Dec 13, 2009

நினைவுப் பாதை

ஒரு தூக்கங்கெட்ட ராத்திரியில்
தற்செயலாக
என் ஞாபகக் கணக்குகளைத்
திறந்து வைத்துக் கிளறுகிறேன்.

முடுக்கிவிடப்பட்டதும்
ஒரு சீட்டுக்கட்டைப் போல
என் நினைவலைகள்
முட்டிக்கொண்டு பின்னோடுகின்றன.

இந்த பத்தொன்பது வருஷங்களில்
நான் சந்தித்தவை
சிந்தித்தவை
சாதித்தவை
சமாளித்தவை......

கல்லூரியின் முதல் நாள்
பன்னிரெண்டாம் வகுப்பு
பள்ளிக்கூடம்
நண்பர்களோடு சினிமா
கட்டடித்துக் கிரிக்கெட் ஆடியது
காரைக்குடிக்குப் போய் கால்பந்து ஆடியது
(a+b)^2 மனப்பாடம் செய்தது
திருச்சி பஸ் ஸ்டாண்டில்
தொலைந்து போனது
ஸ்கூல் பஸ்ஸில்
கன்னியாகுமரி
ஆண்டு விழாவில்
ராஜா வேஷம்
என் நாலாங்கிளாஸ் எதிரி
அந்த குண்டுப்பெண்ணின் முகம்
அடிக்கடி பயமுறுத்துகிற
முதலைக் கனவு
மூணாங்கிளாஸில் வாங்கின
முதல் முதல் ரேங்க்
யுகேஜி கிளாஸின்
அஸ்பெஸ்டாஸ் கூரை வரை.........

கண்முன்னே
காட்சிகள் குவிகின்றன.

மேலும்
முயற்சித்து முன்னேறுகிறேன்
மூன்று வயது வரை
ஆச்சியிடம் வளர்ந்தது
அவள் வளையல் பிடித்து
கதை கேட்டது
அக்காவைக் கடித்து வைத்தது
குட்டி தொந்தி
பொக்கை வாய்ச் சிரிப்பு .....
ஆனால் இவையெல்லாம்
கேள்வி ஞானமாகவும்
காமெரா நிழலாகவும்தான் ......

எனில்.....
என் நினைவிலிருக்கும்
முதல் காட்சி ?

கண்டிப்பாக
எல்கேஜி வயசில்தான்
எங்கோ பதுங்கியிருக்கிறது.

அப்போது படித்த
பள்ளிக்கூடம்
வகுப்பறை
அப்போது வாழ்ந்த ஊர் .....
அந்த வீடு கூட
தோற்றமாக நினைவில்லை !

அந்த வீடு ....
காம்பவுண்டு ....
பஸ் ஸ்டாண்டு ....
கடை ....
ஆஹா !
கண்டு பிடித்தேன் !

இந்தப் பேரண்டத்தில்
என் நினைவின்
முதல் காட்சி
ஒரு இனிப்புப் பண்டம் !

ஆம்
நான்
உன்னியாப்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்!Nov 28, 2009

முதல் போணி


அணுஅணுவாக அழகழகாக ஆசைஆசையாக முறுக்கி முறுக்கி வளர்த்த மீசையைஒரு நள்ளிரவின் உந்துதலில் மழித்துப் பார்த்த அனுபவம் உண்டா உங்களுக்கு ? ஒரு பக்கத்து மீசையில் கத்தியைத் தொட்டாற்போல் வைத்திருந்து ஒரு சில நொடிகள் கூர்ந்து யோசித்த பிறகு கத்தியின் கூர்மைக்கு வேலை கொடுப்போம். இப்படி மீசை மழிக்கும் எல்லா ஆண்மக்களும் - பெண்கள் வேறு மாதிரியாக மீசை மழிப்பதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - ஒரு புற மீசையை இழந்த மறுகணம் 'தப்பான முடிவெடுத்து விட்டோமோ ?' என்று கண்ணாடியில் ஆழ்ந்தாழ்ந்து போவர். ஆனால் வேறு வழியின்றி மேற்கொண்டு மழித்துவிட்டு , மறு நாள் வெளியே வரும்போது, "ஐயையோ ! அழகா இருந்த மீசையை இப்படி அநியாயமா எடுத்திட்டீங்களே" கேட்கும்போது ஒரு சஞ்சலம் வரும்.

    இதே போலத்தான் சமீபத்தில் என் மரியாதைக்காகவும், மீசைக்காகவும், கெத்துக்காகவும், உயிருக்காகவும் (?!) சென்னை வடபழனியிலிருந்து கிண்டி வரை ஒரு கற்பனை மீசை மழிப்பு நிகழ்த்தினேன்.

    அதிகாலை 4 30 மணிக்கு கனவற்றுத் தூங்கின என்னைத் தட்டி எழுப்பி இடத்தைக் காலி பண்ணச் சொல்லி இறக்கி விட்டார் நடத்துனர். நான் கோயம்பேடு மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பையைச் சுமந்து கொண்டு, தமிழறியாத என் நண்பனையும் சுமந்து கொண்டு கிண்டிக்கு வண்டி மாறக் காத்திருக்க ஆரம்பித்தேன். கொட்டாவிகளையும் கொசுக்களையும் துரத்திக் கொண்டே காத்திருக்கையில் சட்டெனத் தூக்கம் கலைத்துக் கிச்சுகிச்சு மூட்டினான் நண்பன் - நடைமேடை அறிவிப்புப் பலகையில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த 'கிண்டி'யை அவன் உச்சரிக்கவும் எனக்குச் சிரிப்பு வந்தது. வேறு யாரும் கேட்டிருந்தால் அவனுக்கு அந்த இடத்திலேயே இரத்தம் கூட வந்திருக்கலாம். யோசித்துப் பார்த்தேன். அவன் மேல் தப்பில்லை. சிரித்துக் கொண்டேன்.

    நடைமேடைகளில் பலத்த கூட்டம். நண்பன் பாரிமுனையில் உற்றார் வீட்டுக்குச் செல்ல வேண்டும். 15B வந்ததும் கைகாட்டிக் கிளம்பினான். நான் கூட்டத்தோடும் தனிமையோடும் ஒரே நேரத்தில் அதிக நேரம் காக்க வேண்டி வந்தது. வந்த ஒரு வண்டியில் கிட்டத்தட்ட கிண்டியின் ஜனத்தொகையில் ஒரு சதவீத மக்கள் முட்டி மோதி ஏறினர். என் பையில் சுமை அதிகம். காத்திருந்தேன்.

    ஆட்டோ பிடிக்கலாமா என்று ஒரு எண்ணம். மறு கணம் வங்கிக் கையிருப்பு மனதில் தோன்றித் தடுத்து விட்டது. என் மனம் ஒரு குட்டிக் கணக்கு போட்டது. கிண்டியின் ஜனத்தொகையில் தொண்ணூற்றைந்து சதவீதம் இப்போது கிண்டியிலேயே தூங்கிக் கொண்டிருக்கும். ஒரு சதவீதம் எழும்பூரில் காத்திருக்கும் . ஒரு சதவீதம் மீனம்பாக்கத்திலும் மற்றொன்று பூங்கா நகரிலும் காத்திருக்கும். ஒரு சதவீதம் போன வண்டியில் போய் விட்டது. இன்னும் ஒரே ஒரு வண்டியையும் விட்டுப் பிடித்தால் அடுத்த வண்டியில் ராஜாவாட்டம் உட்கார்ந்து போகலாம் !

    அடுத்த இரண்டு வண்டிகள் கடந்து போனதும் சின்ன வயசில் கணக்கு டீச்சர் என் கணக்கில் தீயை வைக்கச் சொன்ன காரணம் பிடிபட்டது !

    அரைமணிக்குமேல் ஆகிவிட்டது. வடபழனி வரை செல்லும் ஒரு பேருந்து ஒரு சில காலி இருக்கைகளோடு வந்தது. கணப்பொழுது தாமதித்தாலும் தவறிவிடக் கூடிய வாய்ப்பு ! முருகன் மேல் பாரத்தைப் போட்டுத் தாவியேறி விட்டேன். வழியில் அடுத்த சிந்தனை. வடபழனியிலிருந்து என்ன செய்வது ?
 ................................................இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...- மதி

Nov 10, 2009

ஏன் நான் உனக்குப் பிறகு பிறந்தேன்

நிலவினைக் கலந்து பேசி
முக வடிவம் முழுமை செய்து
கதிரொளியைப் பிரதிபலிக்கும்
வித்தைகள் அதற்குப் புகட்டினான் .

கண்ணழகை வடிவமைக்க
தூக்கம் கெட்டு யோசித்து
ஆழமும் ஈர்ப்பும் சரிவரப் பொருந்த
சிலபல மின்னல் கீற்றுகளைத்
திரட்டியோர் உருண்டை செய்து
அதற்குக் குறும்பும் பேச்சும்
கற்றுக்கொடுத்தான்.

குரலின் சிறப்பிற்காய்த்
தேடித்தேடித் தேர்ந்தெடுத்து
ஒவ்வொரு மலரிலும்
ஒரு துளி தேனெடுத்து
குழைத்துக் குழைத்துக்
குரல் வார்த்தான்.

அறிவும் திமிரும்
அளந்து கலந்து
மழலையும் ரசனையும்
சேர்த்துத் தெளித்து
அகத்தழகும் பூர்த்தி செய்தான்.

புன்னகையில் மட்டும்தான்
ஏதோ இடிக்குதென்று
இராப்பகலாய் அலைக்கழிந்து
என்னவென்று கண்டுகொண்டான்
மூக்கில் கொஞ்சம்
கூர்மை குறைத்தான்.

பிரம்மனே இப்படி
பிரம்மப்பிரயத்தனப்பட்டுப் படைத்த
பெண்ணடி நீ !

எல்லாம் ஆனதும்
வேலை முடிந்ததென்று
திருப்தியாய்த் தலைசாய்க்கையில்தான்
இப்பேற்பட்ட பெண்ணொருத்தி
பேரழகி
இவளுக்குத் துணை ஆக
ஈடான இணையாக
ஓர் ஆணும் உலகில் இல்லையென
உணர்ந்தான் பிரம்மன் .

ஆதலால்
மேலும் மூன்று மாதங்கள்
மெனக்கெட்டு உழைத்து
என்னைப் படைத்தான் !

Sep 18, 2009

போதும் மனமே ..... வாழ்ந்திட வீடு போவோம்


துறை:முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது

துறைவிளக்கம்:முன்பு பொருள் தேடச் சென்ற தலைவன் மற்றொரு காலத்துப் பின்னும் பொருள் தேடும்படி கருதிய நெஞ்சை நோக்கி, நெஞ்சே! மாலை வரக்கண்டும் இம்மாலைப் பொழுது நம் தலைவி நம்மைக் கருதி வருந்துதற்குரிய காலமென்று முன் பிரிந்தவிடத்து கருதினேன் அல்லனோவென வருந்திக் கூறியது..

பாலை திணை - நற்றிணை

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே

- இளங்கீரனார்

பாடல் பொருள் விளக்கம் :
பருந்துகள் உறைந்து நிற்கும் ஆகாயத்தின் மேல் கிளைகளைப் பரப்பி , பொரிந்த அடியொடு நிற்கும் வேம்பின் ஒளி புள்ளிகளைச் சிந்தும் நிழலில் , கற்றறியாத சிறுவர்கள் நெல்லிக்காயை வட்டாக வைத்துப் பாண்டி ஆடிக்கொண்டிருப்பார்கள். அவ்வூர்க் கள்வர்கள் வழிப்போக்கர்களின் மார்புகளை நிலமாக்கித் தம் வில்லால் உழுது கொண்டிருப்பார்கள். 'இந்த வெங்காட்டில் என் மனவலிமையெல்லாம் மாய்க்கின்ற மாலைப் பொழுது வரவும் , "வீட்டிலே தலைவி விளக்கேற்றி வைத்துவிட்டுத் தலைவனின் வரவை எதிர்பார்த்திருக்கும் பொழுதல்லவோ இது" என்று எண்ணி எண்ணி வாடுபவன் தான்தானே , போதும் மனமே , சேர்த்த பொருள் போதும் , இனி ஊர் போய் வாழ்வோம்' என்று தலைவன் இன்னும் பொருளீட்டத் துடிக்கும் மனதிற்குச் சொல்வது.


இதையே என் மொழியில் இனி ......
ன் பெண்டாட்டி பிள்ளைக்கு
உணவுக்கு வக்கில்லை
உழைத்துப் பொருள் சேர்க்க
ர்விட்டு ஊர் வந்தேன் .
இங்கே தனியறையில்
இரவுகளும் நிலவுகளும்
அவளின் கதகதப்பின்றி
குளிர மறுத்து
வறண்டு புழுங்கும்.
ஏதோ ஒரு ஓரமாய்
ஏதோ ஒரு எண்ணமாய்
எதேச்சையாய் நடந்து போகையில்
தெரியாமல் மேலே படும் பந்துக்கு
மன்னிப்புக் கேட்டு வரும் சிறுவனிடம்
கேட்கக் கூச்சமாய் இருக்கும்.
என் மகன்போல்
இவனெல்லாம்
என்னையும் சேர்த்து
விளையாடுவானா ?
சரி
ஆதங்கங்களை
அனுசரித்துக்கொள்ளலாம்.
பாழ்பட்ட உலகமிது
அங்கங்கே அடிக்கடி
வீடுபுகுந்து கொள்ளையடிக்கும்
செய்திகளைக் கேட்கையில்
பயந்து வரும்
இயலாமைகளை என்செய்வது ?
விடுமுறைக்கு விடுமுறை
விளையாட்டுச் சாமான்களோடு
வீடு சேர்ந்து
மகனை அள்ளியணைத்து
மனைவியொடு பேசி
திருடிய தனிமைகளில்
அவசரமாய்ப் புணர்ந்து
கொஞ்சமே கொஞ்சம்
வாழ்ந்துவிட்டு
மீண்டும் இங்கு வந்து
செத்துச் செத்துச் சம்பாதிக்கிறேன்.
விளையாட்டுச் சாமான்களையா
என் மகன் கேட்டான் .....
விடுமுறையில் வந்து போகும் கணவனையா
என் மனைவி கேட்டாள் ......
ஏதோ ஒரு பிழைப்பு
என் ஊரிலும் கிடைக்கும் .
போதும் மனமே !
இத்துணை நாள்
புலம்பினோம் .
நாளை
புறப்படுவோம் !

Sep 6, 2009

மெய் எனப்படுமோர் மின்னல் கீற்று


திருச்சி பேருந்து நிலையத்தில்
காணாமல் போன என்னை
கடத்திச் செல்லாமல்
கண்ணை நோண்டாமல்
வீட்டாரைக் கண்டுபிடித்து
கரிசனையாய்க் கூட்டி வந்த
பெயர் தெரியாத மனிதர்
திடீரென நினைவில் வருவார் .

ஒரு பயணத்தில் ஒரு பரீட்சையில்
ஒரு வாதத்தில் ஓர் உள்ளலசலில்
அடுத்த அடி தெரியாமல் விழி பிதுங்கும்
திக்கற்ற ஒரு கணம்
அறியாமை சுட்டுரைத்து
இறுமாப்புகள் இளகும் .

மன இருளில் தவறிழைத்து
வெளிச்சத்தில் அகப்பட்டு
விரல்களின் முனையில் நாணி நின்று
ஒளிவைத் தேடி ஓடி அலைந்தபின்
ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க
ஒரு கணம் உறுதி வரும்.

ஒரே ஒரு பாராட்டு
பல்கிப் பெருகிப் பிரவாகமாகி
மழையாய்ப் பெய்து நனைந்தபின்னும்
ஆறு மாசம் கழித்தொருவன்
நினைவூட்டிப் பாராட்டும் நிமிஷம்
நிஜத்தில் வெற்றி உரைக்கும் .

காக்க வைத்துக் காக்க வைத்துக்
காக்க வைத்துக் காக்க வைத்துக்
கடைசியாக ஒரு நொடியில்
என் காதலி
உண்டோ இல்லையோ
உருப்படியாய் ஒரு பதில் சொல்வாள் .

வயது கூடிப் பிரிந்து சேரும்
புனிதப் பொழுது
தற்செயலாய் வந்தாலும்
பதப்படுத்தி வைத்தாற்போல்
பழைய நட்பு மாறாமல்
அதே புன்னகைகளை
மீட்டுத் தரும் .

மாசங்களாய் வருஷங்களாய்
பழக்கத்தில் ஒன்றுசேர்ந்து
இருக்கிற இடைவெளியெலாம்
தேய்த்துத் தேய்த்து அழித்து வைத்தும்
காலம் பிரித்து வைக்கும் .
விடைபெறும் வினாடி !

செய்திகளிலும் சாலைகளிலும்
குற்றமற்ற மனிதர்களின்
சாவுகண்டு வாராமல்
உற்ற ஓர் உயிர்
விட்டுப்பிரியும் இரவில்
ஒரு சொட்டுக் கண்ணீர்
வலித்து வரும் .

காரணமே இல்லாமல்
கட்டுப்படுத்த முடியாமல்
சிரிப்பும் சந்தோஷங்களும்
தேர்ந்தெடுத்து ஒரு நாளில்
குளிப்பாட்டித் தலைதுவட்டும் .

.............................................................
.................................................

சொன்னதைச் சொன்னாலும்
உன்னதப் பொழுதுகள்
மின்னலின் கீற்றினைப் போல்
உண்மையைக் காட்டிச் செல்லும் .
நில்லாமல் தாண்டிச் செல்லும்
நகரப் பேருந்துகளை
துரத்தித் தாவித் தொற்றிப் பிடிப்பதுபோல்
இந்த மின்னல் பொழுதுகளில்
ஏறிப் பயணிக்க விழைகிறேன் .

எங்கள் நகரப் பேருந்துகளைவிட
ஒளி வேகமாய்ச் செல்கிறது !

ஜென் தத்துவங்கள் பேருண்மையின் ஸ்பரிசங்களை 'ஸார்ட்டோரி' என்றழைக்கிறது . 'ஸார்ட்டோரி' என்றால் அவர்கள் பாஷையில் மின்னல் என்று பொருள் .


Aug 27, 2009

Y-3 : The mystery of Language


Let me give two disclaimers before commencing this article.
1. In recent times , I am being more attracted to one specific word in English .... .The word is WHY . I dont know why . But as a consequence this Y series is born . Lots of interesting WHYs float in my mind which I find good to share . This is Y3 ........since the previous two articles on my blog are also WHYs. Soon some more to follow.

2. I do not intend to be a chauvinist or a blind linguistic terrorist . At certain areas in this article , I may pose some questions to other languages like Hindi . But not with the slightest intention to ridicule it or to make Tamil look superior. In fact I do not think Tamil is a superior language over Hindi AND VICE VERSA ! Or consider English also for the fact. No language is superior over another for me.

There was this young Tamil speaking fellow who never had the necessity (let aside curiosity) to learn any language apart from Tamil and English. He speaks Tamil at home , Tamil with his friends , English at work and where Tamil does not sell. His friends predominantly knew Tamil or English. Life was smooth.

And time takes him to a far away place where the majority of people speak Hindi and not Tamil - where people find it comfortable to speak to him in Hindi , knowing fully well that he does not understand Hindi ( :-) !) and perfectly aware that thers is a common language English that they both know. He tells them he does not know Hindi . Some kind souls offer to teach him Hindi . Some kinder souls switch to English when they speak to him. Some curious friendly souls offer to teach Hindi and demand to be taught Tamil in return .

These are questions for the other special souls . Is it a sin not to know Hindi in India ? .........
Ok I accept that knowing it helps. But is not knowing it a sin ?

Invariably they flood him with reasons to learn Hindi . ONE : My favourite one too ..... How come you not know our national language ? Shame on you Indian chap !
Should he be ashamed ? Honestly , how many of the Hindi bolo people learnt Hindi because it is the sacred prestrigious rich national language of ours ? ....... Come on , they learnt it because their mother taught them to say MAA and he learnt Tamil because his mother preferred AMMA.
Then has his mother committed a sin ?

TWO : LEARN HINDI BECAUSE IT IS ESSENTIAL TO SURVIVE IN INDIA . Well ..... I will say a Yes and a No. Yes because it is essential to survive in some parts of India . He can not negotiate with a Hindi-speaking auto rickshaw driver in Delhi . And No because the Hindi pundit can not negotiate with an auto driver in Tamil Nadu , or Kerala or Karnataka or Andhra . I am surprised when certain people think the people in southern states find no necessity to speak in Hindi. He was even asked by a curious passerby , "I cant imagine how you people converse in your place without knowing Hindi " ... Which looks funny ?

THREE : HOW CAN YOU NOT WATCH A BOLLYWOOD MOVIE . SHOULDN'T YOU LEARN HINDI ASAP ? The world is improving people . It is exactly for this fact that an invention named 'subtitle' came into place. ( I don't want to stress on this , but in recent time I find a lot of Tamil movies made with real sense of meaning and intellectual thirst compared to Bollywood ..... But it depends on my perception )

FOUR : BETTER LEARN HINDI BECAUSE WE WILL NOT HAVE THE MANNERS TO SPEAK IN ENGLISH ABOUT YOU WHEN YOU ARE AROUND SO THAT YOU DONT FEEL AWKWARD AND LOST. AND WHO KNOWS I MAY SWEAR AT YOU IN HINDI AND YOU SMILE AT ME ... NOT UNDERSTANDING A WORD OF IT. Thank you very much .. I will soon learn Hindi because I do not want to be a pushover . This question is not only specific to Hindi .... Dont the Tamilians do this in Tamil Nadu ? Dont the Kannadigas do this in Kannada ? Dont we all do it ? Let us all be ashamed when we do this and let us all learn the other languages because the others are also like us .

FIVE : FRIEND , I UNDERSTAND BUT WHAT TO DO . WE DO NOT HAVE A COMMON LANGUAGE . SO YOU LEARN MINE . Perfect friend ... we both have a task at hand. Let me learn yours and you learn mine. What is wrong , now we both know one additional language . Don't we ?

Please read disclaimer 2 again . Here I say the Tamil speaking guy only finds such questions funny and lives in perfect harmony with the friends from other places in the new place. He has nothing to complain about them . But the following are not funny issues !

To me a language is a means of communication . Sense of ownership and pride come second. Languages are like religions. Let everyone have their own and live in peace respecting the other's language. Unforunately languages are being exactly like religions today !!! Some Muslims hate Christians . Some Hindus hate Muslims. Some Kannadigas hate Tamils. Some Marathis hate Biharis . Why ?

Where does the superiority concept come in . I have seen a lot of Tamil scholars flaunt proudly that Tamil is the best language in the world . Every language has these bunch of clowns. What does the best language mean to a person who does not understand it ? Every language is equal and demands same respect . It has earned the respect because a group of people felt that it is the best for them to use . A language gains respect from a person who uses it . Not the other way round . A nice axiom in Tamil says , 'Not everyone who grows a beard can be Tagore and not everyone who has a mush become Bharathiyaar'. ??

What is the mother language then ? Shouldn't we proud of it ? Of course , we respect our mothers. But we don't doubt the sanctity of our fellow human being's mother . Do we ?
It is sad and disgusting to see the younger generation grow up not knowing the mother toungues . How many kids in Tamil Nadu can read and write in Tamil comfortably ( leave alone perfectly ) . Does'nt this question extend to every other language , in different proportions of seriousness ?

ENGLISH
Is it the reason ? Is that stupid foreign language the culprit ? Absolutely no !!! We are the culprits. We let our mother to rot . ( Lots of young mothers and fathers in Tamil Nadu are chiding their kids when they do not call them mummy or daddy . So they let themselves to rot ? ) Don't call English stupid . It is easy, flexible and has some advantages that other languages do not have . After all we use it for lots of purposes . So like it or not , learn it . Don't call English foreign .... The language, like Sonia Gandhi, has obtained citizenship here . The only problem is that many youngsters are not aware of the concept of dual citizenship and they throw away their native citizenships for English. I have read poems, novels and books in English. I understand them. I find the language as sweet and intellectually rich as Tamil (this comparison is just because Tamil is the only other language that I am proficient enough to read for pleasure ) .

Last question : An Indian speaker ( let him be Tamil, Hindi, Marathi, Bengali or what ever ) gets ridiculed by the educated society when he commits hopeless pronunciation mistakes on other foreign languages and English too . MTI ( Mother Toungue Influence ) is a sin !!! Perfectly reasonable . The educated community wants a foreign language to be spoken as it is by a native speaker . Sign of an educated man !!

But where do they go when Geoffrey Boycott utters Myoothaayaa Myooraleedharan or Haawbjan Singh. Can Sunny Gavaskar make fun of Geoffrey's pronunciation in the commentary box ?

How to use the 'மொழி'ன்னு ஒண்ணு இருக்குல்ல ?!

Aug 12, 2009

Why not an education system like this ?We all know that something is wrong with this education system, isn't it ? But we go on ..... Why ? We all know something is missing in our life and mostly not to be found in our chosen path . Why ? We were taught to draw fish-bone diagrams by the education system . Is the education system daring enough to allow us to draw a fish-bone diagram on the education system ? Why do we use convenient blindness to tackle these questions. These are subjective in nature ! - Cliche'd excuse. After all that is why these are called subjects, aren't they ?

"Education is what is left in the minds when what that has been learnt is forgotten ", said one of my most admired wise men. I believe in it. If this is education and if education is a process and if any process can be reviewed for its efficiency , what is the efficiency of the educating process . What measures do we use ? Exams test the learning. What tests the education.
Shall we say ,
education = retained learnings / total learnings
The education system believes in improving the denominator of this ratio , hoping that it increases the probability of retention (numerator). Thereby increasing the efficiency. But does it work that way ?

First things first . Is attendance and attentiveness the same ? If not , what is important for education ? The ideal argument is that both are important. But does an ideal engine exist ? Again the assumption is that a 90% attendance results in an increased chance of attentiveness just by giving you more chances to be attentive. One learns when he is attentive - some in class , some when listening to friends , some when poring over the books in solitude, some when sneaking a glimpse at the other person's answer sheet. I accept that attentiveness can not be measured for calculating CGPA. But can it be improved ?

Rational people respond to incentives. When the incentives of coming to a class are traditionally aligned to reach that 90% attendance mark first , what is the percentage of people who choose to 'pay' attention. Why not we re align the incentives ?
Let the attendance registers be kept aside for a week. Let the classes be scheduled as normally. Two rules - and these as the word rules mean are rules -
1. no one shall enter the class after five minutes of commencement and a person who enters during that five minute buffer loses his right to ask any question in the class.
2. If a class has 60 students on roll , the class shall provide seating arrangement for only 40. If the strength exceeds 40 , the 41st person and everyone from then on shall find their own seating resources - floor or literal laptops.

No one is obliged to attend the class for attendance. No one is obliged to attend the class to extract the pre-paid fees. The one who comes in comes in to learn and increase his denominator of education and thus the class shall have a bunch of people with a common denominator.
This system may fail badly. Not one person may turn up. But this system may succeed too . Some classes may have people scrambling for seats. Haven't we seen people fighting for a seat in an unreserved compartment in a train ? Reservation spoils the thrill and at times the purpose . A person may bunk classes for the first week . Negligence can be contagious. But so can be purpose . At some point, people may see the point. And like any plan designed as taught by the education system , why not this plan be tested for results in a pilot scale ? Which institution will take the challenge ?

During my engineering college days , I have felt at times that all it takes to compress the teachings of six months is two or three attentive days , scheduled at my own discretion and choosing my own teacher - may be myself or a friend or a friendly teacher ! If that is possible , why not compress the entire engineering course into eight weeks ? One semester per week .
Not exactly. After all every engineer-to-be is ready tp pay four years for the degree. Let us use the idle time efficiently. Have an exam after that first week . Name it the start-semester exam ! Do not set question papers. Give three hours and unlimited papers to each candidate and allow him to write what he knows . Ask him to prepare an index of answers in the first page. If the person can design questions for the answers , award more marks .
Then start the classes . Let us ue the idle time of five months and three weeks of the semester. Let classes be held as usual - with our attentiveness system and not attendance system - and end-semester exams be held with the traditional question papers and evaluation methods. Let the choice be greater . Let the student answer three out of seven or eight questions. Or if the choice is stringent, give him the book. And again , it shall be either the choice or the book and not both . RULE .
Implement weighted average of marks scored in start-sem and end-sem . My allotment of weights will be 0.6 for the start-sem and 0.4 for the end-sem.
The system may fail. No student may pass or no student may fail . Both are failures . The system may click . The start-sems can help the student decide what importance to be given to a concept and may help him in deciding to attend the classes. Why not try out in a pilot scale ? Which institution shall be willing ? At least to discuss.
We may argue that people may bunk classes thinking that they can learn from their stupidly sincere friend who will teach them on exam-eve. But how long ? There should at least be a few such friends. And the friends may not always be ready to be stupidly sincere. They may work a deal to share the stupidity . If that be, the purpose may be served. After all , people learn better when taught by learned peers and we need not search for evidences.
Will a person who comes out of such a system be employable or at the least educated ? Mass production may take some time to be achieved. But quality of production .......... Will not a person from this sytem be better equipped to tell you what a 'gene' is , than a biotech engineer raised by the old school. As with any other process , will not the efficiency increase as a result of the learning curve ?
When I was a child , I used to create a havoc when mother came to feed me. She chased me with the plate in hand , told me stories and showed me faces to make me eat. But I was adamant . Then one day , she left the plate in my eye-sight and proceeded to carry on with her usual chores. I expected her to beg to me to eat. I invited her to chase me. I cried to grab her attention. And then I took the plate myself and started to eat. Now , I eat with my hands , at my own will , three times a day !!!

Aug 8, 2009

ஜே ஜே : சில குறிப்புகள்


சமீபத்தில் நான் வாசித்த - நிறைய யோசித்த புத்தகம். சு.ரா வே எனக்கு இதன் மூலம் தான் அறிமுகம் ஆகிறார். அறிமுகம் ஆகையிலேயே புத்தகம் முழுக்க ஒரு எழுத்தாளனை அறிமுகம் செய்து வைக்கிறார் ..... அந்த கற்பனை எழுத்தாளன் சு.ரா தான் என்று அழுத்தமாகத் தோன்றுவதால் , தன்னைத்தானே அறிமுகப்படுத்தி ஒரு புத்தகத்தை முன்வைக்கும் வித்தியாசமான அறிமுகம்.

'ஜே ஜே' என்ற தமிழ்ப்படத்தில் ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் இப்புத்தகம் நடித்துள்ளது. ( படம் பார்க்காதோர் பார்க்கலாம் - நேரமும் டிவிடியும் கிடைத்தால்) இப்பொழுது புத்தகம் வாசித்த பிறகு இது அந்தப் படத்தில் ஆற்றியுள்ள வெட்டி வேலை புரியும் .

ஜோசஃப் ஜேம்ஸ் - சுருக்கமாக ஜே ஜே - மலையாளத்தில் எழுதுபவர். தன் உள்ளொளியைக் காண எழுத்தை ஆண்டவர் என்று சு ரா இவரை அறிமுகப்படுத்துகிறார். நிஜம் தான். எப்பொழுதும் மனதைப் பிறாண்டும் கேள்விகளுக்கு மருந்து போட்டுக் கொண்டே முடிந்து போன ஒரு வாழ்க்கை ஜே ஜேவுடையது.

இந்த உள்ளொளி, சுயம் இவையெல்லாம் தருக்க மேடைகளில் இருந்து தாவிக்குதித்து மனசின் ஆழம் காண ஆரம்பித்துவிட்டால் மூச்சுத் திணறத்தான் செய்கிறது. ஆனால் குழப்பங்கள் என்றும் ஓய்வதேயில்லை. நாம் பழக்கங்களில் வாழ்கிறோம். நல்லவை என்று சொல்லித்தரப்பட்டவையே நல்லவை . கேள்விகள் கேட்கச் சொல்லித்தரப்படவில்லை . ஏன் ?

சில 'நல்லவைகள்' சொல்லித்தரப்படும்போதே 'நல்லவனாய் இராதே' என்றும் அறிவுறுத்தப்படுகின்றன. உண்மையாக வாழ்வதும் அப்படியே. கண் முன்னே ஒருவன் ஒப்பனை பூணுகையில் அவன் முகத்தில் தண்ணீரை விட்டடிப்பவன் தீண்டத்தகாதவன். அவரவர்க்கும் அவரவரின் ஒப்பனைகள் . அவரவரின் முகமூடிகள். முகமூடிகள் அற்றவன் நிராயுதபாணியாகிறான். ஏன் ?

மேன்மையின் பாதைகள் பரிபூரணத்திற்கு இட்டுச் செல்வதாகச் சொல்லித்தரப்படுகிறது. பாதை தெரிகிறது. பயணிக்கிறோம். பயணத்தை முடித்த பரிபூரணன் ஒருவன் கூட இன்னும் முகம் காட்ட வில்லையே . ஏன் ?

பயணிப்போரால் பரிபூரணத்தை அடைய முடியாதென்றும் பிறகு சொல்லித்தரப்படுகிறது. ஏன் ?

WE HAVE LEARNT TO ADJUST . WHY ?

'ஏன்?'கள் எக்கச்சக்கம். உள்ளொளி, ஞானம் , சுயம் புரிதல், தேடல் , இவையெல்லாம் எத்தனை 'ஏன்?'களுக்கு விடை காண்கிறோம் அல்லது எத்தனை 'ஏன்?'களை எழுப்புகிறோம் என்பதைப் பொறுத்தவை .

................................................................................

சில பெண்களிடம் மட்டும் கண்ணைப் பார்த்துப் பேச முடியவில்லை . ஏன் ?
(இந்த ஏன்? மேலே பேசியதன் பாதிப்பல்ல . ஒரு முறை வாழ்வில் நடந்த சுவாரசியம் )

ஒரு முறை நண்பர்கள் இந்த ஏனுக்குத்தான் விடை காண முயன்றோம். கண்டவை : 1. குற்ற உணர்வு . 2. காதல்

பெண் என்றல்ல , யாராயிருப்பினும் குற்ற உணர்ச்சி கண்களைப் பார்க்க விடாது. விளக்கங்கள் தேவையில்லை. அனைவரும் குற்றம் புரிந்திருப்போம்.

காதல் கூட ஒரு வகை குற்ற உணர்வாக இருக்கும் போதுதான் இப்படிச் செய்கிறது. 'அடியே ! எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது . நான் உன்னைக் காதலிக்கிறேன். ஆனால் இன்னும் சொல்லாமல் சாகிறேனே' என்னும் போதுதான் காதலியின் கண்கள் நிலவின் பின்னால் ஒளிந்துகொள்ளும். கைகூடிய காதல் நான்கு கண்களுக்கும் ஒற்றைக் கனவினைத் தரவல்லது.

ஆக குத்துமதிப்பாக ஒரு ஏனுக்கு விடை கண்டோம்.
(அல்லது அவள் கண்கள் காணச் சகியாதபடிக்குக் கேவலமாக இருக்கலாம் )

:-)

Jul 17, 2009

வர்ணங்கள்


அந்திமம் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பையும் பொன்னையும் குழைத்துக் குழைத்து வானின் வண்ண விகிதங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அன்றைய சூரியனின் கடைசிக் கதிர்களை தூரத்து மலை முகடுகள் பிரதிபலிக்க , வரவிருக்கும் நிலவின் தண்மைக்கு மேகங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு காட்சியில் ஒரு ஓவியன் ஒரு கவிதையிடம் ஒரு கனவை விவரிக்க நேர்ந்தால் ................. ! ஓவியன் - சிவா . கவிதை - அவன் காதலி கவிதா ( என்ன பொருத்தமான பெயர் ) . கனவு - அதுதான் இந்தக் கதையே !

மொட்டை மாடியின் ரம்மியமான பின்னணியில் கண்களில் எதிர்பார்ப்பும் புன்னகையுமாக கவிதா உட்கார்ந்திருக்க , சிவா ஒரு பையிலிருந்து ஏழெட்டு புகைப்படங்களை எடுத்து அவள் முன் அடுக்குகிறான். தன் கனவை விவரிக்கப் போகிறேன் என்று அழைத்து வந்திருக்கிறான். அவனுடைய கனவுகள் சாதாரணமானவை அல்ல என்பதை அவள் நன்றாக அறிவாள்.

அவன் காட்டிய அத்தனையும் ஒரு பூங்காவின் படங்கள். நிறைய மரங்கள், மலர்கள், புல்வெளி, அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், ... ஒவ்வொரு படமும் ஒரு பொழுதில் எடுத்தது. விடியற்காலை முதல் நள்ளிரவு வரை. வெவ்வேறு நேரங்களில் ஒரே இடம் . சிவா அவளிடம் சொல்லத் தொடங்கினான் ....

" இந்தப் படமெல்லாம் எப்படியிருக்கு கவி ?"

"ம் நல்லாயிருக்கு . ஆனா நீ குடுத்த பில்டப்புக்கு எந்த சம்பந்தமும் தெரியலையே"
" பொறு கவி ! நான் சொன்னேன்ல என்னுடைய முதல் Gallery Expo - அதுக்காக ஒரு signature piece தயாரிச்சுட்டிருக்கேன். அறிமுகம் ஆகும்போதே ஒரு தனித்துவமான படைப்பைக் காட்டணும் இல்லையா ......... அதுக்காகத்தான் இது . "

"இது சரி ! ஆனா தனித்துவம் எங்கேர்ந்து கொண்டு வரப்போறே "

அவள் கேட்டதும் அந்தப் படங்களை வைத்துத் தான் படைக்கவிருக்கும் வண்ணக் கவிதையின் கருவை அவளிடம் சொன்னான் .

" இதுல கவனிச்சியா , ஒரே இடத்தை வெவ்வேறு நேரத்துல எடுத்திருக்கேன். இதுதான் அடிப்படை . ஒரே கேன்வாஸ்ல வெவ்வேறு லைட் ஷேடுகளை எடுத்துட்டு வரணும். ஒளியோட ஒரு நாள் பயணத்தைப் படமாக்கலாம்னு ஒரு சின்னப் பொறி. ஊதிப் பெருசாக்கிட்டிருக்கேன். போன ஒரு வாரமா பார்க்லயே தவமிருந்து எனக்கு வேணுங்கிற shade வரும்போது அதை அப்படியே freeze பண்ணி வைச்சதுதான் இதெல்லாம். "

"Interesting ! அப்பாகிட்ட சொன்னியா ?"
"தோ இன்னிக்கு சொல்லப்போறேன் . அவரே ஒரு சாதிச்சுக் காட்டின ஓவியர். நான் எடுத்துட்டிருக்கிற சவால் என்னன்னு புரிஞ்சுப்பாரு. ஆனா முதல்ல உங்கிட்டதான் சொல்லணும்னு தோணிச்சு "

" இப்படிலாம் சொன்னா அப்படியே உருகிடுவேன்னு நெனச்சுக்காதே சிவா . சொல்லப் போனா எனக்கு உன் மேல ஒரு சின்னக் கோவம் இருக்கு "

" அடிப் பாவி ! இது வேறயா ...... என்ன கோவம் உங்களுக்கு என் மேல "

" நானும், ஒரு ஓவியனைக் காதலிக்கிறோமே ....... அவனுடைய Expoல நம்மயும் வரைஞ்சு வைப்பான். மாடலா நிக்கணும். அவனோட கேன்வாஸ்ல நம்ம வரணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா ...உனக்கு ஏதாவது புரியுதா ? நானே வாயை விட்டுக் கேட்க வேண்டியிருக்கு "

" ஓ ! என்னே ஒரு ஆசை அருமைக் காதலியே ! நான் கூட யோசிச்சேன் . அப்புறம்தான் இது நம்மளோட அரங்கேற்றம் மாதிரி. ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஏதாவது ஏடாகூடமான முகத்தை வரைஞ்சு திருஷ்டிப்படம் மாதிரி ஆயிடக்கூடாதுன்னு விட்டுட்டேன். சொல்ல வேணாம்னு பாத்தேன். வாயை விட்டுக் கேட்டுட்டே .............."

அதன் பிறகு அவள் அவனை அடிக்க , அவன் அவளை அணைக்க , கனவுக் காட்சி டூயட் காட்சியாக மாறிப் போனது. சிவா அன்றிரவு வீட்டில் அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னான் .

'ஒளியின் ஒரு நாள்'

" பேரு நல்லாருக்கு தம்பி , நல்லா யோசிச்சிருக்கே . நெறய home-work பண்ணு. நல்லா வரும். நல்லா வருவே "

அவ்வளவு போதும். அப்பாவுக்குப் பிடித்திருக்கிறது. நிச்சயமாக ஒரு கனவுப் படைப்பை நனவாக்க முடியும். படைப்பில் இருக்கிற சந்தோஷம் வேறு எதில் வரும் ?

.....................................................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...


மதி

Jun 4, 2009

lessons from a different school


I was chatting with a friend recently about survival instinct and evolution - of course many would think these are weird topics to feature in texted conversations - and as matter of fact i cited an example from my swimming pool experience . That actually prompted me to dive deeper into this subject and here i go ...

first up , i learned to swim very recently and it was a worthy experience . in fact i learnt a lot of lessons, not only swimming, and relearnt a few lessons in the pool . the example that i quoted to my friend - survival instinct can be the best teacher in the world ! you dont learn the nuances unless you explore the depths here . one doesnt stretch his capabilities in a shallow pond ....... after all the ground is within reach under water. once i hit the depths i get forced to stretch myself to swim long and long. else i wont survive . eventually i survived and swam . heard do or die ?!

to be accepted , learning such things at 21 with a dark mush and a 5 8' height can be embarrassing , especially when you dont catch the tricks of the trade as fast as the young kids do in the pool. you ve to go through times when you buttress the wall and practice leg moves at 4 ft depth and a chap half your height just jumps into the water in front of you , gives you a funny look - or it may be my perception - and carries on with his supernatural deeds. it happens that at times you get caught clueless to the questions posed by a toddler. so size doesnt matter here.

in fact we would never have given a damn about our attendance percentages in the classes on familiar terrains. but here ... listen to this story. there is this 8 yr old boy and a 21 yr old boy (or man) who both start practising swimming the same day. everyday they evaluate themselves with the other as a reference and evolve at the same level each day. then one fine day this 21 yr old gets sleepy and skips the pool in the morning. the next day , to his surprise , the 8 yr old kid has - literally overnight - matured into a whiz kid at the pool . it is true that attendance regularity has so much of a value ..... one of my school teachers once said "sincerity has some marks " !

getting to some psychological perspectives , we find it difficult at times to stay light mentally. all the meditation tools and yogas teach you to be weightless in the mind. the swimming rigour demands you to loosen up and shed the weight of your physical existence from your mind. its just difficult for starters to imagine that they are not carrying the weight of themselves . relaxing mentally and developing an illusion that you are weightless can be taxing . it so happens that you may get stressed to your wit's end how to keep yourselves relaxed. but you learn it eventually .. and BOOM you suddenly experience losing your weight. staying light is the key and it doesnt just apply to the swimming pool !

the other thing is to stretch yourselves for positive results. initially 10 metres is a birth away to reach .. believe me . you ll understand the 'so near yet so far' thing perfectly once you face the music of water. you desperately try to reach the target and move your feet and arms as though your non-committal lady-love would accept to reciprocate your proposal if and only if you reach that 10 mtrs. and by ill fate you just dont move or the distance between you and her seems a universal constant. eventually you reach the 10 mtrs mark, pump fists , pat yourselves and then look at another person who is doing his fourth 25 mtr lap just inches away from you. you get tempted. now you place your lady-love at 15 mtr distance and try to win her love , then 20 mtr, 25 mtr and it goes on. wonder at what distance the other person i mentioned placed his wife ?! on hindsight there are also chances that he might place his wife at the staring point in stead of the target and stretch his distances to continuously monitor success .

then you meet another 25 yr old peson at the pool .. your junior ! just when you ve mastered free style, he practices to float and hold breath . you give him much valued advice not with the air of an expert or a superiority complex. but with an understanding of his feelings . after all to get tips from another whiz kid would be embarassing deep inside for him and who better can read his mind than you !you save him the agony and get his goodwill and a friendship blossoms as an aquatic flower .

in a matter of days you learn to swim and befriend an element of nature in a new dimension. after all you can be sure that the water won't pull your legs down in future. and the friendship between you and nature grows robustly , watered everytime you dive into the pool.

somebody once said learning is a never ending process !

Jun 2, 2009

நாணயத்துக்கு ரெண்டு பக்கம்


இரண்டு வருஷங்களுக்கு முன்
இப்படித்தான் ஒரு நாள்
இவன் காதல் 
கனிந்ததைக் கொண்டாடினோம் . 
இன்றைய தண்ணியடித்தல் 
சோகசாந்திக்காக !

காதலிக்கிறவன்
கவிஞனாய் வேறு
ஆகித் தொலைகிறானா ....
தோற்றவன் வார்த்தைகள் 
நிஜமாகவே கசக்கின்றன .

பைத்தியமாய்க் காதலித்தான்
பாவமாய் இருக்கிறது .

ஒன்றாய்க் கண்ட கனவுகளும்
மாற்றிக்கொண்ட பார்வைகளும்
சின்னச் சின்ன சண்டைகளும்
அதை
முடித்து வைத்த முத்தங்களும் ...
 ஒட்டுமொத்தமாய் மறக்க எண்ணி
ஒவ்வொன்றாய்க் கிளறி எடுக்கிறான் .

அவள் அழகென்று 
பிதற்றியவன்
தான் அழுக்கென்று
புலம்புகிறான் .

பெறப்போகும் பிள்ளைகட்குப்
பெயரெல்லாம் வைத்திருந்தார்களாம்
இனி அவை
எவர் பிள்ளைக்கோ ?

வாங்கித்தருபவன் . 
வருத்தப்படவும்
வாந்தியெடுக்கவும்
பூரண உரிமையுண்டு . 
ஆனாலும் 
இவ்வளவு சீக்கிரம் நாங்கள்
எதிர் பார்க்கவில்லை . 

தனியே அமர்ந்து
வோட்கா அருந்திக்கொண்டிருந்த
பெரியவர் ஒருவர்
அவனைப் பார்த்து 
எங்களருகே வந்தார் . 

"காதலா ?"

"ஆமா சார் "

எத்தனை ரவுண்டாச்சு  ?"

"நாலுதான் சார் "

"போதும் . தாங்காது . சின்னப் பையன் "

அருகிலேயே அமர்ந்து
அவனின் வாய் துடைத்து
வாரி அணைத்துக் கொண்டார் . 

"அழாதேடா ராஜா
அவ போனாப் போறா விடு
ஆம்பளை அழக் கூடாது "

இவன் குழந்தை போல
அவர் தோளில் சாய்ந்துகொண்டான் . 
அனுபவசாலி !

"காதல்
எல்லாருக்கும் ஒத்துக்காதுப்பா "

நீங்களும் காதலிச்சீங்களா சார் ?"

மெலிதாகப் புன்னகைத்தார் .

"முப்பத்தஞ்சு வருஷமாச்சு தம்பி .
அவள் போலொரு பொண்ணை
அதுக்கப்புறம் பார்க்கவேயில்லை . 

ஓரக்கண் பார்வையிலே
உயிர்முழுக்க நெறைஞ்சிருந்தா
சின்ன சிரிப்பு போதும்
உலகமே வெளிச்சமாகிடும். 
செல்லமாக் கோபப்பட்டு மொறைப்பாளே
...........................
இந்த வோட்காவெல்லாம் குப்பையப்பா !
உயிரே போனாலும் 
பிரிய மாட்டேன்னு சொன்னா "

"அப்புறம் என்ன சார் ஆச்சு ?"

"அந்தக் காலக் கதை இல்லையா
அவ அப்பன் ஆள் வெச்சு அடிச்சான்
அரிவாளைக் கூட ஓங்குனான்
நான் விட்டுக்குடுக்கலை "

"அப்புறம் ?"

"காயம்பட்ட இடமெல்லாம்
முத்தம் வெச்சு ஆத்துனா
அவ பொண்ணே இல்லையப்பா
தேவதை !
எத்தனையோ சண்டை
எத்தனையோ பிரச்சினை
எல்லாத்தையும் சமாளிச்சுட்டேன் . 
ஆனாலும் 
கொஞ்ச கொஞ்சமா
நான் அவளைத் தொலச்சுட்டேனப்பா "

சோகமாய்ச் சொல்லிவிட்டு
ஒரு வாய்
வோட்கா உறிஞ்சினார்
பெரியவர் .

என் நண்பன் 
கண்ணீரோடு கேட்டான்

"உங்களையும் 
ஏமாத்திட்டுப் போயிட்டாங்களா சார் ?"

"ப்ச் 
இல்லப்பா
நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்
அதுதான் என்னை 
ஏமாத்திருசு ! "

ஏறின போதையெல்லாம்
எகத்தாளமாய்ச் சிரிக்கத் தொடங்கியது 
எனக்குள்ளே . 

பாரிலே சிறந்த பல
காதல் கதைகளை
பாரிலேதான் கேட்க முடியும் ! 

May 31, 2009

வயிற்றுக்கு உணவில்லாத போழ்து ......

வயிற்றுக்கு வக்கற்ற 
ஒரு மாலைப் பொழுதில்
கவிஞர்கள் இருவர்
 கடை வீதியில் உலாவினர் . 
ஒரு சின்ன விவாதம் .

பிரபஞ்சத்தின் மென்மைகளில்
மேன்மை எது ?
தாயின் ஸ்பரிசமா ?
இயற்கையின் தொடுதலா ?

ஒருவன் சொன்னான்
காணும் இயற்கை 
ஆக்கும் அழிக்கும்
அன்னையவள் அறிந்ததெலாம்
அன்பன்றி வேறில்லை 
என்று .

அடுத்தவன்
பிரபஞ்சப் பெருவெளியில்
படைக்கப்பட்ட அனைத்திற்கும்
அம்மா ஒருத்திதானே
இயற்கையும் 
தாய்தானே 
என்றான் . 

இவனோ
பெற்ற பிள்ளை
பிஞ்சுப் பாதம் தடவி
மூச்சோடு நுகர்ந்து
முகம் காட்டிச் சிரிக்கும்
தாயின் அன்பே
தனியான மென்மை
என்றான் . 

அதற்கு அவன்
பெய்து சென்ற பெருமழை
விட்டுச் செல்லும் ஒருதுளி
இலையோடு கூடி
இடையிடை ஓடி
காதோடு சொல்லும்
கடவுளின் உண்மை
என்றான் . 

முடிவான மென்மை மட்டும்
மட்டுப்படவேயில்லை .
கவிஞன் பேச்சுக்குக்
கடிவாளமேது ?

ரோட்டோரம் 
இட்லி விற்கும் கிழவி
அவர்களிருவரையும் 
கூப்பிட்டு விசாரித்து
இரண்டு இட்லிகளும்
தேங்காய் சட்னியும்
இலையில் வைத்துக் கொடுத்தாள் . 

தெளிவு பெற்ற இருவரும்
மென்மைகளில் மேலானது
இரண்டு மாவு உருண்டைகளே
என்று கை நனைத்தனர் .May 25, 2009

காதல் காகிதம் - A gift to remember (original)


காதலி
நான் உனக்கு 
ஒரு வெள்ளைக் காகிதத்தைப்
பரிசளிப்பேன் .
எதுவும் எழுதாத
வெள்ளைக் காகிதம் .
இது என்னவென்று
நீ கேட்பாய் . 

என் காதலையெல்லாம்
வார்த்தொரு கவிதை செய்து
உனக்குத் தரலாம் என்றுதான்
காகிதத்தோடு உட்கார்ந்தேன் . 

உன் சீனிச்சிரிப்பும்
சப்பை மூக்கும்
சிங்கார விழிகளும்
ஓவியமாய்
என் கண் முன்னே விரிந்தன .

நூறு நூறு வார்த்தைகள்
ஒரு கவிதைக்கான தேடலில்
நிலைகொள்ளாமல் அலைந்து
மின்னி மின்னி மறைந்தன .

எக்கச்சக்கமாய் 
வித்தைகள் புரிந்ததடி
இந்தக் காகிதம் .
உன் கண்களைப் போலவே . 

நான் 
கண்டு ரசித்தே
இயற்கையை வியந்தேன் , 
உன் கண்களைக் காண்பது போலவே !

கடைசியில்
ஒன்றையும் எழுதாமலேயே
இந்தக் காகிதத்தைக் 
காதலால் நிரப்பிவிட்டேன்
இதற்கு மேல் இதில்
ஒரு புள்ளி வைக்கக் கூட
இடமில்லை
என்று நான் சொல்வேன் . 

நீ சிரிப்பாய்
கொள்ளை அழகாய்ச் சிரிப்பாய்
ம்
வேறென்ன செய்திருக்கிறாய்
இதுவரை !

May 20, 2009

A gift to rememberO my love dear !
I would gift you
A plain white parchment .
As plain as infant smile !
Not a speck of an ink-spoil !

You will look into my eyes . 
Inquiring . 
Curious.
I would say thus ,

This paper was meant for a poem
On the essence of my love
quite a concentrated one . 
I plunged into thought 
What do I write ?

Your sugar smiles 
And sunshine eyes
And the short flat nose
Unveiled as art in my mind .

Words ... words 
and more of them
in search of a poem
flashed ; went ;
And went and flashed !

This paper played many a trick
Leaving me awe-struck !
Is it the love ?
Or is it you , my love ?
I could only wonder . 

The parchment seemed to possess
the absolute essence. 
Not a spot left for a dot. 
What more do I write ?
Its filled . 

You will listen
You will smile
Your dream sugarsmile
As sweet as infant smile . 

O come on dear
what else have you done 
so far ?:-)p.s. this was originally penned in tamil and translated. 

May 12, 2009

நரபிரம்மம்இடம் : சிசுப் பட்டறை , பிரம்மலோகம்
நேரம் : 23-08-1994   காலை 09:28


காணுமிடமெங்கும் தகதகவென்று கனன்று கொண்டிருக்கும் ஜோதி . மையமாக ஒரு சிறு பலகையின் மேல் ஆழ்ந்த யோசனையில் பிரம்மன் வீற்றிருக்கிறான் . எண்ணிக்கையிலடங்கா வருடங்கள் . ஒரே வேலை . ஜீவ மூட்டைகளைப் படைத்துப் படைத்துப் பையிலடைத்து அனுப்பும் வேலை. அவ்வப்போது சில சுவாரசியமான படைப்புகள் - அவதாரங்கள் , மேதைகள் , கொடுங்கோலர்கள் , பேரழகிகள் ! மற்றபடி இயந்திரகதி தான் . அதிலும் சமீப காலமாக
பட்டறையில் வேலை நேரம் கூடிக் கொண்டே போகிறது .

கிரீடத்தைக் கழற்றி வைத்து விட்டு உச்சந்தலையைச் சொறிந்து கொண்டே முனகுகிறான் , " இப்படிச் செய்தால் எப்படி ?"

...............................................................................................

இடம் : முத்து லட்சுமி மருத்துவமனை , அம்பாசமுத்திரம்
நேரம் : 17-05-1995   மாலை : 06:32

குறித்த தேதிக்குப் பல நாட்கள் முன்னதாகவே அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட ஆரம்பித்துவிட்டாள் . வீட்டவர்க்கெல்லாம் ஒரே பரபரப்பு . முத்துலட்சுமி அம்மாவுக்கு இது மற்றுமொரு பிரசவ கேஸ் அவ்வளவுதான் .

ஆண் குழந்தை . அவசரக்காரன். அதிலும் தாய் வயிற்றில் கத்தி வைத்தல்தான் வெளி வருவேன் என்றொரு அடம் வேறு . சிசேரியன் . 2.94 கிலோ . இரண்டு நாள் இன்குபேட்டர் வாசம் பரிந்துரைக்கப் பட்டது .

கர்ப்பப்பை வெப்பத்துக்கும் இன்குபேட்டர் வெப்பத்துக்கும் வித்தியாசம் இருந்தது. தீபத்துக்கும் தீக்குச்சிக்கும் உள்ள வித்தியாசம் !
 அவன் அவதரித்து விட்டான் .


.....................................................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...


மதி

Apr 27, 2009

புறத்திணை புதிது


மத்தியானப் பாடவேளை
பிரபஞ்சத்தின் தோற்றம்
வகுப்பில் நகர்ந்து கொண்டிருக்கும்
கருத்தாகக் கவனிக்க வேண்டும் என்று
ஈரத்துணியால்
கண்ணைத் துடைத்துவிட்டு நிமிர்வது
வெட்சி 


பிரபஞ்சம் 
தோன்றினால் என்ன
தொலைந்து போனால் என்ன
பாழாய்ப் போன உறக்கம் அறியுமா
படைப்பின் ரகசியம் ?
சற்று முன்னர்தான்
பிரித்து மேய்ந்திட்ட
பல வீட்டு சமையலும்
கரத்தோடு கரம் கோத்து
கண்ணைச் சுருட்டும் அது
கரந்தை


வகுப்பு போனால் போகட்டும்
வீடு இல்லையா
சொந்தமாக மூளை இல்லையா
அந்தக் கல்விப் புயல்
அன்றிரவே கரையைக் கடக்கும் என
அந்த அப்பாவிப் பயல்
வைராக்கியமாக முடிவெடுப்பான்
வஞ்சி


சிந்தனை வா வா என்னும்
புத்தகம் போ போ என்னும்
சென்னையை நோக்கி வரும் புயல்
கடைசி நேரத்தில்
ஆந்திராவைத் தாக்கிச் செல்வது போல
புயலெல்லாம் வெறும்
புஸ்வாணமாய்ப் போகும்
அது காஞ்சி


தேர்வுக்கு முதல் நாள்
தேறும் அளவாவது
தேற்ற வேண்டுமே 
புத்தகம்
பூட்டிய அறை
புத்துணர்ச்சிக்குத் தேனீர்
படை திரட்டிப் போய்
பாடத்தை முற்றுகை இடுவது
உழிஞை


ஒன்றுமே தெரியாதே என்று
பயம் பயமாய் வரும்
புத்தகத்தைத் திறந்தால் எல்லாமே
புதுசு புதுசாய்த் தெரியும்
வெறுத்துப் போய்
புத்தகத்தை மூடிவிட்டால்
பயமெல்லாம் பறந்து போய் விடும்
நொந்து போய்த் தூங்கப் போவது
நொச்சி ஆகும்


தேர்வறை
அபாயச்சங்கு
போர்முரசு
ச்சே
அது பரீட்சை மணி
போர் துவங்கும்
ஒரு காகிதத்துக்கு எதிராக
ஒரு தரப்பு மட்டும்
பலத்த சேதங்கள் அடையும்
அங்கே
அதிர்ந்து போய்ப் பொருவது
தும்பை


வசவு வந்து சேருமோ
வடக்கிருக்க நேருமோ
இல்லை 
வெற்றி விகிதம் தேறுமோ
கடித்து கடித்து
நகமெல்லாம் 
காணாமல் போனபின்
கணிணி சொல்லும்
வாகை சூடிவிட்டதாய்


தவப்புதல்வன் தன்
அருமை பெருமைகளையெல்லாம்
ஒவ்வொன்றாய் அடுக்கி
அலசி ஆராய்ந்து
அந்த வீரத்தாய்
அங்கலாய்ப்பாள் அது
பாடாண்


இவை எதிலும் சேராத
பொதுவான செய்திகள்
பிரார்த்தனை பயம்
அரட்டை ஆட்டம்
ஏச்சு பேச்சு
இதர இதர
எல்லாம் 
பொதுவியல் கீழ் பொருந்துவனவாம்


கைக்கிளை பெருந்திணை எல்லாம்
பதினெட்டு தாண்டியதும்
தானாகச் சேர்ந்து கொள்ளும்


தோண்டித் துருவிப் பார்த்தால்
ஒரு வித்தியாசம் பிடிபடும்
இங்கே 
திணைக்கு ஒரு பூ இல்லை
மொத்தமாக ஒன்றே ஒன்றுதான்
காதில் !

Apr 24, 2009

THE ALCHEMIST- பாலோ சீலோ என்னுள் ஏற்படுத்தின தாக்கங்கள்


சில இரவுகளுக்கு முன் நான் எழுதிய கவிதை ......

உறங்காமலும் விழிக்காமலும்
இருக்கின்ற பொழுதுகளில்தான்
மெய் தரிசனம்
சில மின்னல் கீற்றுகளாய்
வந்து போகிறது

அந்த இரவின் அனுபவங்கள் - நான் மெய் தரிசனம் என்று கூறியவை - தந்த உணர்வு நன்றாக நினைவிருக்கிறது. சிற்சில ஒளிக் கீற்றுகளாய் உண்மைகளும் புரிதல்களும் வந்து அறிமுகமாகி விட்டுப் போகும். சில பேருண்மைகள் கூட ..........

அந்த உணர்வு எனக்குப் பரிச்சயமானதாகவே இருக்கிறது. ஆனால் எப்போதும் உடனிருப்பதில்லை ! பல சமயங்களில் எழுதும் போது உணர்வேன் . ஒரு சிலவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் தெரியும் - இது நான் எழுதியதல்ல , 'நான்' எழுதியதென்று ! இந்த மேற்கோள்களுக்குள் வீற்றிருக்கும் நான் ..... ஒரு தனிப்பட்ட அடையாள நிலை. கிட்டத்தட்ட அந்த மெய் தரிசனத்திலிருக்கும் புரிதலின் நிலை .

என்னால் பல தருணங்களில் எனக்கும் 'எனக்கும்' உள்ள வித்தியாசத்தை உணர முடிந்துள்ளது . 'நானாக' இருக்கையில் என் ஆன்மாவின் குரலைக் கேட்டிருக்கிறேன். அதுதான் ஆன்மாவா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாய் அது எனக்குள் இருக்கும் ஜீவனின் குரல் . இதை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கிறார்கள் . நான் 'நான்' என்கிறேன் .

அந்தக் குரலை இதயத்தின் குரல் என்று கூறும் ஒரு புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். பாவ்லோ சீலோ என்ற பிரேசிலியரின் THE ALCHEMIST என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். ஒரு வாலிபன் தான் கண்ட கனவைத் தேடிச் செல்வதும், செல்லும் வழியில் கற்றுக் கொள்பவையும் , உணர்ந்து கொள்பவையும் அடங்கிய நாவல் . Soul of the world , Universal language , The voice of the heart என்ற மூன்று விஷயங்கள் . ஒன்று போலவே தோன்றினாலும் ஒன்றல்ல ..... ஆனால் மூன்றும் ஒரு ஆதாரத்திலிருந்து கிளைத்தவை .


Soul of the world - உலகின் ஆன்மா என்று வைத்துக் கொள்வோம் ! அத்தனை உயிரிலும் ஊடாடிக் கலந்துள்ள ஆன்மா . உணர்ந்து முயற்சிக்கும் உயிர்களால் அடையாளம் காணப் படுகிறது . உயிர்கள் என்று வரைமுறை தாண்டி இயற்கை , காற்று . வெயில் , மணல் , தங்கம் , தகரம் , வார்த்தை , எண்ணம் என்று அத்தனைக்கும் உள்ள தனியான ஆன்மாக்களும் சங்கமிக்கும் பெருவெளி , இந்த உலகின் ஆன்மா !

இந்த அத்தனை ஆன்மாக்களுக்கும் விளங்கக்கூடிய பொதுவான உலகமொழி - Universal language ! வார்த்தைகள் தேவையில்லை ! வடிவங்கள் தேவையில்லை ! ஆன்மாக்களின் மொழி .... மனிதன் ஒரு அமைப்பை வடிவமைத்து அதற்கு மொழி எனப் பெயரிட்டதற்கு முன்பிருந்தே அறிந்த ஆதார மொழி ! பசியும் , காதலும் , அழுகையும் , கோபமும் அடிக்கடி நம்மை இந்த மொழிக்குப் பழக்கப்படுத்தும் விஷயங்கள். மொழி ஞானம் வளர வளர மழையும் நிலவும் இரவும் வானமும் பேசசுத்துணையாய் வருகின்றன !


அதில் நான் மேற்கோளிட்டுக் காட்டும் 'என்' குரல் - The voice of the heart - பழகிய மனங்களுக்குக் கேட்கிறது. நம்மை நமக்குக் காட்டும் , நம் கனவுகளைக் காட்டி அதை நோக்கி வழி நடத்தும் குரல் இந்தக் குரல் . எனக்குள் ஒன்றல்ல ...... இரண்டு குரல்கள் இருப்பதாக உணர்கிறேன் . மேலோட்டமான ஒரு குரல் வாயாடியாக அடிக்கடி பேசிக் கொண்டு , கேள்வி கேட்டுக்கொண்டு , பதில் சொல்லிக்கொண்டு என் இன்னொரு குரலாக இருக்கிறது . அதற்கும் கீழே உள்ளத்தின் ஆழத்தில் உலகின் ஆன்மா ஊடுருவும் இடத்தில் 'என்' குரல் இருக்கிறது . அது அடிக்கடி பேசுவதில்லை ...... அல்லது என் காதுபடப் பேசுவதில்லை ........ அல்லது நான் காது கொடுப்பதில்லை . சமயங்களுக்கு ஏற்ப இவற்றில் ஏதோ ஒரு காரணம் .


ஆனால் நானும் 'என்' குரலும் பரிமாறிக்கொள்ளும் உரையாடல்களை நான் அறிவேன் . அவை மெய் தரிசன சந்தர்ப்பங்கள் !

Life is never the same again after you read certain books ! எனக்குப் புதுமைப்பித்தன் அப்படி வாய்த்தது . சீலோவும் அங்கு வந்து விட்டார் . இந்த விஷயங்களையெல்லாம் நான் இப்போதுதான் கற்றுக்கொள்கிறேன் என்றில்லை ...... ஏற்கெனவே , பல தருணங்களில் உணர்ந்த விஷயங்களை ' உனக்கு இவை தெரியுமே' என்று அடையாளம் காட்டி என்னை மீண்டும் மெய் தரிசனத்திற்கு இட்டுச் சென்ற புத்தகம் இது ... அதுவும் தெளிவான விழிப்பு நிலையிலேயே !

உனக்கு ஒன்று உண்மையாக வேண்டுமானால் , இந்த மொத்த அண்டவெளியும் உனக்காக இரகசியமாய் ஒன்று கூடி உதவி செய்யும் என்று சீலோ சொல்கிறார் .

It is the possibility of having dreams come true that makes life interesting !

Mar 18, 2009

சாசுவதம்


ஆதி முதல் துளி
கீழிறங்கி வருகையில்
அமிர்தமா
அமிலமா என்றறிய
கை நீட்டினோம் .
பின் குகை செய்தோம்
உடை செய்தோம்
குடை செய்தோம்
நம்
விரல்களுக்கு மட்டும்
சளி பிடிப்பதில்லை என்று
கண்டுகொண்டோம்.
மழை பொழிகிறது
நம் பிள்ளைகள்
உள்ளங்கையில் மழை பிடிக்கின்றனர் .

Mar 17, 2009

என் நகல்


( ஒரு மழை நாள் மாலையில்
கடவுள்
என் கதவு தட்டி
காபி காரமெல்லாம் தின்றுவிட்டு
புதிதாய்ப் பிறப்பதற்கு
உமக்கு வாய்ப்பளித்தோம்
எப்படி வசதியென்று
எழுதிக் கொடும் என்றார் .
அவரிடம் பூர்த்தி செய்து கொடுத்த
விண்ணப்பத்தின் நகல் இதோ )

மழலை :-

குட்டியாக இருக்கையில்
கழுதை கூடக் கவிதைதான் !
பிறந்திடுகிறேன்
போதும் எனக்கு

வீட்டார் :-

கதை சொல்லித்
தூங்க வைக்கும்
அப்பா
நான் சொல்லிக்
கதை கேட்கும்
அம்மா
நான்கு வயது வித்தியாசத்தில்
ஒரு தங்கை


பிள்ளைப் பிராயம் :-

1. சின்னதாய்த் தப்புப் பண்ணி
அப்பாவிடம் அடி வாங்கி
தற்காலிகத் தஞ்சத்திற்கு
சேலையைத் தேடி ஓடி
தனியாகப் பிறகு
அம்மாவிடம் ஏச்சு வாங்க வேண்டும் .
2. வெளியிடம்
வீதிகளுக்குச் சென்றால்
தங்கையின் கைபிடித்து
உலகம் சொல்லித் தர வேண்டும்
3. மேகங்களுக்குச் சளியென்று
விசாரிக்கப் போய் நனைந்து
ஜன்னி வந்து பிழைக்க வேண்டும்

வாலிபம் :-

1. பாதைகள்
ஒவ்வொன்றாய்க் கொண்டாலும்
பார்வை
ஒன்றே கொண்ட
தோழர்கள் தோள் வேண்டும்
2. வாழும் சமூகம்
வாலிபரை நம்ப வேண்டும்
3. தேர்ந்திட்ட பாதையில்
பல தூரம் பயணித்தாலும்
அடுத்த மைலை
எட்டிப்பார்க்க ஆவல் வேண்டும்
4. திரும்பிப் பார்க்கச் சொல்லும்
திவ்விய மங்கையர்
தினம் ஒருமுறையாவது
பார்வையில் பட வேண்டும்
முடிந்தால் அவ்ர்கள்
பார்வையும் பட வேண்டும்


காதல் :-

குறைந்த பட்சம்
மூன்றாவது வேண்டும்
கண் பார்த்துச் சொல்லிட
கவிதைகள் வேண்டும்
கண் மூடிச் சிரித்திட
கனவுகள் வேண்டும்
கைகோத்து நடந்திட
கடற்கரை வேண்டும்
பல்சரில் கூட்டிச் செல்ல
பெட்ரோலுக்குக் காசு வேண்டும்
உள்துறை அமைச்சகத்தில்
தங்கையின் துணை வேண்டும்

பெண்வாசம் :-

தோழியாய் ஒரு தாயும்
தாயாய் ஒரு தோழியும்
குழந்தையாய் ஒரு காதலியும்
அவள் ஜாடையில் ஒரு
பெண் குழந்தையும்
பெற்றுவிட்டால் வாழ்வினில்
பெண்சொந்தம்
பரிபூரணம்

குடும்பம் :-

குழந்தையில் நான்
கொண்ட குடும்பம்
என் குழந்தைகளும் அடையட்டும்
என் தந்தை போலவே
ஒரு 'நான்' வேண்டும்
( பி.கு ) குழந்தைகளுக்குச் சொல்ல
கதைப் பஞ்சம் வரவே கூடாது

மரணம் :-
உம் விருப்பம் !

Mar 14, 2009

கடவுள்


கடவுள் யார் ?
கடவுள் என்ன ?
கடவுள் எது ?
மனிதனைப் படைத்த தாயா ?
மனிதன் உயிர் கொடுத்த சேயா ?
...............................
குழப்பம் வேண்டாம்.

உண்டென்று சொல்வோர்
உறுதியாகச் சொல்லுங்கள்
இல்லையென்போர்
இம்மியளவும் பிசக வேண்டாம் .

வடிவங்கள் வேண்டுமா ?
வைத்துக் கொள்ளுங்கள்.
வெறும் பொய்தானா ?
விட்டுத் தள்ளுங்கள் .
மாலைகள் தேவையா ?
மனமாரச் சாத்துங்கள் .
மாய வலையா ?
கிழித்து வீசுங்கள் .
.........................

நம்பிக்கை நம் பிறப்புரிமை ,
சந்தேகமில்லை
நாம் தனித்தனியாகத் தான்
பிறந்தோம் என்பதும்
நினைவிருக்கட்டும் .

பூசையறையோ குப்பைத் தொட்டியோ
கடவுளை உங்கள் வீட்டிலேயே
வைத்துக் கொள்ளுங்கள் .
..............................

கள்ளமில்லாக் குழந்தையின்
கவி மழலைப் பேச்சு ,
சோதிதனில் கலந்துவிட்டால்
சொப்பனங்கள் தோற்கடிக்கும் நட்புலகம் ,
அவ்வப்பொழுது அசைத்துப் பார்க்கும்
கைகூடா எண்ணங்கள் ,
வாடிக்கைக் கவலைகளின்
வடிகாலாய் இயற்கை ,
பிறவிப் பொருளுணர்த்தும்
ஒரு பாசப் பார்வை ,
கொடுத்துப் பெறும் அன்பு
.........
வாழ்க்கை வாழ்வதற்கே !
வாதங்கள் வீண் வேலை !
..........................

நிலையான பரம்பொருள்
அமைதி
......
கடவுள் வடிவானாலும் சரி
கடவுளே பொய்யென்றாலும் சரி !
....................................

குழம்ப வேண்டாம்
குழப்ப வேண்டாம்
பூசையறையோ
குப்பைத் தொட்டியோ
கடவுள் உங்கள்
வீட்டோடேயே இருக்கட்டும் .

Mar 12, 2009

கொஞ்சம் குட்டி விஷயங்கள் !!

மழை
அவசர அவசரமாய்
நனைந்தோடி வந்து
தலை உதறி நிமிர்ந்ததும்
கண் சிமிட்டி மறைந்தது
எனக்கெனப் பெய்த மழை !


வாலிபம் (அ) தேர்வறை


விடைகளைக் கையில் வைத்துக் கொண்டு
வினாக்களைத் தேடிப் பிடிக்கும்
வேடிக்கை விளையாட்டு !
முரண்வாழ்க்கை
சின்னச் சின்ன முரண்பாடுகளைக்
கவிதையாக்குகிறது
பெரிய முரன்பாடுகளைக்
கலாச்சாரம் ஆக்கி விடுகிறது !

திசை


என்றாவது ஒரு நாள்
திசை மாறிப் போனவன்தான்
உலகை முழுதுமறிகிறான் !
மெய்


உறங்காமலும்
விழிக்காமலும் இருந்திடும்
பொழுதுகளில்
மெய் தரிசனம்
சில மின்னல் கீற்றுகளாய்
வந்து போகிறது !