பைத்தியக்காரர்களை வாழவிடுங்கள்


வன்முறை வஞ்சனை
வதந்தி வெறுப்பு
சுரண்டல் அலட்சியம்
இவற்றில் தேர்ந்த நிபுணர்கள்

கண்ணுக்கு கண் என்று
கணக்கு வைத்துக் குரோதம் வளர்ப்போர்
யானே மீட்பன் என்று
பசுத்தோலில் முடிசூடிக்கொள்வோர்

கட்டுப்படியாகும் விலைக்கு
குற்றம் புரிவோர்
கனத்த லாபத்துக்கு
அவர்களைக் காப்பாற்றுவோர்

இவர்களுக்கு மத்தியில்
உலகம் ஒரு நாள் உருப்படும்
என்று நம்பும்
அப்பாவிப் பைத்தியக்காரர்களை
தயைகூர்ந்து வாழவிடுங்கள்.

- மதி

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..