. 'vaanathil oru adhisayam nigazha kanden' nu bharathiyar paadirukaaru. Sujatha, 'kavinjargal laam kavidhaigal edhum padikkaama manasula padradha, paakkuradha ezhudhanum' nu sollirukaaru. Idhu laam njabagam vandhadhu. Simple... Once again, 'ulagathula nallavanga irukkaanga'. adhaanae ezhuththoda avasiyamae??? :-)

மதி (GS) said...

அனைவர்க்கும் நன்றி ... @நந்தா.. நாம் நேரில் பேசும்போது இதைப் பற்றி விவாதிப்போம்.. @ஜோக்கர்.. கருத்தே புரியலையே தலைவா

Joker said...

illa boss.

உலகின் எல்லா விஷயங்களும் அதிசயம் தான். ஆரம்பத்துல உலகமும் இப்படி தான் இருந்தது னு சொல்றப்போ, அதிசயமா சொல்றாங்க. இப்பவும் அதிசயம் தான். எல்லாமே. சூரியனும், கடலும், தார் சாலை, ரோடு ரோலர், மனிதன், ஒட்டகசிவிங்கி - இப்டி எல்லாமே.

இல்ல, சொல்றேன். உலகத்துல இன்னமும் அதிசயங்கள் லாம் இருக்குது. I hope u are talking about this/have I got it wrong?

Premnath said...

Nice narration.. Enakkum convey aagala .. :(

Post a Comment