Jan 9, 2011

ரிஷிமூலம் நதிமூலம் விழிமூலம்


எதேச்சையாய்த்தான்
முதலில் பார்த்தேன்
பிறகு
எட்டிப் பார்த்தேன்
திரும்பிப் பார்த்தேன்
தேடிப் பார்த்தேன்
கவனித்தேன்
இரசித்தேன்
தூங்காமல் யோசித்தேன்
தெரியாமலேயே நேசித்தேன்
படிப்படியாய்ப் புதிரவிழ்த்தேன்
காதலென்று கண்டுகொண்டேன்!

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

5 comments:

அரசன் said...

கலக்கல்

Anonymous said...

Sirukavithaiyaanalum muzhumai petririkirathu!

Anonymous said...

Kaadhal,iyarkai ivatril ellam kaal pathitha padaipaaliku Natpu patri padhivatharku neram pothavillai polum!


padhivai edhirpaathu!

மதி said...

@ அதே anonymous... காதலையும் இயற்கையையும் விட நட்பு என் வாழ்க்கையில் பெரிய பங்கு ஏற்றிருக்கிறது. ஆனால் ஏனோ இது வரை அதைக் கவிதைப்படுத்திப் பார்க்கத் தோன்றவில்லை. அதுல பாருங்க, காதலை அடிக்கடி சத்தம் போட்டு அசிங்கமா சொல்லிகிட்டே இருப்போம். ஆனால் நல்ல நட்பு அதிகமா publicityய விரும்பிறதில்லே ... நீங்க சொன்னதும்தான் எனக்கே தோணுது !!! (எழுதலைங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு:-) )

Anonymous said...

Adhilum Kaal vaithu paarkalaame!
Ethirpaarkalaamaa?

Post a Comment